Posts

சால்னாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டுக்கும் வழங்கிடுவீர்!

Image
நபித்தோழர் அபுதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.எனக்கு எனது நேசர் நபி (ஸல்) அவர்கள் மூன்று உபதேசம் செய்தார்கள். (1) தலைமையின் சொல் கேளு,கட்டுப்படு, அந்த சொல் மூக்கு அறுபட்ட அடிமைக்குரியதாக இருப்பினும்சரி, (2) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து,பின்னர் உனது அண்டை வீட்டுக்காரர்களைப்பார்த்து அவர்களுக்கு அதிலிருந்து கொடுத்து விடு. (3) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு (நூல் --- முஸ்லிம்) இனியசகோதரா! இம்மூன்று உபதேசத்தை நீயும் செயல்படுத்து, முதலாவது தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது,தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பிலுள்ளவர் என்று பொருள்.எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித் தலைவர்,குடும்பத்தலைவர், நீசார்ந்த அமைப்பின் தலைவர்,பணிசெய்யும் நிறுவனத்தலைவர்,இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதன் மூலம் '' நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்,அவனது தூதருக்கும்,உங்களில் அதிகாரமுள்ளவருக்கும் வழிப்படுங்கள்'' (4;50) என்ற இறைவாக்கை காப்பாற்றுங்கள்.புகாரி (7144) முஸ்லிமுடைய அறிவிப்பில் '' விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலைமையின் சொ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு