அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Wednesday, September 20, 2017

அழகன்குளம் அஷ்ஷைகு வருசை முஹம்மது வலியுல்லாஹ் !!!
அழகன்குளம் அடையப்பெற்ற ஆன்மீகச் சுடர்
அஷ்ஷைகு வருசை முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)

இவர்களின் 248 வது நினைவு நாள் விழா 16.09.2017 அன்று அஸருக்குப் பின் கொடியேற்றப்பட்டு அன்று மஃரிபிற்குப் பின் அவர்களின் மவ்லீது ஷரீப் ஆரம்பமானது. 25.09.2017 வரை மவ்லீது நடைபெறும். 2.10.2017 முஹர்ரம் பிறை 11 அஸர் தொழுகைக்குப் பின் கொடி இறக்கம் நடைபெறும்.

இவர்களும் பனைக்குளம் ஜும்ஆ மஸ்ஜிதில் கிழக்குப் பக்கம் அடங்கப் பெற்றுள்ள அஷ்ஷைகு ஆலியார் ஷைகு அப்பா (ரஹ்) அவர்களும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

இவர்களைப் பற்றிய சிறப்பு மவ்லீது கீழக்கரை ஞானக்கடல் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அந்த மவ்லீது ஷரீபையே நினைவு நாளில் ஓதப்படுகிறது.

அல்லாஹ் இத்தகைய சங்கைமிகு ஞானவான்களின் துஆ பரக்கத்தால் நமது இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கித் தருவானாக ஆமீன்.

நன்றி ;-பனைக்குளம் மதனீ ஆலிம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க 
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்