Posts

ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை --இரண்டாம் பாகம்

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான்.  “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை  இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு. -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் صلي

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு