Posts

Showing posts from October, 2013

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற இமாம் மௌலானா பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..!

Image
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற  மௌலானா இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது……….!! அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்,விழாவாகவும் இருந்தது. ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றுவது, இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்கள் மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ  ஹஜ்ரத்   அவர்கள். ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர்கள் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய இந்தச் சாதனையைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்து பொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள். விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. இமாம்களைப் பாராட்டுபவர்கள் பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்பணிப்பு ஆகியவற்றை வாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள். "உங்கள் சேவைக்கு மறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் செய்கிறோம

ஹஜ் யாத்திரை-சில சிந்தனைகள் !!!

Image
'சமநிலை சமுதாயம்' அக்டோபர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை. ஹஜ் என்றால் "நாடுதல்",உம்ரா என்றால் "தரிசித்தல்"என்று பொருள்.அதாவது இறைவனை நாடிச்சென்று,ஆரம்பமாக அவனது ஆலயத்தை தரிசிப்பது.முடிவில் அவனையே தரிசிப்பது என்பது அதன் உள்ளார்ந்த தத்துவம். நாநிலத்தின் நடுநாயகமாக அமைந்த புனித மக்காவின் ஆதி இறை இல்லம்,உலகின் முதல் இறையில்லம் கஅபாவை நாடி பயணப்படுவதற்குப் பெயர்தான் ஹஜ் யாத்திரை."மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் முதன்மையானது,நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.அது மிகுந்த பாக்கியமுள்ளதாகவும்,உலக மக்களுக்கு நேரான வழி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது"என்கிறது திருக்குர்ஆன்.1 மக்கா என்பது ஊர் பெயர். பக்கா என்பது மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனித கஅபா ஆலயம் அமைந்த இடம்.{தப்ஸீர் தப்ரீ}கண்ணியமிக்க கஅபா ஆலயம் இறைவன் கூறுவது போல் பரக்கத்தும்,அருள்வளமும் நிறைந்த புனித இடம்.பரக்கத்-அபிவிருத்தி என்றால்,பொருள் நிறைவாக இருப்பது மட்டுமன்று; குறைந்ததில் நிறைந்த பலன் இருப்பதுமாகும்.இவ்விதம் இறைவனால் பரக்கத் செய்யப்பட்ட மக்கா, ஒரு நீரற்ற பாலைவனப் பிரதே

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும்  அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath blogspot.com .

அறுத்தெரிந்திடு தோழா......... அகந்தையை !!!!

Image
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஜகாத்,ஸதக்கா,கொடுப்பதற்குத் தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் கடமையாக்கியுள்ள இன்னொரு அமல் குர்பான். குர்பான்,குர்ஆன் இந்த இரண்டுக்கும்  ஒரு எழுத்து வித்யாசப்படும்.குர்பான் என்றாலும்,குர்ஆன் என்றாலும்,நெருங்குதல்,  அடுத்துச்செல்லல் என்பதே பொருளாகும். இறைமறை தன்னை இதயத்தில் சுமந்து,இறை அன்புக் கட்டளைகளை,நமக்கருளிய,இறைத்தூதர்  பெருமானார் ( ஸல் ) அவர்களின் உன்னதமான அமல்களில் குர்பானியும் ஒன்றுதான்.குர்பானி கொடுக்கும் மனிதன், குர்பானி பிராணியை அறுக்கும் போதே தனது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அகந்தையை,தற்பெருமையை, ஆனவத்தை அறுத்து எறிவதோடு,நான்,நான்தான்,என்ற அகம்பாவத்தை அறுத்தெரிய வேண்டும். அப்படி அறுத்தெரிந்தால்தான் குர்பான் என்ற சொல்லின்,நெருங்குதல் என்ற பொருள் உணர்ந்து,இறை நெருக்கம் பெற ஏதுவாகும். யா அல்லாஹ் உன்னை நெருங்கும் உன்னத அமலையும் எங்களுக்கு கொடுத்து,உன் திருப்பொருத்தம் பெற்றிடும்  குர்பானியையும் தந்து அருள்புரிவாயாக மேலும்,. அனைவர்களுக்கும் எனது தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஆமீன்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன

ஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது !!!

Image
                          ஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது. எனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல

அறியவேண்டிய அரஃபா நாள் !!!

Image
عن طلحة بن عبيد الله بن كريز : أن رسولَ الله صلى الله عليه وسلم قال :  «أفضلُ الأيام يومُ عرفة நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும்.  (நபிமொழி ஸஹிஹ் இப்னு ஹிப்பான் ) இது இவ்வாண்டு இங்கு (மலேசியாவில்) 14.10.2013 திங்கட்கிழமை அன்று வருகிறது இன்று நோன்பு பிடிப்பது மிகச் சிறந்ததாகும். سُئِلَ رَسُولُ الله صَلَّى الله عَلَيه وسَلَّم عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , فَقَالَ : يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ  « صوم يوم عرفة كفارة سنتين : سنة هذه وسنة مستقبلة » அரபா நாள் நோன்பு பிடிப்பது முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும். நபிமொழி முஸ்லிம்: 1162, அபூதாவூது 2425) அரஃபா நாள் நோன்பு இருப்பது ஆயிரம் நாள் நோன்பு இருப்பதைப் போல (நபிமொழி-பைஹகீ 3765) அனஸ் பின் மாலிக் ரலி அறிவிப்பு செய்துள்ள ஒரு செய்தியில், ''துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நாளுக்கு நிகரானது அரஃபா தினம்-சிறப்பில்- பத்தாயிரம் நாளாகும் (பைஹகீ:3766) இஸ்லாமிய மார்க்கம் சம்பூரனமாது அரபா தினத்தில்தான். இன்றைய நாளில்தான் அல்லாஹ்

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

Image
இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம் وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3) 1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3) இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி) படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும் ويذكروا اسم الله في أيام معلو

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு