அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, August 27, 2011

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!
பசித்திருந்து,தனித்திருந்து,விழித்திருந்து வணக்கம்
செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்
மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே
நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,
இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய
அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய
அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்
இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த
சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும்,
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின்
சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்…..
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்

Sunday, August 21, 2011

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி
அண்ணலார் (ஸல்) அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும்,

தூய நிய்யத்துடனும், ‘லைலத்துல் கத்ர்’’ எனும் இரவில்
விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின்
சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(1)ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை, அல்ஹாக்கு
முத்தகாதுரு 1 முறை, குல்ஹுவல்லாஹு 3 முறை
ஓதி தொழ வேண்டும் இதன் பலன்; மரண வேதனை 
இலேசாக்கப்படும்மண்ணரை வேதனை குறைக்கப்படும்.

(2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
1 முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ
 வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்
 போன்று பாவ மற்றவராகிறார்.

(3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
3 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும்.
இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3-ம் கலிமா ஒரு முறை
ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
(4) இரண்டு இரண்டாக  12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை
இன்னா அன்ஜல்னா 3 முறை, குல்ஹுவல்லாஹு 10 முறை
ஓதி தொழ வேண்டும்.

(5) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை குல்ஹுவல்லாஹு 7 முறை
தொழுகை முடிந்த பின் அஸ்தஃபிருல்லாஹ வஅத்தூபு இலைஹி
 70 முறை ஓத வேண்டும்.

(6) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை,இன்னா அன்ஜல்னா
1 முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்.
இவ்விரவின் நன்மை கிட்டுவதுடன் நோன்புகள்
ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

(7) லைலத்துல் கத்ர் இரவின் தொழுகையில் குறைந்தது
2 நடுநிலை 100, அதிகம் 1000 ரக்கஅத்துக்கள் தொழவேண்டும்.

(8) தஸ்பீஹ் நபில் தொழுகை ரக்கஅத் 4 இதற்கு
அபரிமிதமான நன்மைகள் உண்டு.

(9) இஷா தொழுகைக்குப்பின் இன்னா அன்ஜல்னா
சூராவை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவனை
அனைத்துச் சோதனைகளை விட்டும் காப்பாற்றுகிறான்
அவனுக்காக 70,000 மலக்குகள் துஆச்செய்கிறார்கள்உறங்காது தொழுவோம் உயர்வை பெறுவோம்,
நாயனை தொழுவோம், நன்மை பெறுவோம்.

தொகுத்து வழங்கியவர்கள்.

அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும் 
S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் 
ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
(முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை )

வெளியீடு
மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

Saturday, August 6, 2011

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும்.மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும்.மேலும் கேடு கெட்ட கூட்டங்கள் ஊர் ஊராக வசூல் செய்வார்கள்  அவர்களுக்கு பத்து காசு கூட கொடுக்கக்கூடாது 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 லைலத்துல் கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும். அல்ஹம்து லில்லாஹ் குறைந்த பட்சம் மேல் கூறப்பட்டுள்ள அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, நன்மைகளை, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக்கூறியும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் வாழ்த்தி, அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள்.  
   குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு www.jamalinet.com மற்றும்
www.tmislam.com ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண விளக்கம் பெறவும்
வஸ்ஸலாம்..
 
 
 
 
 
சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினாறாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்


அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நிகழும் ஹிஜ்ரி 1432-ஆம் ஆண்டு  ஷஅபான்
பிறை 19-  (21-07-2011)  வியாழன் மாலை,
வெள்ளி இரவு  7-00 மணியளவில் மஃரிபு
தொழுகைக்குப்  பிறகுமுஹம்மதியா  மேல்
நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 16- வது
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் உலமாப்  பெருமக்கள்
சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை
அல்ஹாஜ் M.ஷாகுல் ஹமீது கனி.Bsc அவர்கள்.
தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா
அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள்.
தலைவர்முஹம்மதியா  பள்ளிகள்
அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள்.
புரவலர்முஹம்மதியா பள்ளிகள்
ஜனாப் ஆரிப்கான் அவர்கள்
புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.
சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது
இபுராஹீம் அவர்கள்.
அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S
அப்பாஸ் அவர்கள். தாளாலர்
முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி.
வரவேற்புரை-
ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள்.
டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
ஸனது வழங்கி சிறப்புரை
மௌலானா மௌலவி M.K.M.கதீப்  
ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில்
மன்பயீ அவர்கள்
பேராசிரியர்- அஜ்ஹாரிய்யா
அரபுக் கல்லூரி தொண்டி.
கௌரவ ஆலோசகர்-ஃபாத்திமா
பீவி மகளிர் அரபுக்கல்லூரி.
வாழ்த்துரை-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம், சித்தார் கோட்டை.
சிறபுப்பேருரை-
மௌலானா மௌலவி அல்ஹாஜ்
M.அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி  அவர்கள்.
செயலாளர்- இராமநாதபுர மாவட்ட
ஜமாஅத்துல் உலமா சபை.
இமாம் கிழக்குப் பள்ளிவாசல்- நம்புதாளை
பெண்கள் நிகழ்ச்சிகள்
இடம்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
சித்தார்கோட்டை
காலம்- (21-07-2011) -2-00 மணியளவில் நடைபெற்றது.
தலைமை மற்றும் பரிசளிப்பு 
ஆலிமா S.நூருல் ஃபர்ஹானா ஃபாத்திமிய்யா அவர்கள்.
முதல்வர்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
கிராஅத்- A.குர்ரத்துல்ஃபாஸீலா அவர்கள்.
வரவேற்பு- N.லாமியா பேகம் அவர்கள்.
சிறப்புரை
ஆலிமா  K.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
ஆலிமா J.நூருல் நஸ்ரத் ஃபாத்திமிய்யா அவர்கள். வாழூர்
ஆலிமா A.பரிதாபானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
நன்றியுரை- A.நிலோபர் நிஸா அவர்கள்.
2011-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகள்.
ஆலிமா A.ஹாஜரா பேகம் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.M.அயூப் கனி, தேவிபட்டிணம்.
ஆலிமா N.லாமியா பேகம் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.J.நாசர் அலி, நரிப்பையூர்.
ஆலிமா A.நிலோபர் நிஸா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.A.அயூப்கான், விசவனூர்.
ஆலிமா A.குர்ரத்துல் ஃபாஸிலா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.A.அக்பர் அலி, சாலைக்கிராமம்.
ஆலிமா S.ரோஸியா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
W/o.S.செய்யது முஹம்மது, சித்தார் கோட்டை.
ஆலிமா M.ஜரின் ரிஷாயா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.H.முஹம்மது கலீல் ரஹ்மான்,சித்தார் கோட்டை.
ஆலிமா S.சீரின் சிபாயா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.N.ஷாஹுல் ஹமீது, வாழூர்.
இவ்வருடம் பட்டம் பெற்ற இளம் ஆலிமாக்களின்
தீன் பணி சிறக்க, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப்
பேரவை வாழூர் கிளையினர்  அகமுவந்து
வாழ்த்தி துஆச் செய்கின்றார்கள். மேலும் இந்த
மதரஸாவை  வக்ஃபு  செய்தவர்கள்  எந்த
நோக்கத்திற்காக  வக்ஃபு செய்தார்களோ அதன்
படி கியாமத் நாள் வரை நடை பெற, அல்லாஹ்
பேருதவி செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்….


.


மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டிஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக
53-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011)  முதல்
(23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து
முடிந்தது. இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன

உலகத்திலேயே தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டிமலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆண்களில், மலேசியாவைச் சேர்ந்த காரீ,முதலிடத்தையும்,
பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,
ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது  இடத்தையும்,
புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக்
கொண்டார்கள்

பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா
முதலிடத்தையும், இந்தோனேசியாவைச் சார்ந்த  காரீயா
இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூரைச் சார்ந்த காரீயா
மூன்றாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா
நான்காவது இடத்தையும், பிலிப்பைன்ஸை சார்ந்த காரீயா
ஐந்தாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர்

இதில் பலநாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள்.மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..

வெளியீடு-
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப்பேரவை வாழூர் கிளை.


ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு