Posts

Showing posts from 2019

அஸ் -- ஸத்தாரிய்யா நர்சரி & பிரைமரி ஸ்கூல் !!!

Image

அது ஒரு மோசமான காலம் !!!

Image
மவ்லவிகள் மிக மோசமாக மேடைகளில் விமர்சிக்க பட்டார்கள். மத்ஹபு தர்ஹா போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக  மக்களிடம் சொல்லப்பட்டது. மேடைக்கு தைரியம் இருந்தால் வா வந்து பதில் சொல். தைரியம் உண்டா?திராணி இருக்கிறதா?என்று மேடைக்கு மேடை சவால் விட்டது  வஹாபிஸ பிஸாசுகள். பதில் சொல்ல முடிந்த ஆற்றல் உள்ள பல மவ்லானாக்கள் நமக்கு  எதற்கு வம்பு என்று ஒதுங்கி இருந்தார்கள். சில ஆலிம்கள் வஹாபிஸ கொடியவர்களால் தாக்கப்பட்டார்கள். கல்யாண வீட்டில் இருந்து கபர்ஸ்தான் வரைக்கும் குழப்பம். தீனுக்காக உள்ள பல விஷயங்களை தீனிக்காக செய்கின்றார்கள் என்று மக்களில் பலர் ஆலிம் களை இழிவாக எண்ணத்துவங்கியிருந்தார்கள். இந்நேரத்தில் அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் தலைநகரில் இருந்து புறப்பட்ட மாமனிதர் ஷேக் அப்துல்லா ஜமாலி ஹலரத் கிப்லா. எளிய மனிதர்.பழக இனிய மனிதர்.சிறந்த கல்விமான்.ஒழுக்கத்தை உயிராக எண்ணுபவர். பெருமானாரை (ஸல்) உயிரினும் மேலாக எண்ணுபவர்.சிறிய வயது ஆலிம் களையும் ஆளாக்கி உருவாக்க என்னும் பெரிய மனதுக்காரர்.சமரசமில்லா கொள்கைவாதி.எதிரிகளின் சிம்ம சொப்பனம்.  கேள்விக்கு பதில் சொ

முனைவர் பட்டம் பெற்ற எங்கள் ஆசானுக்கு இதயமார்ந்த வாழ்த்துகள் !!!

Image
ஆண்டுதோறும் ஜமாலிகள்  வெளியானாலும், அவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தாலும், ஜமாலி என்னும் நட்சத்திரக் கூட்டங்களிடையே இலங்கும் பௌர்ணமியாய் துலங்கும் எங்கள் உஸ்தாதே ! முனைவர் பட்டம் பெற்ற உங்களால் அல்லவா பட்டம் தனக்கு கிரீடம் சூட்டுகிறது.  சுன்னத் வல் ஜமா அத்தின் நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க தாருல் உலூம் ஜமாலியா அரபிக்கல்லூரியில் தெளிவுறக் கற்று, ஜமாலி என்னும் பட்டம் பெற்று, அங்கேயே ஆசிரியராய் பொறுப்பேற்று, பல நூறு ஆலிம்களை  உருவாக்கி, சமூகத்தில் தன் கொள்கை சாம்ராஜ்ஜியத்தின் விதைகளைத்  தூவி, பல விருட்சங்களைக்கண்டு, விழுதுகள் பல ஊன்றி, சப்தமில்லாமல் பல சாதனைகளை சாதித்து வரும் மாபெரும் சகாப்தம் *ஜமாலி உஸ்தாத்* தமிழகத்தில் மார்க்கத்தின் பெயரால் மூர்க்கம் செய்து வந்த வஹ்ஹாபியர்களின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து கட்டியவர் நீங்கள். குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் சமூகத்தில் உளரி உலவி வந்தவர்களின் அடிசுவட்டை அழித்தவர்கள். அவர்களின் முகவரிகளை ஒழித்தவர்கள் நீங்கள்! தன்னை யாரும் விவாத களத்தில் சந்திக்க முடியாது என்று தலைக்கனம் கொண்டு அலைந்தவர்களின் செருக்கை தகர்த்தவர்கள் நீங்கள்! ஷ

ஜமாலி எனும் பேராளுமை !!!

Image
மணம்சூழ் மல்லிப்பட்டிணத்தில் மங்கலமான நேரமதில் 03-06-1960 ல் மாண்பான தம்பதியாம் முஹம்மது மஜீத், ரஹ்மத்துல் குப்ரா (அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக!) விற்கு மைந்தராக பிறந்தவர் தமிழகம் தந்த தனியொருவர் தன்னடக்கத்தில் தன்னிகரில்லாதவர் புதிய பயணம் எனும் ஹழ்ரத் அவர்களின் மாதஇதழின்  வழியே அகீதாவை கற்றோர் ஆயிரமாயிரம். ஆதாரங்கள் அடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளால் அது நிரம்பி வளிந்தது எழுத்தெனும் ஆயுதங்களை ஏந்தியும் பேச்செனும் தற்காப்பு கலைகளை சூடியும் வஹ்ஹாபிகளுக்கு எதிரான போர்களத்தில் புகுந்து புகழாரம் பெற்றவர் இன்றும் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைப்புக்களில் தேடுகையில் தனியாக இணையத்தில் வந்து குவிவது ஹழ்ரதவர்களின் பதிவுகளே அரபி பாண்டித்துவத்தின் அசுர திறமையினை ஹழ்ரத் அவர்களிடம் மண்டியிட்டு ஓதிய மாணவர்களிடம் கேட்கலாம். எவரும் தொடுவதற்கு துணியாத தலைப்புக்களான வஸீலா, இஸ்திகாஸா, மவ்லித் போன்றவற்றையும் பொதுமேடைகளில் புரியும்படி போட்டுடைத்தவர் வாதம் செய்ய வா வா என மாதம் மாதம் கத்திய வம்பர்களையும் ஆதாரங்கள் எனும் வாளால் வாலை வெட்டியவர். வாதிப்போர்களின் வாதங்களை அவர்களின் வடிவங்க

தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!

Image
தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية‎  மறைக்கப்பட்ட வரலாறு தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன.  போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள்.  முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள். இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள்.  செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள்

இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா !!!

Image
70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது.  தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது. 1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது.  இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல.  இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை தேர்

சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி 70 வது குடியரசு தின விழா

Image
சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில், 26-01-2019 அன்று 70 வது குடியரசு தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தீனைக் குலைக்கும் பிளவுகள் !!!

Image
திருச்சியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப் பட்ட தப்லீக் இஜ்திமா குறித்து தொடர்ந்து விசாரிக்கப் படுகிறது. அதில் மார்க்கத்தின் அடிப்படையில் தெளிவை தேடி இந்தக் கட்டுரை- தப்லீக் ஜமாத்தின் பெயரில் நமது எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்கிற மூடர்கள் இருப்பார்கள் எனில் இத்தகைப்பில் திருச்சி இஜிதிமா குறித்த செய்தியை ஆலிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நாம் உண்மையை சொல்லப் போய் அது சர்ச்சையாகி விடக்கூடாது அல்லவா ? ) இஸ்லாம் மகத்தான சமூக ஒற்றுமையை நிலை நாட்டிய மார்க்கம். தலை முறை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அரபுக் கோத்திரத்தார் லாயிலாக இல்லல்லாஹ்வின் குடையின் கீழ் பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதர்ர்களாக ஒன்றினைந்தனர். لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (63 ) அஸ் அது பின் ஜராரா ரலி அவர்கள் தான் மதீனாவிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை தழுவிய முதல் நபித்தோழர். முதலாம் அகபா உடன்படிக்கையின் போது பெருமானாரை முதன் முதலில் சந்தித்த ஆறுபேரில் ஒருவர். பெரும

திருச்சி தப்லீக் இஜ்திமாவிற்கு ஏன் போக கூடாது. .......????

Image
சு மெளலானா மௌலவி தாஜுல் உலூம் அல்ஹாஜ்  M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத் துணைத் தலைவர் மஜ்லிஸூல் உலமா சபை மல்லிப்பட்டினம் ன்னத் ஜமாத் பேரியக்கம்  சார்பாக ஒர் சுற்றறிக்கை வெளியிட பட்டுள்ளது ... வாசகர்களுக்கு பார்வைக்கு.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு