அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, October 25, 2012

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்குர்பானி கொடுப்பதால்

இறைக் கடமை நிறை வேறுகிறது.

மன நிம்மதி நிறைகிறது.

உறவுகள் ஒன்று கூடுகிறது.

ஏழைகள் பசியாறுகிறார்கள்.

பள்ளிமத்ரஸாக்கள் பயனடைகிறது.

இறையருல் இறங்குகிறது.

தியாக உணர்வு உயர்கிறது.

ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது.

கூட்டுறவு மேம்படுகிறது.

வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.

அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.

முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.

ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்
நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக் 
கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

Tuesday, October 9, 2012

தமிழ் கூறும் நல்லுலகின் ஆலிம்கள் மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு

அரபுக் கல்லூரிகளின் அனுபவமிக்க விற்பனர்கள் பயிற்றுவிப்பால் நடத்தப்படும், தப்ஸீர்,ஹதீஸ் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற இஸ்லாமிய ஒருநாள் பயிற்சி வகுப்புகள்.

ஒவ்வொரு கலையும் ஒரே நாள் வகுப்பில்.....

நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

தப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) கலை பயிலரங்கம்

நாள் ; 3-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்
மௌலானா அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(தலைமை இமாம்,கரும்புக்கடை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்,கோவை)

அகீதா (கொள்கை விளக்கம்) பயிலரங்கம்

நாள் ; 10-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா அ.சையது முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(முதல்வர், ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி,திருவனந்தபுரம்,கேரளா)

இஸ்லாமிய சொத்துரிமை (மீராஸ்) பயிலரங்கம்

நாள் ; 17-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா ஏ.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(முதல்வர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்)
மௌலானா கே.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்
(பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்)

வான சாஸ்திர பயிலரங்கம்

நாள் ; 21-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா எஸ்.ஏ.காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி  ஹஜ்ரத்
(பேராசிரியர்,யூசுஃபியா அரபுக் கல்லூரி, திண்டுக்கல்)

ஹதீஸ் கலை பயிலரங்கம்

நாள் ; 28-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா ஏ.அபூதாஹிர் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(பேராசிரியர்,நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி,சேலம்)

அன்புடன் அழைக்கிறது....

அரபி மற்றும் மார்க்க கல்வியியல் துறை.
பிலாலியா அரபுக் கல்லூரி,
107,ECR Highway,பெரிய நெம்மேலி,சென்னை-- 603104
9840538681 -- 9788432055
 
வெளியீடு ;-  மனபயீ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்