அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Wednesday, July 18, 2012

நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்


முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் நல் அடியார்களேநன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய,இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய,சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4-இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத்வைத்து நோன்பு வைக்க வேண்டும்.  5- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 6-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்கவேண்டும். 7-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகைய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள்அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். குறிப்பாக எந்த வழிகெட்ட கொள்ளைக்கூட்ட அமைப்புகளுக்கும் பத்து காசுகள் கூட கொடுக்கக்கூடாது 8- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்ஆண்கள் பள்ளி வாசல்களிலும்பெண்கள் வீடுகளிலும்இஃதிகாஃப் இருக்க வேண்டும்.9- ரமலான் பிறை 27-லைலத்துல் கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும்.10-பெருநாள் தினத்தன்று ஏழை வரியான ஃபித்ரா தொகைகளை தொழுகைக்கு செல்லும் முன் ஏழை,எளியவருக்கு வழங்கவேண்டும். அல்ஹம்துலில்லாஹ் குறைந்த பட்சம் மேலே கூறப்பட்டுள்ள அமல்களை பரிபூரணமாகஉலக முஸ்லிம்கள்அனைவர்களும் நிறைவேற்றிபுனிதம் நிறைந்த ரமலானின் முழுமையானநன்மைகளைஉலகமுஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்குஎல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும்உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக் கூறியும்சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அக மகிழ்ந்து வாழ்த்தி, துஆச் செய்கிறார்கள்.  
புனிதம் வாய்ந்த ரமழான் மாத விசேட அறிவிப்புகள்;-
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான மூன் தொலைக்காட்சியில் புனித ரமலான் மாத சஹர் நேர நிகழ்ச்சி,சிறப்புமிகு அறிஞர் அரங்கம் தினமும் 3-30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.அனைவரும் தவறாமல் பார்த்து அதன்படி நல் அமல்கள் செய்து,அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு www.jamalinet.com மற்றும் www.tmislam.com ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண விளக்கம் பெறவும் வஸ்ஸலாம்.
வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்

Sunday, July 15, 2012

மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி


முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 54-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (6-07-2012)  முதல்(13-07-2012) வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்துமுடிந்ததுஇதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன.உலகத்திலேயே தொடர்ந்து 54-வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆண்களும்பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.ஆண்களில்மலேசியாவைச் சேர்ந்த காரீ,முதலிடத்தையும், ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும்இந்தோனேசியாவைச் சார்ந்த  காரீயா இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர். இதில் 72-காரீகளும்,27-காரீயாக்களும்,கலந்து கொண்டார்கள்.இதில் பலநாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள்.எட்டு தினங்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானக,என்றும் கலந்து கொண்ட அனைத்து காரீகளுக்கும், காரீயாக்களுக்கும் அல்லாஹ் மென்மேலும் பல சிறப்புகளையும் வழங்குவானாகவும், என்றும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள் அகமுவந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.ஆமீன்வஸ்ஸலாம்..

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Thursday, July 12, 2012

ரஜப் பிறை 13-முதல் ஷஅபான் பிறை 2-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

சமுதாய பெருந்தலைவருமான,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117--வது பிறந்த  நாள் ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8-30 மணிக்கு சென்னை வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா, மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.ஜியாரத் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பாபநாசத்தில்  நடைபெற்ற வெள்ளம் ஜீ அவர்களின் இல்லத் திருமண விழாவில், காயல் பட்டினம் முஅஸ்கரியா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி  ஹஜ்ரத் அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.வழுத்தூர் முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ்ஷா ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்கள் முனீருல் மில்லத் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர்,பேராசிரியர்,டாக்டர் சே.மு.மு. முஹம்மது அலி ஆகியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்செய்து சிறப்புறையாற்றினார்கள்.

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்,கடையநல்லூர் பெரிய தெரு நெய்னா முஹம்மது பெரிய குத்பா பள்ளிவாசலில் ஜூன் 6-ஆம் தேதி அன்று காலை 10-மணியளவில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா மௌலவி டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.புனித ரமலான் பிறை சம்பந்தமாகவும்,நோன்பு பெருநாள்,ஸதகத்துல் ஃபித்ர் சம்பந்தமாகவும்,மார்க்க பற்று குறைவும்,ஒழுக்கமின்மையும்,ஏற்ப்பட்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடத்தில்,ஷரீஅத்தின் விழிப்புணர்வு  ஏற்ப்படுத்துவது சம்பந்தமாகவும்,சஹர் சிந்தனை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும்,ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்தில் மாவட்டம்  முழுவதும் உள்ள ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்துகொண்டார்கள்.

கடையநல்லூர் ஸ்மார்ட் ஹாலிடே சிட்டி நகரில் புதிய பள்ளிவாசல் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,மௌலானா மௌலவி டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தலைமையேற்று அடிக்கல் நாட்டினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட அரசு டவுன் காஜி ஏ.ஒய்.முஹியித்தீன் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானியா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.எச்.ஷம்ஸுத்தீன் ஹஜ்ரத் சிறப்புறையாற்றினார்கள்.

சென்னை திருவல்லிக்கேணி,கிருஷ்ணாம் பேட்டை மஹல்லாவில் உலமாயே--நூரிய்யா சார்பில்,இம்மஹல்லாவைச் சேர்ந்த 2012-ஆம் ஆண்டு பட்டம் பெறும் ஆலிம்களுக்கு வரவேற்பு விழா,ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜிதில் நடைபெற்றது.மௌலவி முஹம்மது இத்ரீஸ் பிலாலி கிராஅத் ஓதினார்கள்.சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளரும்,சென்னை பல்கலைக் கழகத்தின் அரபித்துறை பேராசிரியருமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் வி.எஸ்.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.சென்னை நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் அல்லாமா மௌலானா பிலாலிஷாஹ்  ஜுஹூரி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.

சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரியில் சைய்யிதுனா கௌதுல் அஃலம் (ரலி) அவர்களின் 17- வது திருப்பேரரும்,கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் 27-வது திருப்பேரருமான, மௌலானா அஷ்ஷைஹ் சைய்யிது ஹாஷிமுத்தீன் அல்பக்தாதி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சி ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்றது.ஜமாலிய்யா அரபுக்கல்லூரி மாணவர் மஹ்பூபுர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் ஜமாலி கிராஅத் ஓதினார்கள்.ஜமாலிய்யாவின் பேராசிரியர்,மௌலானா மௌலவி எம்.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.சைய்யிதுனா கௌதுல் அஃலம் (ரலி) அவர்களின் திருப்பேரர் மௌலானா அஷ்ஷைஹ் சைய்யிது ஹாஷிமுத்தீன் அல்பக்தாதி ஹஜ்ரத் அவர்கள் அரபியில் சிறப்புரையாற்றினார்கள்.இதன் உருது மொழியாக்கத்தை,ஜமாலிய்யாவின் முதல்வர் மௌலானா மௌலவி டி.செய்யிது நியாஸ் அஹ்மதுஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்களும்,தமிழ் மொழியாக்கத்தை சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும்,சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான,மௌலானா வி.எஸ்.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் ஆகியோர் செய்தார்கள்.ஏராளமான பொதுமக்களும்,நூற்றுக்கணக்கான உலமாப்பெருமக்களும் கலந்துகொண்டார்கள்

.தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அஞ்சுமன் ஃபாத்திமா பத்ர் பள்ளிவாசலில் புனித மிஃராஜ் இரவை முன்னிட்டு,சிறப்பு பயான் ஞாயிறு திங்கள் இரவு நடைபெற்றது.அய்யம் பேட்டை சுபுலுஸ்ஸலாம் முதல்வர்,மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் அஹ்மது ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் தொடக்கவுரையுடன் தொடங்கியது.தேனி மாவட்டம் வைகை அணை ஜாமிஆ அஸரத்துல் முபஸ்ஸராவின் முதல்வர்,எம்.எம்.முஹம்மது ஹுஸைன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மிஃராஜூன் நபி சிறப்புகள் என்ற தலைப்பில்,சிறப்பு சொற்ப்பொழிவு ஆற்றினார்கள். மௌலானா ஏ.அப்துல் மாலிக் ஆலிம்,மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் துஆ ஓதினார்கள்.சிறப்பு பயானுக்குப் பிறகு ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது.

வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, July 10, 2012

கண்ணியத்திற்குரிய உலமாக்களின் மேலான கவனத்திற்கு!

1-இமாம்களின் அந்தஸ்த்தையும்,இமாமத்தைச்சார்ந்த சேவைகளையும் சிறப்பாக்கி கொள்ள கிறாஅத் முதல் இமாமத் கித்மத்திற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு  பயிற்சிகளும்,வழிகாட்டல்களும்.
2-சிறந்த தலைப்புகளையும் அதற்கு பொருத்தமான தகவல்களையும் சேகரம் செய்து பயனுள்ள முறையில் சொற்ப்பொழிவு ஆற்றுவதற்கு தேவையான பயிற்ச்சிகள். 
3-ஆழமான கருத்தாய்வுகளைச் செய்து சீர்திருத்த கட்டுரைகளை வரைவதற்கான எழுத்துப்பயிற்சிகள்.
4-மஹல்லாவிலுள்ள சிறார் முதல் அனைத்து தரப்பினரின் மார்க்க கல்வி மேம்பாட்டுக்கு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல்கள்,பயிற்சிகள்.
5-மஹல்லா கட்டமைப்பும்,சகோதர சமயத்தவருடனான நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட தேவையான வழிகாட்டல்கள்,பயிற்றுவிப்புகள்
6-கம்யூட்டரை இயக்கிடவும்,குறைந்த செலவில் இண்டர்நெட் சென்டர்களை பயன்படுத்தி அதில் நிறைவாக வெளியிடப்பட்டிருக்கும் குர்ஆன் ஹதீஸ்,ஃபிக்ஹின்  பரவலான தகவல்களை அறிந்து சுய நிலையில் மார்க்க ஞானத்தை  வளர்த்துக் கொள்ளவும்,தற்கால சமூக தேட்டங்களுக்கு,ஈடுகொடுக்கும் வகையில் தீனின் சேவைகளை சிறப்பாக ஆற்றிடவும் தேவையான பயிற்சிகள்.
7-அரசின் சிறுபாண்மையினருக்கான உதவிகளை பெறுவதற்குறிய வழிமுறைகளை அறிந்து சமுதாயத்தினரால் தகுதி உள்ளவருக்கு அதனை அடையச்செய்ய தேவையான வழிகாட்டல்கள் பற்றி பயிற்சி.
இதுபோன்ற இன்னும் பல சிறந்த பயிற்சிகளும்,வழிகாட்டல்களும்,மர்கஜ் அல் இஸ்லாகில் வழங்கப்படுகின்றன.புதிதாக பட்டம் பெற இருக்கும் மௌலவிகளும்,சேவையில் ஈடுபட்டிருக்கும் சங்கைகுரிய உலமாக்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
6- வது, நாற்பது நாள் பயிற்சி வகுப்பு;-ஷஅபான் பிறை 16 (7-07-2012) முதல் ரமலான்  பிறை 26 (15-08-2012) முடிய இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கிறது.
முழு (ஒரு) வருட பயிற்சி வகுப்பு;--ஷவ்வால் பிறை 17 (5-09-2012) புதன்கிழமை துவங்கப்பட இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

(வழமைப்படியான) வருடம் முழுவதும் 40 நாள் (தொகுப்பு) பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நடைபெறும்.
குறிப்பு;--40 நாட்கள் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து முழுமையாக பங்குபெறும் ஆலிம்களுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் ஹதியாவாக வழங்கப்படும்

தொடர்புக்கு--மர்கஜ் அல் இஸ்லாஹ்,186 நேரு வீதி,பாண்டிச்சேரி.605001
phone-0413-2334152, 94422-07864, Email-Markezalislah@gmail.com

வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்

Monday, July 9, 2012

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினேழாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நிகழும் ஹிஜ்ரி 1433-ஆம் ஆண்டு  ஷஅபான்
பிறை 17-  (8-07-2012)  ஞாயிறு மாலை,
திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு
தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல்
நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 17- வது
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் உலமாப்  பெருமக்கள்
சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை
ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள்.
தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா
அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள்.
தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள்
அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள்.
புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்
ஜனாப் ஆரிப்கான் அவர்கள்
புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.
சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது
இபுராஹீம் அவர்கள்.
அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S
அப்பாஸ் அவர்கள். தாளாலர்
முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி.
வரவேற்புரை-
ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள்.
டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
ஸனது வழங்கி சிறப்புரை
மௌலானா மௌலவி M.K.M.கதீப்  
ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில்
மன்பயீ அவர்கள்
முதல்வர்- அஜ்ஹாரிய்யா
அரபுக் கல்லூரி தொண்டி.
கௌரவ ஆலோசகர்-ஃபாத்திமா
பீவி மகளிர் அரபுக்கல்லூரி.
வாழ்த்துரை-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம், சித்தார் கோட்டை.
சிறபுப்பேருரை-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
M.முஹம்மது முஸ்தபா காஸிமி MA,Mphil அவர்கள்.
துணை முதல்வர், ஜாமிஆ நாஃபிவுல் உலூம் 
அரபுக் கல்லூரி, மதுரை
பெண்கள் நிகழ்ச்சிகள்
இடம்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
சித்தார்கோட்டை
காலம்- (8-7-2012) 2.00-மணியளவில் நடைபெற்றது.
தலைமை மற்றும் பரிசளிப்பு 
ஆலிமா M.பரிதா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
முதல்வர்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி
கிராஅத்- R.அல்ஷேஹா அவர்கள்.
வரவேற்பு- S,சீரின் பானு அவர்கள்.
சிறப்புரை
ஆலிமா  K.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
ஆலிமா  A.ஹாஜரா பேகம் அவர்கள். 
ஆலிமா M.நிலோபர் ஜஹான்  ஃபாத்திமிய்யா அவர்கள்.
நன்றியுரை- A.இலாஹியா பானு அவர்கள்.
2012-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகள்.
ஆலிமா A.இலாஹியா பானு  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.M.R.அஸ்வாத் முஹம்மது,புதுமடம்.
ஆலிமா H.ஹதீஜத்துல் ஒளி  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.M.ஹமீது இமாம் ஸாஹிப்,பெரியபட்டிணம்.
ஆலிமா N.தௌஃபிகா  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.K.நூர்தீன்,இராமேஸ்வரம்.
ஆலிமா R.அல்ஷேகா  ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.S.ரஹ்மத்துல்லாஹ் கான்,பெரியபட்டிணம்.
ஆலிமா S.ஷீரின் பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o A.ஷைகு தாவூது,கட்டுமாவடி.
ஆலிமா A.ஷபின் நிஸ்வான்  ஃபாத்திமிய்யா அவர்கள்.
w/o.ஆசிக் அஹ்மது,பெருங்குளம்,

இவ்வருடம் பட்டம் பெற்ற இளம் ஆலிமாக்களின்
தீன் பணி சிறக்க, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்  அகமுவந்து
வாழ்த்தி துஆச் 
செய்கின்றார்கள். மேலும் இந்த
மதரஸாவை  வக்ஃபு  செய்தவர்கள்  எந்த
நோக்கத்திற்காக  வக்ஃபு செய்தார்களோ அதன்
படி கியாமத் நாள் வரை நடை பெற, அல்லாஹ்
பேருதவி செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்….
வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்

Saturday, July 7, 2012

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த பராஅத் இரவு

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை 15 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாஸின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,திக்ரு மஜ்லிஸ்களும்,தஸ்பீஹ் தொழுகைகளும்,மஸ்ஜித் இந்தியாவின் இமாம்களான மேலப்பாளையம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ S.S.அஹ்மது ஆலிம் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹழரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ M.நாஸீர் அலி ஆலிம் உமரி M.A.ஹழரத் ஆகியோரது தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதுபோன்று பினாங்கு மாநிலம்,மற்றும் மலேசியாவில் உள்ள இருநூற்றுக்கும் மேற்ப்பட்ட அதிகமான இடங்களிலும்,உலகம் முழுவதிலும் அதிகமான இடங்களில் புனிதம் நிறைந்த பராஅத் இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது.உலகம் முழுவதும் இச்சிறப்பான மஜ்லிஸ்களில் அதிகமானோர் கலந்துகொண்டு கப்ரு ஜியாரத் செய்தும்,நோன்புகள் வைத்தும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.

ஜூலை 5--ஆம் தேதி இரவு ஷபே பராஅத் என தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பு
தமிழக அரசின் தலைமை காஜி மௌலானா மௌலவி முஃப்தி காஜி ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அல் --அஷ்ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளாவது, ஹிஜ்ரி 1433- ரஜப் மாதம் 29-ஆம் தேதி புதன் கிழமை மாலை ஷஃபான் மாத பிறை தென்படவில்லை, ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கிலம் மாதம் 22-06-2012- அன்று ஷஃபான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது.ஆகவே ஷபே பராஅத் வரும் 5-07-2012-வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை மத்தியிலுள்ள இரவு ஆகும் ,இவ்வாறு தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளார்கள்

வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு