அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, August 31, 2014

தஃப்ஸீர்سورة طه ( திருக்குர்ஆன் விரிவுரை ) 30-08-2014

selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
30 -08 -2014  சனிக்கிழமை 
( தஃப்ஸீர்  سورة طه ) திருக்குர்ஆன்   விரிவுரை. 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

Friday, August 29, 2014

புனிதம் நிறைந்த ஹஜ்,குர்பானி,மற்றும் மதீனா ஷரீஃபை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.


ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும் - மூன்றாம் பாகம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً

அல்லாஹ் எந்த வியாதியையும் இறக்க வில்லை.அதற்கு நிவார ணத்தையும் இறக்கியே தவிர. [நபிமொழி, புகாரி ;5678]


عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلَا تَدَاوَوْا بِحَرَامٍ

எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.ஆகவே மருந்திடுங்கள்.ஹராமை – விலக்கப்பட்டதைக் கொண்டு மருந்திடாதீர். [நபிமொழி,அபூதாவூது]


عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً عَلِمَهُ مَنْ عَلِمَهُ وَجَهِلَهُ مَنْ جَهِلَهُ.اخرجه النسائ وابن ماجه وصححه ابن حبان والحاكم

எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.அதை அறிந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டனர்.தெரியாதவர்கள் தெரியாமலிருக்கிறார்கள்.  [நபிமொழி,அஹ்மது,நஸயி,இப்னு மாஜா]

நோயை இறக்கியவன் மருந்தையும் இறக்காமலில்லை.எந்த நோயுக்கும் மருந்து இல்லாமல் இல்லை.அதை தெரியாமல் இருக்கலாம்.இன்னும் சில நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் மருந்து இல்லாமல் இல்லை.

எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது. - மரணத்தைத் தவிர,- முதுமையைத் தவிர.  [அஹ்மது]                      
- முட்டாள் தனத்தைத் தவிர [சமஹ்ஷரி]

انما شفاء العى السؤال

அறியாமை நோயுக்கு நிவாரணம் [அதை அறிந்து கொள்ள]கேள்வி கேட்பதாகும். [மிஷ்காத் ; 531,அபூதாவூது ; 336,சுனனுல் குப்ரா]

தனக்கு தெரிய வில்லை என்றே  [நோய் இருப்பதே தெரியாதவன்] தெரிந்தும் சிகிச்சை செய்யாதவன் அல்லது வைத்தியனைப் பெற்றுக் கொள்ளாதவன் நிவாரணம் பெற்று குணமாக வாய்ப்பே இல்லை.

மருந்தை அல்லாஹ் இறக்கினான் என்றால் அவன் அதை அறிவித்தான் அல்லது அதை இவ்வுலகில் ஏற்படுத்தினான் என்று பொருள்.சில நோய் களுக்கு நபிமார்கள் – தீர்க்கதரிசிகள் வாயிலாக அறிவித்தான்.அதிக மான நோய்களுக்கு அனுபவத்தின் மூலம் மருத்துவ பரிசோதனை ஆராய்ச்சியின் மூலம் மனித சமுதாயத்திற்கு அறிவித்துக் கொடுத்தான்.

மருத்துவ சாஸ்திரத்திற்கான சூத்திரங்கள் மூன்று.
1, தொடர்ந்து ஆரோக்கியத்தைப் பாதுகாத்து அதை பராமரிப்பது.
2, உடலுக்கு தீங்கு,பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது.
3, நோய்க்கிருமிகள் மற்றும் அதற்கான காரணிகளை கண்டறிந்து களைவது.

இந்த மூன்று மூலவிதிகளையும் திருமறை அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

முதல் விதியை فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ   “உங்களில் யாராகினும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத் திலோ இருந்தால் [அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை அதை] மற்ற நாட்களில் கணக்கி [ட்டு நோற்றுவி] டவும்” [அல்குர்ஆன் : 2; 184] என்பதிலிருந்து பெறப்படுகிறது.

அதாவது பயணம் என்பது அசௌகரீகங்கள் சம்பவிக்க வாய்ப்புள்ள ஒரு தளம்.அது உடல் நிலையை தலைகீழாக புரட்டிப் போடக் கூடியது.நோன்பு நோற்றால் உடல் நிலை இன்னும் அதிகமாக மோசமடையலாம் என்பதால் உடல் நிலையைப் பாதுகாக்க அதன் நலத்தை பராமரிக்க நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறே நோயாளி நோன்பு நோற்றால் நோய் இன்னும் அதிகரித்து நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க இருக்கிற உடல் நிலையை தொடர்ந்து பராமரிக்க நோன்பை விடுவதற்கு அவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இவ்வசனம் சொல்லும் செய்தி இதுதான் ; உடல் நிலையை சீராக வைத்துக் கொள்வதோடு அதை அப்படியே பராமரிக்க வேண்டும். இருக்கும் நிலைமை சீர்கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இது தான் முதல் சூத்திரம்.

இரண்டாவது சூத்திரம் தற்காப்பு.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ள வேண்டாம்.[அல்குர்ஆன் :4 ; 29]என்ற திருமறை வசனத்திலிருந்து பெறப்படுகிறது.

அதாவது உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை மேற்கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டாம். குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று பயந்தால் தண்ணீர் கொண்டு ஒழு செய்யவோ குளிக்கவோ வேண்டாம்.தயம்மும் செய்து கொள்ளலாம் என்ற சட்ட அனுமதியை இந்த வசனத்திலிருந்து இமாம்கள் ஆய்வு செய்து எடுத்துள்ளனர். அப்படியானால் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை விட்டும் உடலை தற்காத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் இரண்டாவது சூத்திரம்.

மூன்றாவது சூத்திரம், அல்குர்ஆனின் [2 ; 196]வசனத்திலிருந்து பெறப்படுகிறது.அதாவது ஹஜ்ஜி உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர் அதிலிருந்து விடுபடுவதற்கு முன்பு தலை முடியை சிரைக்கக் கூடாது.ஆனால் அவர் தலையில் [பேன்,புண்,வலி ஆகியவைகளால்] இடையூறுள்ளவராக இருந்தால் முடியிறக்கிக் கொள்ளலாம்.பிறகு அதற்காக பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று மேற்படி வசனம் தெளிவாகப் பேசுகிறது. நோய்க்காரணிகளை நீக்க வேண்டும் என்ற உடல் நலத்திற்கான மூன்றாவது விதியை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது எனலாம்.

நோய் கண்டவர்கள் நோய் விலக முயற்சி செய்ய வேண்டும்.இது மூன்று வகை.

முதலாவது ; மருத்துவம் பார்ப்பது.வைத்தியம் செய்வது. இரண்டாவது ; ஓதிப்பார்ப்பது.
மூன்றாவது ; துஆ செய்வது.

இம்மூன்று முறைகளும் ஆரோக்கியமான வழிமுறைகளே. இதில் எதுவும் தடை செய்யப்பட்டதல்ல.மூன்று வழிமுறைகளையும் ஒரு சேர மேற்கொள்வது மேலானதாகும்.இப்படி வைத்தியம் பார்ப்பதில் நல்ல குணம் கிடைக்கும்.இதில் எதுவும் இறை நம்பிக்கைக்கு எதிரானதோ களா கத்ர் – இறைவிதி விசுவாசத்திற்கு முரணானதோ அல்ல.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمَا أَيُّكُمَا أَطَبُّ فَقَالَا أَوَ فِي الطِّبِّ خَيْرٌ يَا رَسُولَ اللَّهِ فَزَعَمَ زَيْدٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنْزَلَ الدَّوَاءَ الَّذِي أَنْزَلَ الْأَدْوَاءَ

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் தங்களது முஅத்தாவில் பதிவு செய்தி ருக்கும் ஒரு ஹதீஸில் ; நபி [ஸல்] அவர்கள் இரண்டு மனிதர்களிடம் உங்களில் கைதேர்ந்த மருத்துவர் யார்?எனக்கேட்க அதற்கு அவ்விருவரும் ; அல்லாஹ்வின் தூதர் அவர்களே [இஸ்லாமிய பார்வையில்] மருத்துவத்தில் [குணம் கிட்டி] பலன் கிடைக்குமா ?[அதை செய்யலாமா ?] எனக் கேட்டனர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் அருளினார்கள் ; “நோயை இறக்கி வைத்த வனே மருந்தையும் இறக்கி வைத்தான்” என்றுரைத்தார்கள்.அதாவது மருத்துவம் பார்ப்பதும் இறை ஏற்பாடு தான்.இஸ்லாத்தில் ஏற்புடையதுதான் என்று தெளிவுபடுத்தினார்கள்.


 عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ قَالَ
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا قَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ

ஒரு நபித்தோழர், நபி [ஸல்] அவர்களிடம் வந்து,மருத்துவம் பார்க்கலாமா ? ஓதிப்பார்த்து மந்திரிக்கலாமா ? அது இறைவனுடைய விதிக்கு – களா கத்ருக்கு – இறை ஏற்பாட்டுக்கு மறுப்பானதா ? இறை விதியில் எதையாவாது அது மாற்றுமா ? என வினவியபோது, அதுவும் [மருத்துவம் பார்ப்பதும்,ஓதிப்பார்ப்பதும்] இறைவிதி – ஏற்பாட்டில் உள்ளது தான் என்று பதிலளித்தார்கள். [திர்மிதி]

ஆக மருந்தைக் கொண்டு குணம் கிடைப்பது என்பது சாப்பிடுவதைக் கொண்டு பசி அடங்குவது போல.குடிப்பது கொண்டு தாகம் தீருவது போல.பெரும்பாலும் பலன் கிடைக்கும்.சில சமயம் இறை நாட்டப்படி நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமலும்,மருந்து வேலை செய்யாமலும், நிவாரணம் கிடைக்காமலும் போகலாம்.

பொதுவாக நோயுக்கு மருத்துவ சிகிச்சை செய்வது,ஓதிப்பார்ப்பது, துஆச்செய்வது இம்மூன்றுமே நபி [ஸல்] அவர்களின் நடையும் வழிமுறையும் தான்.நாயகம் [ஸல்] அவர்கள் தங்களுக்கே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்களிடம், உங்களுக்கு மருத்துவ ஞானம் எங்கிருந்து கிடைத்தது ? மருத்துவக் கல்வியை யாரிடமிருந்து கற்றீர்கள் ? இவ்வளவு மருத்துவக் குறிப்புகள் கூறுகிறீர்களே என்று அவர்களது சகோதரி மகன் உர்வா [ரலி] அவர்கள் வியந்த போது ஹாய் உர்வா! என தோளைத் தட்டி சந்தோஷப்பட்டு சொன்னார்கள் ;  மருத்துவக் குறிப்புகளை நபி [ஸல்] அவர்களிடமிருந்து பெற்றேன்.
இதல்லாமல் நபி [ஸல்] அவர்களுக்கு கடைசி காலத்தில் மருத்துவர் களின் ஆலோசனையின் படி செய்ய வேண்டிய எல்லா மருத்துவத் தையும் சொன்னபடி சொன்ன நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொடுத்து நர்ஸாக இருந்து நானே கவனித்தேன் என்று பெருமிதத் துடன் கூறினார்கள். இந்த செய்தி முஸ்னது அஹ்மதில் பதிவாகி யுள்ளது.

இதன் படி நாயகம் [ஸல்] அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யப் பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.இதல்லாமல் இறைத்தூதர் நபி [ஸல்] அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓதிப்பார்ப்பதோடு மற்றவர் களையும் ஓதிப்பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.
عَنْ عَائِشَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ

நபி [ஸல்] அவர்கள் படுக்கைக்குச் சென்றால் தங்களது இரண்டு கரங்களை [துஆ ஓதுவதைப் போல] ஒன்று சேர்த்துஅதில் குல்ஹுவல்லாஹு அத்தியாயம் [112] மற்றும் குல் அவூது பிரப்பில் ஃபலக்,குல்அவூது பிரப்பின்னாஸ் [113,114] ஓதி அவ்விரண்டு கையிலும் ஊதுவார்கள்.பிறகு அவ்விரண்டு கையைக் கொண்டு உடம்பில் முடிந்தளவு எல்லாப் பகுதியிலும் தடவுவார்கள்.தலை முகத்திலிருந்து ஆரம்பித்து உடலின் முன்பாக முழுவதும் தடவுவார்கள்.இப்படி மூன்று முறை செய்வார்கள். [புகாரி ; 5017]


عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا. 
   
அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் ;   அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையென்றால் தங்களின் மீது தாங்களே [குர்ஆனின்]பாதுகாப்பு அத்தியாயங்களை [113, 114] ஓதி ஊதிக் கொள்வார்கள்.அவர்கள் ரொம்ப முடியாமல் போன போது நான் அவர்கள் மீது ஓதிப் பார்த்தேன்.அவர்களின் புனிதமான கையில் ஓதி அந்தக்கையால் அதன் பரக்கத்தை நம்பி அவர்களைத் தடவினேன். [புகாரி ; 5016, முஸ்லிம் ; 2192]


عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ  قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ « تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ »

நபித்தோழர்கள் ஒரு முறை நபி [ஸல்] அவர்களிடம், நோயுக்கு நாங்கள் மருந்தெடுத்துக் கொள்ளலாமா ? எனக்கேட்ட போது இறையடியார்களே! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருத்துவ நிவாரணம்,இன்னொரு அறிவிப்பில் அதற்குரிய மருந்தில்லாமல் ஏற்படுத்த வில்லை.முதுமையைத் தவிர.[அபூதாவூது ; 3855]
இந்த நபிமொழி மருந்தெடுப்பது அப்திய்யத் - இறையடிமைத்துவம், தவக்குல் - இறைவனிடம் பொறுப்பு ஒப்படைப்பது,ஈமான் - இறை நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.


عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ ».


எல்லா வியாதிக்கும் மருந்துண்டு.வியாதியை மருந்து அடைகிற போது இறை நாட்டப்படி அது குணமாகும். [முஸ்லிம் ; 2204]


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.


சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

திக்ர் குறித்த திருமறை வசனங்கள் சில

தொழுகையை விட்டவரின் கதி !!!
உடையநாடு பெண்கள் அரபுக் கல்லூரி, மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா

2014-08-25 10.01.45
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தஞ்சை மாவட்டம், பேராவூரணி, உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபுக் கல்லூரி. மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுர மாவட்டம்,சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர், மலேசியா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா I.சைய்யது முகம்மது புகாரி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் அடிக்கல் நாட்டி தலைமையேற்றார்கள்.

2014-08-25 10.56.04
நிகழ்ச்சியில் மௌலானா அகமதுஷா, ஏர்வாடி மௌலானா இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித் தருவதாக மலேசிய தொழிலதிபர்,அல்ஹாஜ் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான  ஜனாப் ரஜாலுத்தீன்,  ஜனாப் ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடத்தை துவக்கி வைத்தனர். வஸ்ஸலாம்.

நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, August 26, 2014

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் புனித ஹஜ் பற்றிய பேருரை.


வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் 
முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி
முதல்வரும்,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம்
மஹ்ழரி அவர்களின் புனித ஹஜ் பற்றிய பேருரை.

மௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ஹழ்ரத் M. A, M.Phil அவர்களின் சிறப்புப் பேருரை


 சென்னை அடையார் குராஸானி பீர் தர்ஹா பள்ளி,தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ஹழ்ரத்  M. A, M.Phil அவர்களின்  ஹஜ் மற்றும் உம்ராவைப் பற்றிய சிறப்புப் பேருரைவெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

புனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான விளக்கம்


சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.
ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 
புனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான பேருரை.வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

Monday, August 25, 2014

பிக்ஹு கருத்தரங்கம்


சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடைபெற்ற தூத்துக்குடி விவாத வெற்றி விழா நிகழ்வுகள்...


நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில் நடைபெற்ற தூத்துக்குடி விவாத வெற்றி விழா !!!


சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

புனிதம் வாய்ந்த கஸீதத்துல் புர்தா இயற்றிய கவிஞரும் இயற்றப்பட்ட சூழலும் !!!


புனிதம் வாய்ந்த கஸீதத்துல் புர்தா ஷரீஃப் ஓர் ஆய்வு

\


Friday, August 22, 2014

யஃஜூஜ் மஃஜூஜ் ஓர் ஆய்வு !!!


ஈடு இணையற்ற திருத்தப்படாத இறைவேதம்

           


  وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ  لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ 

நிச்சயமாக குர்ஆனாகிறது கண்ணியமான வேதமாகும்.அதற்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ உண்மைக்கு புறம்பான எதுவும் அதனிடம் வராது.இது புகழுக்குரிய ஞானமிக்க அல்லாஹ்விட மிருந்து இறக்கி அருளப்பட்டதாகும். [அல்குர்ஆன் : 41 ; 41,42]


அல்லாஹ் அருளிய அல்குர்ஆன் ஓர் அற்புதமான வேதமாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மைக்குப் புறம்பான விஷயமும் அதில் இல்லை.மனித அறிவு மாறலாம்.அதனால் அதன் முடிவு மாற்றப் படலாம்.ஆனால் திருமறை மாற்றப்படாது.ஏனெனில் அது முக்காலமும் உணர்ந்து உலகை சிருஷ்டித்த கர்த்தாவாகிய இறைவனால் இறக்கப்பட்டது.

இது இறுதி வேதம்.யுக முடிவு வரை தீர்வு சொல்லும் நிறைவான தொரு சட்டக்களஞ்சியம்.எல்லாக் காலத்திற்கும்,எல்லா நாட்டிற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தக் கூடியது.எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் இறுதியானது,முடிவானது. அதற்கு மாற்றமாக எந்தக் கருத்து வந்தாலும் அது ஜெயிக்காது, நிலைக்காது.

ஆனால் மனிதன் முக்காலத்தையும் அறிந்தவன் அல்ல,அவன் முழுமையாக பார்ப்பவனும் அல்ல, அவனுக்கு ஒரு பக்கம் தான் தெரியும். அதனால் அவன் சொல்லக்கூடிய எந்த ஒரு தீர்வும், எந்த ஒரு தீர்மானமும் நிலையானதோ,நிரந்தரமானதோ அல்ல.அதனால் அவன் எழுதிய சட்டம் அவனால் திருத்தப்பட வேண்டியது வருகிறது.ஆகையால் அவனுடைய காலத்திலேயே அவன் இயற்றிய சட்டம் அவனாலேயே மாற்றம் செய்யப்பட்டு விடுகிறது.

நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிற போது, சட்டத்திருத்த மசோதா கொண்டுவராமல் எந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நிறைவு பெறுவதில்லை. இது,மனிதனுடைய அறிவு எந்தளவு குறுகியது என வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இராமேஸ்வரத்தில் ஒரு கப்பலில் தங்கம் கடத்துவதாக தகவல் வந்தது. உடனே போலிசார் அந்தக் கப்பலை மடக்கி ‘மெட்டல் டிடக்டர்’ கருவி கொண்டு சோதித்துப் பார்த்தார்கள்.அப்போது அதில் தங்கம் இருப்பது உறுதியானது.ஆனால் கப்பலில் முழுமையாகத் தேடியும் ஒரு துளி கூட தங்கம் கிடைக்க வில்லை.

கருவி சொல்கிறது தங்கம் இருக்கிறது என்று. ஆனால் கப்பலில் தேடிப் பார்த்தால் தங்கம் கிடைக்க வில்லை. இறுதியில் என்னவென்று பார்த்தால், கப்பலுக்குரிய நங்கூரத்தை தங்கத்தில் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவானது.கடத்தியவன் மீது வழக்கு பாய்ந்தது. வழக்கறிஞர் ; கப்பலில் தங்கம் கடத்தக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அந்தக் கப்பலின் நங்கூரத்தை எந்த மெட்டீரியலில்­, எந்த உலோகத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.எனவே சட்டப்படி குற்றமில்லை என வாதிட்டார்.

நிதிபதி, இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு, அவர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியது வந்தது. கடைசியில் அவர் இது மாதிரியான நூதனக் கடத்தலைத் தடுப்பதற்குத் தேவை யான சட்ட வாசகத்தைத் திருத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார்.

மனிதனுடைய சட்டங்களில் இப்படித்தான் மாற்றம் நிகழும்.ஆனால் திருக்குர்ஆன் அல்லாஹ் அருளிய வேதம்.அதில் இதுவரை எந்தத் தவறும் கண்டு பிடிக்கப்பட வில்லை. யாராவது தவறு இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் அவனது அறிவைத்தான் திருத்த வேண்டுமே தவிர திருக்குர்ஆனை அல்ல.ஒரு முறை ஜவஹர்லால் நேரு அவர்கள் “இஸ்லாத்தில் உள்ளது பாதி தான் எனக்குப் புரிகிறது” என்று சொன்ன போது,”அப்படியானால் உங்கள் அறிவு பாதி தான் நிறைவு பெற்றுள்ளது” என்றாராம் அபுல்கலாம் ஆசாத் அவர்கள்.

திருமறைக் குர்ஆன் திருத்தம் தேவைப்படாத வேதம்.ஏனெனில் فاعلموا انما انزل بعلم الله இது அல்லாஹ்வின் அறிவைக்கொண்டு அருளப்பட்டது. அதனால் அதிலுள்ள செய்தி எதுவாக இருந்தாலும்,எத்தனைக் கேள்விகள் அதில் கேட்கப்பட்டாலும்,எத்தனை விமர்சனங்கள் அதில் எழுந்தாலும் அது நீடித்து நிலைபெற்றதாகவே இருக்கும். இனி உலக அழிவு நாள் வரை அது உயிருள்ள வேதமாகவே ஜொலிக்கும்.
குர்ஆனைக் குறைவு படுத்துவதற்காக வேண்டி கேட்கப்படுகிற கேள்விகள், அதன் நிறைவைத்தான் நிலைநாட்டியது.

குர்ஆனில் அல்லாஹ் நரகத்தை பற்றி ஒரு வசனத்தில் ;


أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ  إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ  إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ

கள்ளிமரம் என்பது பாவிகளுக்கான உணவு. நரகத்தில் கிடைக்கும் அந்த மரம், நரகத்தின் அடிப்பாகத்திலிருந்து முளைத்து வெளிவருகிறது [37 :62 ,63,64] என்று சொன்னான்.

அபூஜஹ்லும் அவனது கூட்டாளியும் இதைக் கேட்டதும் கேலி செய்தார்கள். நரகம் என்றால் நெருப்பு.அது கல்லையும் எரித்து விடும் என்று நீங்கள் தான் குர்ஆனில்[2 :24] وقودها الناس والحجارة வந்திருப்பதாகச் சொல்கின்றீர்கள். அப்படியென்றால் எப்படி நரகத்தில் மரம் முளைக்கும்? மரத்தை நெருப்பு கரித்து விடாதா? இது அறிவுக்கு எப்படி பொருந்தும் என்று அவன் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டான்.

அவனது இந்தக் கேலி வாதம் ஒரு வகையில் நியாயமாக தெரிந்தாலும், அல்லாஹ் அந்த வசனத்தை மாற்ற வில்லை. மட்டுமல்ல, நான் சொல்வது தான் உண்மை. அதில் எந்த மாற்றங் களுக்கும், திருத்தங்களுக்கும் உரிய விஷயங்கள் இல்லை என்பதை ஆணித்தரமாக உலகத்திற்கு நிரூபிக்க குர்ஆனின் பல்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப அந்த வசனத்தைக் கொண்டு வந்தான்.

பொதுவாக இஸ்லாத்திற்கு எதிராகவும், இறைவசனத்திற்கு எதிராகவும் கேள்விகள் கேட்கப்படும் பொழுதெல்லாம் இஸ்லாம்  பலவீனமாகு வதில்லை. மாறாக இஸ்லாத்தின் பலம் அங்கு தான் வெளிப்படுகிறது.

அகிலத்தில் அறிவும்,ஆராய்ச்சியும் வளர வளர திருக்குர்ஆன் இன்னும் அதிகமாக ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறது.இந்த வகையில் நெருப்பு மரத்தைப்பற்றிய வசனம் ஒரு புரட்சிகரமான கருத்தை அறிவியல் உலகின் முன் வைத்தது.இது ஈமானு [நம்பிக்கை] க்கு ஒரு சோதனையாகவும்,அறிவியலுக்கு ஒரு சவாலாகவும் அமைந்தது.


وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآَنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا

இந்த வசனம் அவநம்பிக்கை உள்ளோருக்கு “நெருப்பு மரம்” அசாத்தியமானதாகவும் நம்பிக்கை உள்ளோருக்கு சத்தியமானதாகவும், சாத்தியமானதாகவும் இருக்கிறது.

பொதுவாக நெருப்பு மரத்தை எரிப்பது உண்மை தான். ஆனாலும் எல்லா வஸ்துவையும்,எல்லா மரத்தையும் அந்த நெருப்பு எரித்து விடாது. நரகத்தில் முளைக்கக் கூடிய மரம், அது “நெருப்பு மரம்” என்று குர்ஆன் அதற்கு பெயர் சொல்கிறது.

தரையில் முளைக்கும் மரத்தை நெருப்பு எரித்து விடும்.ஆனால் நெருப்பில் முளைக்கும் மரத்தை நெருப்பு கரித்து விடாது.

கரடிகளில் பனிக்கரடி என ஒரு வகை இருக்கிறது. சாதாரன காட்டிலே அவைகளால் வாழ முடியாது. சாதாரன காட்டிலே உள்ள கரடி பனியிலே வாழ முடியாது. பனிக்கரடி அங்கே வாழ்வதற்கு தகுந்த உடல் அமைப்பைப் பெற்றிருக்கிறது. அது போல நரக நெருப்பில் நெருப்பு மரம் அதற்குத் தோதுவாக நெருப்பில் எறிந்து போகாத, நெருப்பில் தாக்கு பிடிக்கக் கூடியதாக அங்கே எழுப்பப்பட்டிருக்கிறது.

தீ எல்லாவற்றையும் எறித்து விடாது என்பதற்கு எத்தனையோ அறிவியல் ஆதாரங்களும் நிதர்சனமான நடைமுறை உதாரணங் களும் இருக்கிறது.தீக்கோழி நெருப்புக் கங்கை அப்படியே விழுங்கி விடும். நாம் விழுங்கினால் வாய் பொத்து விடும். ஆனால் அந்த தீக்கோழி நெருப்பினால் சூடாக்கப்பட்ட இரும்பை அப்படியே விழுங்கி விடுகிறது. அதற்கு வாய் பொத்துப் போவதில்லை. நமக்கும் அது மாதிரியான சதை தானே என நாம் நினைக்கலாம். ஆனால் வித்தியாசம் இருக்கிறது.நம்முடைய சதை நெருப்பில் வெந்து விடுகிறது. தீக்கோழியின் வாய் வெந்து போவதில்லை.

சமந்தல் என்று ஒரு பறவை [அல்லது ஒரு பிராணி] இருக்கிறது. அதனுடைய முடியிலிருந்து கைத்துண்டு [கர்சீஃப்] செய்கிறார்கள். அந்த கைத்துண்டின் விஷேசம் என்னவென்றால், அது அழுக்கானால் தண்ணீரைக் கொண்டு கழுகத் தேவையில்லை. நெருப்பில் போட்டால் போதும். அது சுத்தமாகி விடும். அல்லாஹ்வுடைய படைப்பில் இப்படியும் இருக்கிறது.

“அல்ஹரீருஸ்ஸக்ரீ” [asbestos silk] என்று ஒரு பட்டு இருக்கிறது. அந்த சில்க் துணியின் விஷேசம் என்னவென்றால் அதை நெருப்பில் போட்டால் எரிந்து போகாது,கரிந்து போகாது,அழுக்கு நீங்கி சுத்தமாகி விடும். தீயணைப்புப் படை வீரர்களுக்கு ஒரு கோட் கொடுக்கிறார்கள். அந்த கோட்டை அணிந்து கொண்டு அவர்கள் தீயில் குதிப்பார்கள். அந்த நெருப்புப் பிடிக்காத கோட் இந்த பட்டிலிருந்து தான் செய்யப் படுகிறது. எனவே நெருப்பு பட்டால் பற்றி எரியும் துணிகளில் நெருப்பினால் பற்றி எரியாத துணிகளும் இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.

திருமறைக் குர்ஆனில் யாஸீன் என்ற அத்தியாயத்தில் ;  


الَّذِي جَعَلَ لَكُمْ مِنَ الشَّجَرِ الْأَخْضَرِ نَارًا فَإِذَا أَنْتُمْ مِنْهُ تُوقِدُونَ

பசுமையான மரத்திலிருந்து நெருப்பை அவன் தான் உங்களுக்கு உண்டாக்கினான்.அதிலிருந்து [நெருப்பை] நீங்கள் மூட்டுகிறீர்கள் {36 ; 80} என்று அல்லாஹ் சொல்கிறான்.

நெருப்பு, மரத்தைக் கரித்து விடுகிறது. ஆனால் மரத்திலிருந்து, அதுவும் பச்சை மரத்திலிருந்து தான் நெருப்பையே  உண்டாக்குவதாகத் திருக்குர்ஆன் சொல்கிறது.

அந்தக் காலத்தில், நமது நாட்டில் “சக்கி­முக்கி கல்” என்று ஒன்று இருந்தது.நெருப்பு தேவைப்படுவோர் அந்தக் கல்லை ஒன்றோடு ஒன்றை உரசி நெருப்பை உண்டாக்கிக் கொள்வார்கள். காடுகளில் இன்றும் கூட மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது நெருப்பு பற்றி விடுகிறது.

அரபு நாட்டில் “மரக்” ,“அஃபால்” என்று இரு மரங்கள் இருக்கிறது.  மரக் என்பது ஆண் மரம். அஃபால் என்பது பெண் மரம். நெருப்புத் தேவைப்படும் போது அரபு பள்ளத்தாக்கில் காணப்படுகின்ற அந்த இரண்டு செடிகளையும் எடுப்பார்கள். பல் குத்துவதற்கு பயன்படுகிற குச்சியைப் போல இரு குச்சியையும் எடுத்து, ஆண் மரத்தின் குச்சியை பெண் மரத்தின் குச்சியோடு உரசுவார்கள். அங்கிருந்து நெருப்பு பிடிக்கும். இது, நெருப்புப் பற்ற வைக்க அரபுகளின் அன்றாட பழக்கமாக இருந்தது. எனவே தான்


فاذا انتم منة توقدون

“அந்த பச்சை மரத்திலிருந்து நெருப்பை பற்ற வைக்கின்றீர்கள்” என்று அல்லாஹ் சிந்தனையை தூண்டுகிறான்.

இதில் இன்னோரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அஃபால்-மரக் என்ற  மரக்குச்சி எந்தளவுக்கு பசுமையாக இருக்கும் என்றால்,تجري منه الماء  அதிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். தண்ணீர் வழிந்து கொண்டே இருக்கும் அந்த நேரத்தில் அதிலிருந்து நெருப்பு வருகிறது என்று சொன்னால், நெருப்புக்கு முரணான தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் பச்சை மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கும் சக்தி படைத்த அல்லாஹ்வுக்கு நரகத்தின் அடிப்பகுதியில் மரத்தை வெளியாக்க சக்தி இருக்காதா?

முரண்களிலிருந்து முரண்களை படைப்பதில் தான் அல்லாஹ்வுடைய சக்தியும் வல்லமையும் இருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா!!!


وقال الحكماء في كل شجر نار الا العناب ما من شجر او حجر الا وفيه النار

எல்லா மரத்திலும் நெருப்பு உண்டு.இலந்தை மரம் தவிர.எந்த மரமும்,அல்லது கல்லும் அதில் நெருப்பு இல்லாமல் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


الارض مملوءة نارا ما خلص منه الا قشرتها

பொதுவாக இந்த பூமி நெருப்பினால் சூழப்பட்டு தீயால் நிரப்பப் பட்டிருக்கிறது.அதன் மேல் தொளியைத் தவிர தீயை விட்டும் தப்பிய பகுதி எதுவும் இல்லை.


الماء نفسه مادة نارية 8 اقسامه اكسوجين وهي مادة تشتعل سريعا  9 اقسامه اودرجين

அடுத்து, நெருப்பை அனைக்கும் தண்ணீரை எடுத்துக் கொண்டால் அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,அதன் மூலப்பொருளே நெருப்பாகும்.தண்ணீர் என்பது, ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் உடைய கலவையாகும். இதில் எட்டு சதவீதம் ஆக்ஸிஜனும் ஒன்பது சதவீதம் ஹைட்ரஜனும் இருக்கிறது. ஆக்ஸிஜன் எளிதில் தீப்பற்றும் ஒரு மூலப்பொருளாகும்.


وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

கடல் பற்றி எரியும் [3 :82]என்று அல்லாஹ் சொல்கிறான். கடல் எப்படி பற்றி எரியும் ? கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறது, கொளுந்து விட்டு எரியும் நெருப்பு இருக்கிறது என்று இன்று ஆய்வுகள் சொல்கிறது.

ஆனால் அன்றே அண்ணல் நபிகள் நாயகம் )ஸல்( அவர்கள்,
ان تحت البحر نارا கடலுக்கு அடியில் நெருப்பு இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். நீரும் நெருப்பும் எப்படி ஒன்று சேரும் ? நெருப்பை நீர் அணைத்து விடுமல்லவா... என்றால்,  கடலுக்கு அடியில் எப்படி நெருப்பு இருக்க முடியும்? என்றால், அல்லாஹ்வால் அது முடியும் என்பதை நாம் நம்புகிறோம்.ஆராய்ச்சிகளும் அதை உறுதி செய்கிறது.
பெரும் புயல் வீசும் போது கடல் அலைகள் அதிக உயரத்திற்கு பொங்கி எழுந்து நெருப்பு ஜுவாலை கிளம்புவதை அனுபவ ரீதியாக உலகம் கண்டிருக்கிறது.


  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ  
என்ற அந்த வசனத்தை [3;82] பிரான்ஸ் நாட்டின் ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். கடலுக்கு அடியில் 30 ஆயிரம் மீட்டர் டர்லிங் செய்து பார்த்தார்கள், அப்போது அங்கே கொதிக்கும் தண்ணீரும்,சேறும் சகதியும் வரத்தொடங்கியது. இன்னும் உள்ளே போகப் போக கொதி மேலும் அதிகமாகி ஒரு கட்டத்தில் அந்த இயந்திரமே உருகி விட்டது என்று நாம் அந்த செய்தியில் பார்க்கிறோம்.

மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை, கப்ருடைய வாழ்க்கை, சொர்க்கம், நரகம் இவையெல்லாம் உண்மை என்று நாம் நம்புகிறோம். இது அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும் அறிவுக்கு முரணான விஷயமல்ல.இது தான் இஸ்லாத்தில் எல்லாக் கொள்கைக ளுக்கும் சட்டங்களுக்கும் உள்ள பொதுவான நிலை. சில விஷயங்கள் இப்போது அறிவுக்கு புலப்படாமல் இருக்கலாம்.ஆனால் எதுவும் அறிவுக்கு எதிரானதாக இல்லை. 

இன்றைய நவீன விஞ்ஞான யகத்தில் இதை நாம் கண்கூடாக விளங்கிக் கொள்ளக்கூடிய உண்மை சம்பவம் கூட பல முறை நிகழ்ந்திருக்கிறது.அறிவுக்கு மறைவான கப்ருடைய வேதனை விஷயமும் கூட அறிவின் வெளிச்சத்தில் பிரகாசிப்பதை இதோ பாருங்கள்.

சைபீரியா நாட்டில் ரஷ்யாவினுடைய ஒரு ஆய்வுக்குழு பூமியைத் தோண்டினார்கள். தோண்டி அதன் மறு பக்கத்தை அடையலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆறு கிலோ மீட்டர் வரை தான் செல்ல முடிந்தது.அதற்கு மேல் செல்ல முடிய வில்லை.ஒரு தடுப்பு அரண் அவர்களை தடுத்தது. 

அவர்கள் டிரில்லிங் செய்த இயந்திரம் அதற்கு மேல் வேலை செய்ய வில்லை. ஸ்தம்பித்து நின்று விட்டது மட்டுமல்ல அது எரிந்தும் போனது. அங்கே தோண்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு பேயறைந்ததைப் போல அதிர்ச்சிக் குள்ளாகி பீதியோடு மேலே ஓடி வந்து விட்டார்கள்.


என்ன விஷயம் என்று கேட்ட போது, அங்கே பயங்கரமான அலறல் சப்தம் கேட்கிறது.சித்திரவதை செய்யப்படுபவர்கள் எப்படி வேதனை தாங்காமல் அலறுவார்களோ அதுமாதிரியான ஒரு கூப்பாடு அங்கே கேட்கிறது என்று சொன்னார்கள். அது என்ன கூப்பாடு ?கப்ருகளில் வேதனை செய்யப்படுபவர்களின் கூப்பாடு தான்.

பாவிகளின் ஆன்மா சிஜ்ஜீன் எனும் அகல பாதாளத்தில் இருக்கிறது. 


كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ 

கப்ரில் வேதனை நடைபெறுகிறது, சப்தங்கள் வருகிறது, அலறல் கேட்கிறது அதை நான் கேட்கிறேன்,மற்றும் உலகில் வாழும் உயிரினங்கள் மனு ஜின்னைத்தவிர அனைத்தும் அதைக் கேட்கின்றன என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள். இந்த உண்மையைத்தான் அந்த தொழி லாளர்கள் நேரிலே கேட்டு விட்டு வந்தார்கள்.

நான் சிறு வயதாக இருக்கும் போது இஷாவுக்குப் பிறகு ஒரு கப்ரு தீப்பற்றி எரிவதை நானும் பள்ளிவாசல் மோதினாரும் பார்த்திருக் கிறோம்.அன்று தான் அங்கே பிரபல்யமான வட்டி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அடக்கும் செய்யப்பட்டிருந்தது. இப்படி சில சமயத்தில் மறைவான இந்தக் காட்சிகளை அல்லாஹ் காணவும்,கேட்கவும் வைக்கிறான்.

இவ்வாறு திருக்குர்ஆன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எத்தனை ஆயிரம் கேள்விகள் அதில் கேட்கப்பட்டாலும், மாற்றத் தகுந்ததல்ல. அது மாற்று குறையாத தங்கம் தான் என நிரூபணமாகியிருக்கிறது.

ரப்புல் ஆலமீன் அத்தகைய குர்ஆனை நமக்கு தந்திருக்கிறான், அதன் படி நடப்போம், ஈருலகிலும் நாம் வெற்றி பெறுவோம். அல்லாஹ் நமது ஈமானை வெளிச்சமாக்குவானாக. ஆமீன்.


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

தொழுகையின் தொலை நோக்கு !!!!அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் விஷேசமான கிருபை கொண்டு மிஃராஜ் எனும் வின்னேற்றப் பயணம் மேற்கொண்டு அதில் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு உன்னதமான ஒரு நினைவுப் பரிசை வாங்கி வந்தார்கள் அது தான் தொழுகை.

அரசாங்கத்தினுடைய மிகப்பெரிய உயர்ந்த விருது நமக்கோ, அல்லது நமது தந்தைக்கோ கிடைத்தால் அந்த உயர்ந்த விருதை நாம் பேணிப் பாதுகாப்போம். அதைப் போல கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த அந்த நினைவு சின்னமான இந்தத் தொழுகை யைப் பாதுகாக்க வேண்டியது நம் கட்டாயக் கடமை.அதை முறையாக ஒழுங்காக பேணி  நிறைவேற்ற வேண்டியதும் நமது பொறுப்பாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள். தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தது. தங்களுக்கு கிடைக்கப் பெற்ற எல்லா ஏற்றங்களும், பாக்கியங்களும் தன் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே அவர்களுக்கு உண்டு.

இப்படித்தான் உண்மையான குரு இருக்க வேண்டும். ஒரு காமிலான ஷைகு – குருநாதர், தன்னுடைய சீடர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று மட்டும் நினைக்க மாட்டார்.தன்னை விடவும் உயர்ந்து செல்ல வேண்டும் என்று கருதுவார். சீடர்களின் வளர்ச்சியைப் பெருமையாகக் கருதாதவர் பரிபூரணமான குருவாக இருக்க மாட்டார்.

குரு வாயிலானவர். அதன் வழியே சீடன் அப்பால் சென்று விட வேண்டும்.ஷைகு என்பவர் உங்களை விட்டு மட்டுமன்று தன்னை விட்டும் முக்தி தரக்கூடியவர். இந்த வகையில் தான் நபி ஸல் அவர்கள் தங்களுடைய தோழர்களை, உம்மத்தினரை தனிச்சிறப்பு மிக்கவர்களாக ஆன்மீகத்தில் உயர் நிலையைப் பெற்றவர்களாக தரணியில் தனித்துவம் பெற்றவர்களாக உருவாக்கினார்கள்.


إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ
“அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நபியே! உங்களுக்கு ஸலவாத்து சொல்கிறார்கள்” என்று வசனம் {33 ; 56} இறங்கிய போது,
“யாஅல்லாஹ்! எனக்கு மட்டும் தான் ஸலவாத்தா! என் சமூகத்திற்கு இல்லையா? நீயும் உன் வானவர்களும் என் சமூகத்திற்கும் ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொண்டான். உடனே


هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ
அல்லாஹ்வும் அவனது வானவர்களும் உங்களி {ன் சமூகத்தி] ன் மீது ஸலவாத்து கூறுகிறார்கள் [33 ; 43] என்ற வசனத்தை அருளினான்.

வஸீலா என்றொரு உயர்ந்த ஸ்தானம் சொர்க்கத்தில் உண்டு. அது பெருமானாருக்குத் தான் நிச்சயிக்கப்பட்டது. என்றாலும் நபி (ஸல்) அவர்கள், எனக்கு வஸீலா என்ற அந்த அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நீங்கள் அல்லாஹ்விடத்திலே பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

அண்ணல் நபிக்கு அவ்வந்தஸ்து கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. இருந்தாலும் ஏன் நம்மைக் கேட்கும் படி சொன்னார்கள் என்றால், அதிலே நமக்கும் ஒரு பங்களிப்பு வேண்டும் என்பதற்காக. அதை நாம் கேட்கிற போது அதைக் காரணம் காட்டி நமக்குப் பரிந்துரை [ஷஃபாஅத்] செய்யலாம் என்பது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கம்.

மிஃராஜ் எனும் வின்னேற்றப் பயணத்தின் போது அல்லாஹுத் தஆலா, நபியவர்களே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும் என்று சொன்னான். அந்த நேரத்திலும் தன் சமூகத்தை மறக்காமல் எனக்கு மட்டும் தான் ஸலாமா...?  என்னுடைய சமூகத்திற்கும் வேண்டுமே என்று கேட்டுப் பெற்றார்கள் காருண்ய நபி [ஸல்] அவர்கள்.

السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين

அவர்கள் மிஃராஜிற்கு சென்று அல்லாஹ்வை தரிசித்தார்கள். அந்த தரிசனம் எனக்கு மட்டும் தானா? என் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டுமே என்று ஏங்கினார்கள். அதற்குப் பரிசாகத்தான் அல்லாஹ் நமக்குத் தொழுகையைக் கொடுத்தான். தொழுகை என்பது நமக்குக் கிடைக்கப் பெறுகிற ஒரு இறை தரிசனம். அந்த தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தயங்கக் கூடாது.அதை இடை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாக இருக்கிறது.


اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
(நபியே! குர்ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் பட்டதை நீர் ஓதுவீராக! தொழுகையையும் (அல்லாஹ் விதியாக்கிய வாறு) நிறைவேற்றுவீராக! நிச்சயமாகத் தொழுகை (அதை நிறை வேற்றுபவரை) மானக் கேடான செயலிலிருந்தும், மார்க்கத்தில் மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவு கூர்வது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரிதாகும்; இன்னும் நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான். குர்ஆன் [29 ; 45]

தொழுகையில் குர்ஆன் ஓதுவது இருக்கிறது,பிரார்த்தனை இருக்கிறது. எல்லாவற்றையும் விட மிகப் பிரதானமாக அல்லாஹ் வுடைய திக்ர் (தியானம்) இருக்கிறது. நாம் குர்ஆன் ஓதுகிறோம் என்றால், அல்லாஹ் வோடு பேசுகிறோம் என்று அர்த்தம். தூர்சீனா மலையில் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வோடு பேசினார் களே அந்த நிலையை நமக்கு தொழுகை பெற்றுத் தருகிறது.

நாம் தொழுகையில் குர்ஆன் ஓதுகிற போது அது மிஃராஜ்வுடைய ஸ்தானத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது.கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்தத் தொழுகையில் குர்ஆன் ஓதி கைகட்டி அல்லாஹ் வுக்கு முன்னிலையில் அவனைப் பார்ப்பதைப் போல வணங்க வேண்டும். பார்க்க முடிய வில்லையெனில் அவன் உங்களைப் பார்க்கிறான் என்ற உணர்வோடு வணங்குங்கள் என்று இஹ்ஸானுடைய உயர்ந்த நிலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.

உள்ளத்தை உருக வைத்த குர்ஆன்

தொழுகையில் திலாவத் – குர்ஆன் ஓதுவது இருக்கிறது என்பதல்ல. அது தான் தொழுகையின் ரூஹ் - உயிராகும். குர்ஆன் என்பது அல்லாஹ் வுடைய வசனம். அல்லாஹ் தன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தை. அந்த வசனம் நம்முடைய வாயில் வெளிப் படுகிறது. அது உள்ளத்தில் ஏற்படுத்துகிற புரட்சி, அதனால் ஏற்படுகிற மாற்றம் சாதாரணமானது அல்ல. அது மிகப் பெரிய சிந்தனைப் புரட்சியையும், மிகப்பெரிய இறை நம்பிக்கைப் புரட்சியையும் ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் அது அல்லாஹ் வுடைய அதிசயமான வேதம்.

உலகப் புகழ் பெற்ற காரிகளில் ஒருவர் அப்துல் பாஸித். அவருடைய கிராஅத்தைக் கேட்காத முஸ்லிம்கள் இருக்க மாட்டார்கள். உலகப் பிரசித்த பெற்ற அந்த காரி அப்துல் பாசித் அவர்களிடத்தில் கேட்கப் பட்டது ;  குர்ஆனை நீங்கள் உலகெங்கும் கொண்டு சேர்த்து விட்டீர்கள். எல்லோருடைய காதுகளிலும் கேட்க வைத்து விட்டீர்கள். குர்ஆன் ஒரு அற்புதம் தானே என்று. அதிலென்ன சந்தேகம்! குர்ஆன் ஒரு  அற்புதம், ஒரு அதிசயம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
அப்படியென்றால் அதை ஓதி ஓதி காலத்தைக் கழித்த உங்களுக்கு அது அற்புதம் என்பதில் ஏதாவது அனுபவம் உண்டா? என்று கேட்டனர். நிறைய அனுபவம் உண்டு என்ற போது, அதில் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை சொல்ல முடியுமா...?  தாரளமாகச் சொல்கிறேன்.

எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த நேரம் எகிப்தின் அதிபராக ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் இருந்தார்கள். அவர் ரஷ்யாவுக்கு செல்கிறார். ரஷ்யா கம்யூனிசத்தின் இரும்புப் பிடியில் இருந்த கால காட்டம் அது. அந்த நேரத்தில் அப்துன் நாசர் அவர்கள் ரஷ்யா வினுடைய சுற்றுப் பயணத்தையெல்லாம் முடித்து விட்டு அங்குள்ள கம்யூனிசத் தலைவர்களை  தனிப்பட்ட முறையில் சந்தித்தார்கள்.

அந்த தலைவர்கள் கேட்டார்கள் ;  “ஜமால் அவர்களே! எவ்வளவு காலத்திற்கு இஸ்லாத்தைக் கொண்டு திரிவீர்கள். மதத்தை தூக்கி எறியுங்கள், சிகப்பை வேதமாக ஏற்றுக் கொள்ளுங்கள். எங்கள் சித்தாந்ததிற்கு வாருங்கள், எகிப்தை நாங்கள் நவீன டெக்னாலஜி களைக் கொண்டு வளப்படுத்துகிறோம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு அதை இன்னும் நாங்கள் எந்தளவுக்கு கொண்டு செல்ல முடியுமோ அந்தளவுக்குக் கொண்டு செல்கிறோம். இஸ்லாத்தை தூக்கி எறிந்து விட்டு கம்யூனிசத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்கள். அந்நேரத்தில் எதுவும் கூறாமல் வந்து விட்டார்கள்.

இரண்டு வருடம் கழித்து மீண்டும் அவருக்கு ரஷ்யா செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது நீங்களும் ரஷ்ய பயணத்திற்கு தயாராகுங்கள், என்னோடு நீங்களும் வாருங்கள் என்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. ரஷ்யாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ?
எனது வேலை அல்லாஹ்வின் வேதத்தைப் ஓதுவது.எனவே சவூதி, துபாய்,மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றால் எனக்கு வேலை இருக்கும்.ஆனால் ரஷ்யா கம்யூனிச நாடு, அல்லாஹ்வே இல்லை என்று சொல்லக்கூடிய நாடு. அந்த நாட்டிற்கு என்னை ஏன் அதிபர் அழைக்கிறார் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

ஆனாலும், கூட சென்றேன். அங்கே கம்யூனிசத்தினுடைய முக்கியமான தலைவர்களெல்லாம் கூடி இருக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியிலே ஜமால் அப்துன் நாஸர் அவர்கள் ;  என்னோடு வந்திருக்கிற இந்த காரி ஸாஹிப் அவர்கள் உங்களுக்கு மத்தியிலே கொஞ்சம் நேரம் ஓதுவார்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். எதை ஓதுவார்கள்...? குர்ஆனை ஓதுவார்கள். தாராளமாக ஓதச் சொல்லுங்கள் என்று அவர்கள் அனுமதித்தார்கள்.

எந்த அத்தியாயம் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வாழ்விலே புரட்சியை ஏற்படுத்தியதோ, அவர்களுடைய வாழ்கையை புரட்டிப் போட்டதோ அந்த தாஹா என்ற அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தேன். இரண்டு பக்கங்கள் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்த பொழுது தான் குர்ஆனுடைய அற்புதத்தைக் கண்டேன்.

அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஒரு பிரலயமே அங்கு ஏற்பட்டிருந்தது. நான் ஓதி முடித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்த பொழுது அங்கிருந்த கம்யூனிசத் தலைவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்களுடைய கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கிறது, தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள்.

ஜமால் அப்துன் நாஸர், ஏன் அழுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அது தான் எங்களுக்கும் தெரியவில்லை. இவர் என்ன ஓதினார்.....? என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் ஓதியதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. அதில் ஒரு வசீகரம் இருக்கிறது. அது ஏதோ ஒரு மாற்றத்தை எங்கள் இதயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. என்ன காரணம் என்று தெரியாமலேயே அழுகை வருகிறது என்று கூறினார்கள்.

உலகத்திலே அல்லாஹ்வை மறுக்கக் கூடிய, உண்மையான வேதம் என்று ஏற்றுக் கொள்ளாத கம்யூனிசத் தலைவர்களான அவர்களு டைய இதயத்தைக் கூட மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இந்த குர்ஆனுக்கு  இருக்கிறது என்றால் அந்த குர்ஆன் நமது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ன!

அந்த அற்புதக் குர்ஆனை அதிகமதிகம் ஓத வேண்டும். எப்படி ஓத வேண்டும் ? அல்லாஹ்வுடைய வேதம் என்ற நினைப்போடு ஓத வேண்டும், அந்த உணர்வோடு ஓத வேண்டும், அந்த நம்பிக்கை யோடு ஓத வேண்டும். தனியாக மட்டுமல்லாமல் சிந்தனையோடு தொழுகையிலே ஓத வேண்டும். அப்படி ஓதுகிற பொழுது நாம் அல்லாஹ்வை தரிசிக்கக் கூடிய,அல்லாஹ்வோடு வசனிக்கிற ஒரு உன்னதமான மகத்தான பாக்கியத்தை நாம் பெறுகிறோம்.


وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آَمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
இத்தூதர் மீது இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை உணர்ந்து கொண்ட காரணத்தினால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நபியே! நீங்கள் காண்பீர்கள்.எங்கள் இறைவனே! நாங்கள் [இவ்வேதத்தின் மீது] நம்பிக்கை கொண்டோம். எனவே [இவ்வேதம் சத்தியமானது என்று] சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக என்று அவர்கள் கூறுவார்கள். [அல்குர்ஆன் : 5 ; 83]

நஜ்ஜாசி பாதுஷா - அபிசீனிய மன்னர் அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்க வில்லை. திருமறைக்குர்ஆனில் மர்யம் என்ற அத்தியாயம் அவருக்கு முன்னிலையில் ஓதப்படுகிறது. ஜாபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஓதினார்கள். அதைக் கேட்ட  பாதுஷா அவர்கள் அப்படியே அழுகிறார். அங்கிருந்த சபையோர்களும்,எல்லா பாதிரிமார்களும் அழுகிறார்கள்.

அதன் பின் அந்த மன்னர் பூமான் நபி (ஸல்) அவர்களிடத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைக்கிறார்கள்.அதிலே 70 பேர் கொண்ட கிருஸ்தவ அறிஞர்கள் அங்கே செல்கிறார்கள். அப்பொழுது பூமான் நபி (ஸல்) அவர்கள், யாஸின் என்ற அத்தியாயத்தை அவர் களிடத்தில் அழகாக ஓதினார்கள். அதை ஓதி முடிக்கிற போது அந்த 70 கிருஸ்தவ அறிஞர்களும் அதைக் கேட்டு மனமுறுகி கண்ணீர் சிந்திக் கொண்டிருக் கிறார்கள். இது எங்கள் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இறங்கிய வேதத்தைப் போலல்லவா!!! இருக்கிறது என்று சொல்லி விட்டு இறைவனையும்,இறைத்தூதர் நபி [ஸல்] அவர்களையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றார்கள்.

குர்ஆன் அற்புதமானது, அந்த அற்புதமான வேதத்தை நாம் அழுத்தமாக, திருத்தமாக, நம்பிக்கையோடு ஓதுகிற பொழுது அது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். புரட்சியை ஏற்படுத்தும், கண்களில் நீர் சிந்த வைக்கும்.

அப்பொழுது தான் அந்தக் குர்ஆன் நமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அர்த்தம். அல்லாஹுத்தஆலா அந்த சிறந்த மாற்றத்தை நம் அனைவருக்கும் தருவானாக!


என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, August 18, 2014

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !!!
இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, August 17, 2014

அமானிதம் பேணுவோம் !!!


selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
16 -08 -2014 சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

தலைப்பு ;- அமானிதம் பேணுவோம் !!!

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் .
முஹம்மது ஷாஃபி வாஹிதி
ஹஜ்ரத் அவர்கள்.

நாகை மாவட்டம்,ஆயப்பாடி அஞ்சுமன் சுப்பானுல் முஸ்லிம் சங்கத்தின் 75 -ஆம் வருடம் வைர விழா !!!

இச்சிறப்பு மிகு மாபெரும் வைர விழா,மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, August 16, 2014

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,48- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா,
நாள்  ( 20-08-2014 ) புதன்,பின்னேரம்.வியாழன் இரவு 7-00 மணிக்கு


தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம்.

இப்படிக்கு.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
            M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 

 S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.

விழாக் குழுவினர், பனைக்குளம்.


  
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.

மெஞ்ஞான கருவூலங்களே மேன்மைமிகு வலிமார்களே! நால்வகை அரண்போன்ற வலிமார்களே! நாடிவருவோரை காப்பீர்களே!

கவிஞர் நாகூர் காதர் ஒலி 1975 ல் எழுதிய பாடல் 
1977ல் பாடகர் A.ஜெய்னுல் ஆபிதீன் சிங்கப்பூர் 
மஜீது பிரதரஸ் ஆடியோ நிறுவனத்தில் பாடியது.

Friday, August 15, 2014

பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும்,குழந்தை வளர்ப்பிற்கான சிறப்பு பயிலரங்கம்!!!இச்சிறப்பு மிகு மாபெரும் பயிலரங்கம்,மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு