முனைவர் பட்டம் பெற்ற எங்கள் ஆசானுக்கு இதயமார்ந்த வாழ்த்துகள் !!!


ஆண்டுதோறும் ஜமாலிகள் வெளியானாலும், அவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தாலும்,ஜமாலி என்னும் நட்சத்திரக் கூட்டங்களிடையே இலங்கும் பௌர்ணமியாய் துலங்கும் எங்கள் உஸ்தாதே !

முனைவர் பட்டம் பெற்ற உங்களால் அல்லவா பட்டம் தனக்கு கிரீடம் சூட்டுகிறது.

 சுன்னத் வல் ஜமா அத்தின் நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க தாருல் உலூம் ஜமாலியா அரபிக்கல்லூரியில் தெளிவுறக் கற்று, ஜமாலி என்னும் பட்டம் பெற்று, அங்கேயே ஆசிரியராய் பொறுப்பேற்று, பல நூறு ஆலிம்களை  உருவாக்கி, சமூகத்தில் தன் கொள்கை சாம்ராஜ்ஜியத்தின் விதைகளைத்  தூவி, பல விருட்சங்களைக்கண்டு, விழுதுகள் பல ஊன்றி, சப்தமில்லாமல் பல சாதனைகளை சாதித்து வரும் மாபெரும் சகாப்தம் *ஜமாலி உஸ்தாத்*

தமிழகத்தில் மார்க்கத்தின் பெயரால் மூர்க்கம் செய்து வந்த வஹ்ஹாபியர்களின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து கட்டியவர் நீங்கள்.

குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் சமூகத்தில் உளரி உலவி
வந்தவர்களின் அடிசுவட்டை அழித்தவர்கள். அவர்களின் முகவரிகளை ஒழித்தவர்கள் நீங்கள்!

தன்னை யாரும் விவாத களத்தில் சந்திக்க முடியாது என்று தலைக்கனம் கொண்டு அலைந்தவர்களின் செருக்கை தகர்த்தவர்கள் நீங்கள்!

ஷிர்க் பித்அத் என்று ஒப்பாரி வைத்து ஓலமிட்டவர்களுக்கு வேத வசனங்களை ஓதிக்காட்டி சுன்னத், முஸ்தஹப் என்று பாடம் நடத்தியவர்கள் நீங்கள்!

நாகத்தைக் கண்டு பயந்தோடும் படை போல
ஜமாலியின் நாதத்தைக் கேட்டு பயந்தோடின படைகள்.

ஜமாலி உங்களின் வாதத்திறமையை சமாலிக்க முடியாமல் ஓடியது சண்டாளர் கூட்டம்.

உங்களால் வைக்கப்பட்ட பல கேள்விகள் இன்னமும் கேள்விகளாகவே நின்று விட்டனவே, இதுவரையில் வராத பதில் இனியா வரப்போகிறது.

உங்களை அல்லாஹ் எங்களுக்கு அருளாக வழங்கினான். அதனாலன்றோ அப்பாவி மக்கள் தம் ஈமானை காத்தனர். தடம் மாறிப் போன பலர் திரும்பி வந்தனர், திருந்தி வந்தனர்.

வஹ்ஹாபிகள் சொல்வதில் சில சரியாக இருக்கலாம் தானே என்று ஏமாந்து போன எங்களில் எத்தனை உலமாக்களுக்கு வழிகாட்டியது உங்களின்  உரைகள்.

உங்களின் உன்னத உரைகளன்றோ எங்களுக்கு உரமானது.

பதில் சொல்லியே ஆகவேண்டிய பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் கிதாபுகளை நாங்கள் எங்கே புரட்டினோம். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களின் பத்து இலக்க அலைபேசி எண் தானே?

அழைக்கும் போதெல்லாம் கொஞ்சமும் அலுப்புத் தட்டாது பச்சப் பிள்ளைக்கும் புரியும் வகையில் புரிய வைக்கும் போங்கு அல்லாஹ்வே உங்களுக்கு அளித்த சன்மானம்.

வாதத்தில் ஒரு துணிவு, மாணவர்களிடமும் பணிவு, எல்லோரிடமும்  கனிவு,
என உங்கள் குணாதிசியங்களுக்கு நாங்கள் சாட்சி.

எங்களுக்குத் தெரியும். உங்களைப் புகழ்ந்து பேசுவது உங்களுக்குப் பிடிக்காது.

ஆம் ! எந்தையே!  எம் ஆசிரியத் தந்தையே ! தகுதியற்றவர்களை புகழ்வது எப்படி தவறோ அப்படியே தகுதியுள்ளவர்களை புகழாததும்.

இறைவா ! எங்கள் ஆசானின் வாழ்வில் உன் வசந்த கால பூங்காற்றை இரவுபகல் முற்றாக வீசச்செய்.

சொல் மாரி பொழியும் அவரின் வாழ்க்கைப் பந்தலில் தினமும் நீ தேன் மாரி பொழி.

தீன் மாறிப்போனோரை இவரின் அழைப்பால் திசை மாறி வரச் செய்.

இவரின் நாவில், பேனாவில் உன் அருள் சுனை ஊற்றெடுக்கச் செய்.

அவரின் முன்னும் பின்னும் வலதும் இடதும் மேலும் கீழும் நீயே காப்பு வழங்கி காத்தருள் நாயனே.

அன்பர்கள் யாரிடமும் தேவையாகாத இவரின் தேவையறிந்து நீயே நிறைவேற்று.

உன் அருளாலும், உன் ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளாலும் உயர் வலிமார்களின் வாழ்த்துக்களாலும் எங்கள் உஸ்தாதின் வாழ்வில் எல்லா  வளங்களையும் வழங்குவாயாக.
அவர்களின் வாழ்நாளை சரீர சுகத்துடன் நீ நீட்டித்தருள்.


அன்புடன்
 *ஜமாலிகள்*, மற்றும் ஜமாலி உஸ்தாத் அவர்களின் நேச உலமாக்கள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு