அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, June 30, 2012

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 
1433-ஷஅபான் பிறை 10-(1-07-2012)ஞாயிற்றுக்கிழமை 
காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில்

தலைமை- J.M.A அரபுக் கல்லூரித் தலைவர்
அல்ஹாஜ் P.M.முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள்.

வரவேற்புரை J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர்  
அல்ஹாஜ் P.A.முஹம்மது எஹ்யா அவர்கள்.
                  
ஸனது வழங்குபவர்கள்
ஷைகுல் ஜாமிஆஸத்ருல் முதர்ரிஸீன்முஃப்திஅல்லாமாஹாஃபிழ்காரீ  
A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.

மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும்,
மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள்.

பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர்
மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்திஅமீரே ஷரீஅத் கர்நாடகா,
மரியாதைக்குரிய முஹம்மது அஷ்ரப் அலி பாக்கவி ஹள்ரத் அவர்கள்.

சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல் 
தலைமை இமாம் மௌலானா மௌலவி ஹாஃபிழ்                               
M.சதீதுத்தீன் ஹள்ரத் பாக்கவி அவர்கள்.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
I.M.முஹம்மது முபாரக் அல் உஸ்மானி (அலிகார்) அவர்கள்

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்
J.M.A.அரபுக் கல்லூரி பேராசிரியர்ஷைகுல் ஹதீஸ்
அபுல் பயான்மௌலானா மௌலவி அல்லாமா                                                               
A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹள்ரத் மிஸ்பாஹி அவர்கள்.

லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரியின்
முன்னால் முதல்வர்,ஷைகுல் ஃபிக்ஹ்அல்லாமா,
மௌலானாமௌலவிஅல்ஹாஜ்                                                                   S.A.அப்துர் ரப் ஹள்ரத் கிப்லா அவர்கள்.

நன்றியுரை-                                                                                         J.M.A.அரபுக் கல்லூரிப் பொருலாளர்.                                                                 அல்ஹாஜ் ஜாபர் அலி B.Sc அவர்கள்.

இங்ஙனம்.
நிர்வாகக் குழு ஜாமிஆ மன்பவுல் அன்வார்.

ஹிஜ்ரி1433 ரஜப்  (2012) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
தவ்ரத்துல் ஹதீஸ் மௌலவி ஃபாஜில் ஸனது பெறுபவர்கள்

மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் T.முஹம்மது அலி மன்யீ 
பட்டூர், மாங்காடு,சென்னை-122

மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் M.I.முஹம்மது அனஸ் மன்பயீ
தேவிபட்டிணம், இராமநாதபுரம் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில் I.முஹம்மது மாஹிர் மன்பயீ
கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில் N.மிஸ்ரா முஹம்மது மன்பயீ
கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில் A.நூருல்லாஹ் மன்பயீ
லால்பேட்டை, க்டலூர் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் M.A.சஃபிய்யுல்லாஹ் மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில் A.M.ஷம்ஸூத்தீன் மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் ஜஃபர் ஸாதிக் மன்பயீ
திருவண்ணாமலை

மௌலவி ஆலிம் ஷேக் ஜிந்தா மதார் மன்பயீ
முதுகுளத்தூர், இராமநாதபுர மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் முயீனுத்தீன் மன்பயீ
ஆம்பூர், வேலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் ஜாக்கீர் ஹுஸைன் மன்பயீ
அறியன் வாயல்,திருவள்ளூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் மதார்ஷாஹ் மன்பயீ
சக்கிமங்கலம், மதுரை மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் அப்துஸ்ஸமது மன்பயீ
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் சய்யிது ஷாதிக் மீரான் மன்பயீ
சென்னை

மௌலவி ஆலிம் முஹம்மது ஷாலிஹ் மன்பயீ
சிவகங்கை மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் இர்ஃபானுல்லாஹ் மன்பயீ
ஜாக்கீர் ஹுஸைன் நகர்,லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் உபைதுல்லாஹ் மன்பயீ
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் ஹிள்ரு முஹம்மது மன்பயீ
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் அலாவுத்தீன் மன்பயீ
வேடசந்தூர்,திண்டுக்கல் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் நூருல் அமீன் மன்பயீ
ஆம்பூர், வேலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் முஹம்மது இஸ்மாயீல் மன்பயீ
நம்புதாளை,இராமநாதபுரம் மாவட்டம்.

மௌலவி ஆலிம் சுல்தான் சய்யிது இபுறாஹீம் மன்பயீ
புதுக்கோட்டை மாவட்டம்.

மௌலவி ஆலிம் அக்பர் அலி மன்பயீ
அமைந்தகரை,சென்னை.29

மௌலவி ஆலிம் சமீஉல்லாஹ் மன்பயீ
சேலம் மாவட்டம்.

மௌலவி ஆலிம் அமீர் பாஷா மன்பயீ
கல்பாக்கம்,காஞ்சிபுரம் மாவட்டம்.

மௌலவி ஆலிம் உவைஸ் அஹ்மது மன்பயீ
பள்ளபட்டி,திண்டுக்கல் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் முஹம்மது ஷேக் அலி மன்பயீ
தேனி மாவட்டம்.

மௌலவி ஆலிம் முஹம்மது அமீன் மன்பயீ
திண்டுக்கல் மாவட்டம்.

மௌலவி ஆலிம் அப்துல் கரீம் மன்பயீ
பசுபதிபாளையம்,கரூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் அஹ்மது அஃப்ஸர் மன்பயீ
சுரண்டை,நெல்லை மாவட்டம்.

தங்கள் நல்வருகையை நாடும்
ஜாமிஆ மதரஸா மனபவுல் அன்வார்
அரபுக்கல்லூரி
லால்பேட்டை 608303
கடலூர் மாவட்டம்.
ஃபோன்;-04144269079

ஜாமிஆவின் சிறப்புமிகு 68-ஆம் ஆண்டு பட்டயம் வழங்கும் மாபெரும் பெருவிழா மென்மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன்பணி சிறக்கவும்,பட்டமளிப்பு பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும்,பட்டமளிப்பு பெருவிழாவில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்                                   

Tuesday, June 26, 2012

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியர்,அல்லாமா A.மஹ்மூதுல் ஹஸன் ரஷாதி காஸிமி ஹஜ்ரத் அவர்கள்,திருப்பூர்,சிராஜுல் முனீர் அரபுக் கல்லூரியின் முதல்வர்,அல்லாமா A.முஹம்மது இல்யாஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,மதுரை ஜாமிஆ ரைஹான் அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா N.A.முஹம்மது முஸ்தபா ரஷாதி ஹஜ்ரத் அவர்கள்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் அல்லாமா K.M.அஷ்ரப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான,சென்னை,கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் அல்லாமா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் MA.அவர்கள், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக,கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.மேலும் தமிழக உலமாப்பெருமக்களின் முன்னிலையிலும்,இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம் நடைபெறும்.நம் உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம் ஆகியவற்றின் கண்ணியம் பாதுகாக்கும் பொருட்டு, நடைபெறும் மாபெரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.வஸ்ஸலாம்.

இங்ஙனம்--
ஹதீஸ் கலை ஆய்வுத்துறை,
பிலாலியா அரபுக் கல்லூரி,107,ECR Higway,
பெரிய நெம்மேலி,சென்னை--603104
9840538681--9840636314--9500503751


சிறப்புமிகு மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கம் மென்மேலும் சிறக்கவும்,இம் மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கத்திற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும், இம் மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்

Sunday, June 24, 2012

Jamia Misbahul Hudha Arabic College 100th-Anniversary நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு பெருவிழாஜாமிஆவின் சிறப்பு மிகு நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மென் மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன் பணி சிறக்கவும்,நூற்றாண்டுப் பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய உலமாப்பெருமக்கள் அனைவரையும்,வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும்,இப்பெருவிழாவில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள் அகமுவந்து வரவேற்று, வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்

வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்

Sunday, June 17, 2012

புனிதமிகு மிஃராஜ் இரவு


முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1433 ரஜப் பிறை 27 (16-06-2012)சனிக்கிழமை பின்னேரம்,ஞாயிற்றுக்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ் காரீs.s.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந் ஹழரத் அவர்கள்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல் ஹாஃபிழ்,காரீ,M.நாசிர் அலி ஆலிம் உமரி ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முன்னால் பேராசிரியருமான,சென்னை,புதுப்பேட்டை ஜும்ஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்,மரியாதைக்குரியமௌலானா மௌலவி M.முஹம்மது அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹழரத் அவர்கள்நபி (ஸல்அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களேஅதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும்மிகத் தெளிவாகவும்,மலேசியாவில் அதிகமான இடங்களில் பயான் செய்தார்கள்இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும்இலங்கைவளைகுடாநாடுகள்,மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமான நல்லடியார்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும் பெற்றுக்கொண்டார்கள்வஸ்ஸலாம்.ஆமீன்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்


Sunday, June 10, 2012

வாழூர் (வாழும் ஊர்) அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
வாழூர் அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3-30 மணிமுதல் இரவு 11-30 வரை, வாழூர் இளைஞர் முஸ்லிம் விளையாட்டுத் திடலில்,அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. S.செய்யது முஹம்மது சஹாபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஹாஜி A.ரஃபீக்குல்லாஹ் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள்,அல்ஹாஜ் S.அஸ்ரஃப் அலி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொருளாலர் அல்ஹாஜ் A.புரோஸ்கான் அவர்கள்,வாழூர் முன்னால் தலைவர் அல்ஹாஜ் S.M.துல்கீப் அவர்கள்,அல்ஹாஜ் A.அஹ்மது சுல்தான் BA,B,PED.அவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.வாழூர் இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் செயலாளர்,N.ஜியாவுல் ஹக் DEEE அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இஸ்லாமிய பாடகர், வாழூர் S.தௌலத் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.விழாக்குழுவின் உபதலைவர் ஜனாப் S.தீன்ஷாதலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளியின் இமாம் மௌலானா மௌலவி K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி அவர்கள், சித்தார்கோட்டை ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலாளர் Y.உமர் ஃபாரூக் அவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலப்பாளையம் உதுமானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,''அருள் மொழிச் செல்வர்''கலீஃபத்துஸ் ஷாதுலி, மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், P.A.காஜா முயீனுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள்.விளையாட்டுக் குழுத் தலைவர் S.முஹம்மது ரஸாலி அவர்கள்,விழாக்குழு செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் M.BA.அவர்கள்,இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் தலைவர் H.செய்யது மன்சூர் அலி அவர்கள்,இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் பொருளாலர் J.ஷேக் யூசுப் DCA.CCNA.அவர்கள்,அல்ஹாஜ் A.அபுல் ஹுதா அவர்கள்,டத்தோ J.செய்யது சிக்கந்தர் பாதுஷா அவர்கள்.அல்ஹாஜ் N.செய்யது அபூபக்கர் அவர்கள்,அல்ஹாஜ் E.செய்யது அஹ்மது அவர்கள்,ஜனாப் N.செய்யது இபுறாஹீம் அவர்கள்,சித்தார்கோட்டை ஜமாஅத் தலைவர்,I.M.A.தீனுல்லாஹ் கான் அவர்கள்,சித்தார்கோட்டை முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் Z.அப்துல் கனி அவர்கள்,சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்,திரு U.சுந்தரம் அவர்கள்,தேவிபட்டிணம் காவல் நிலையத்தின்,திரு மதிப்பிற்குரிய காவல்துறை ஆய்வாளர் அவர்கள்,உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார்கள்.சித்தார்கோட்டை முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியருமான,கீழக்கரை கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபுக் கல்லூரியின் உதவித் தாளாலர்,ஜனாப் M.முஹம்மது இபுராம்ஷா Rtd,H.M.M.SC.Med நல்லாசிரியர் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.ஜனாப் முஹம்மது இஸ்ஹாக் (துபை) அவர்கள்,ஜனாப் கமருஜமான் (மலேசியா) அவர்கள்,S.T.ஷாஜஹான் (புருனை) அவர்கள்,ஜனாப் S.ஹாஜா முஹைதீன் (மலேசியா) அவர்கள்,ஜனாப் சீனி ஹபீபுல்லாஹ் கான் அவர்கள்,ஜனாப் A.பஹ்ரூம் கான் அவர்கள்,மேலும் மலேசியா மற்றும் சவூதி வாழ் உள்ளூர் வாசிகள்,உள்ளூர் ஜமாஅத் பொதுமக்கள்,உள்ளிட்டோர் இச்சிறப்புமிகு விழா மென்மேலும் சிறக்க அகமுவந்து வாழ்த்தி துஆச்செய்தார்கள்.இப் பெருவிழாவில் தேவிபட்டிணத்தைச்சார்ந்த உலமாப் பெருமக்களும்,சித்தார்கோட்டை அல் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்களும்,உலமாப்பெருமக்களும்,ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.இறுதியில் பெருவிழா சிறப்பு துஆவுடன் நிறைவடைந்தது.வஸ்ஸலாம்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, June 6, 2012

வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழ்ரத் (ரஹ்) அவர்களின் நினைவு விழா மற்றும் மாபெரும் ஷரீஅத் மாநாடு சென்னை, சைதாப்பேட்டை நவாப் ஸஆதத்துல்லாஹ் கான் பள்ளிவாசல் வளாகத்தில், ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் மாலை 5-மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஜஹீர் அஹ்மது ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.மௌலானா மௌலவி முஹம்மது ஹனீஃப் பாக்கவி ஹழ்ரத் மற்றும் நவாப் பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி,முஃப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் அய்யூப் அஜ்ஹரீ ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.P.அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியர்,மௌலானா மௌலவி முஹம்மது முக்தார் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், தராவீஹ் தொழுகையும்,தஸ்பீஹுகளும் என்ற தலைப்பிலும்,மேலப்பாளையம்,உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.காஜா முயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்,மீலாதும் மவ்லீதும் என்ற தலைப்பிலும்,பெங்களூர் தாருல் உலூம் ஷபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் S.ஷைஃபுத்தீன் ரஷாதி ஹழ்ரத் அவர்கள்,கூட்டு துஆக்கள் நன்மையே என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.கேரள மாநிலம் ஸஹாபாத்துஸ் சுன்னியாவின் நிறுவனருமான,அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ், அபுல் அய்தாம்,கமருல், உலமா,ஷைய்குனா,அல்லாமா,காந்தபுரம் A.P. அபூபக்கர் அஹ்மது முஸ்லியார் பாக்கவி ஹழ்ரத் கிப்லா அவர்கள்,இறுதி நபித்துவமும் காதியானிஸமும் என்ற தலைப்பில் சிறபுப்பேருரையாற்றினார்கள்.மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது இபுராஹீம் கலீல் புஹாரி தங்கள் ஃபாழில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள், நிறைவு சிறப்பு துஆ ஓதினார்கள்.இச்சிறப்புமிகு மாபெரும் ஷரீஅத் மாநாட்டினை அகில இந்திய பாக்கவிகள் அசோசியேஷன் மற்றும் லஜ்னத்துல் இர்ஷாத் பாக்கவிகள் சங்கம் (லிபாஸ்) மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளை

Saturday, June 2, 2012

ஜமாஅத்துல் ஆகிர் 11-முதல் ஜமாஅத்துல் ஆகிர் 26-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சி,பீர்ஷா நகரில் மஸ்ஜித் மர்ஹூமா பாத்திமா பின்த் ஹஸன் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மே 3-ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம். அப்துல் காதர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா,சென்னை எருக்கஞ்சேரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஸலாஹுத்தீன் அய்யூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்றார்கள்.மௌலானா மௌலவி ஏ.எம்.முஹம்மது நிஸார் ஜமாலி ஹஜ்ரத்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத், சென்னை நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரி நிறுவனர்,மௌலானா மௌலவி அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி ஹஜ்ரத் ,மௌலானா டி.எஸ்.ஏ. அபூதாஹிர் ஹஜ்ரத்,மௌலானா நூர்தீன் ஆலிம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான உலமாப் பெருமக்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா மதீனா நகர் அர் ரஹ்மான் தெருவில், இமாம் கே.ஏ.அஹமது மீரான் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.தூத்துக்குடி அரபுக் கல்லூரியின் பேராசிரியர், மௌலானா ஷேக் உஸ்மான் ஆலிம் அனைவரையும் வரவேற்றார்கள்.தென்காசி ரப்பானியா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா ஷம்சுத்தீன் ஹஜ்ரத் வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் பி ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்,ஆலிமா பட்டம் பெறுபவர்களுக்கான ஸனது வழங்கி பேசினார்கள்.அய்யம் பேட்டை அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் அஹ்மது பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

திருவாரூர் மாவட்டம்,ஏனங்குடி புதிய கீழப் பள்ளிவாசல் திறப்பு விழா, மே 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கினைப்பாளர், அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி.அவர்கள் விழாப் பேருரையாற்றினார்கள்.சென்னை கானத்தூர்,மதினத்துல் இல்ம் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் நிறுவனர்,மௌலானா மௌலவி அல்லாமா எ.முஹம்மது ஷபீர் அலி ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

தமிழக அரசின் இராமநாதபுர மாவட்ட காஜியும்,கீழக்கரை அரூஸிய்யா தைக்காவின் முதல்வருமான,மௌலானா மௌலவி வி.வி.எ.ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி,ஃபாஜில் உமரி அவர்களின் இல்லத் திருமண விழா, ஏர்வாடி தர்ஹா ஸரீஃபில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் கௌரவத் தலைவர்,அல்ஹாஜ் அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாலர் எம் எஸ்.ஏ.ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

லால்பேட்டை அருகில் ரெட்டியூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா, மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.லால்பேட்டை J.M.A. அரபுக் கல்லூரி முதல்வர்,மௌலானா மௌலவி காரீ,முஃப்தி,அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்று,பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள்.மௌலவி பஷீர் அஹ்மது மன்பஈ வரவேற்புரையாற்றினார்கள்.மௌலானா அப்துர் ரவூப் பாகவி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவரும்,லால்பேட்டை J.M.A. அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா, சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ் முஹம்மது அபுதாஹிர் பாகவி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரிப் பேராசிரியர்கள்,மௌலானா அப்துஸ் ஸமது ஹஜ்ரத்,ஜாகீர் ஹுஸைன் ஹஜ்ரத்,நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,லால்பேட்டை மௌலானா தளபதி ஷபீஃகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு