Posts

Showing posts from 2013

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 1488 வது மீலாது விழா!!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம்.  மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு  தினங்களும் பயான் செய்யப்படும், ஆகவே இச

குடும்ப உறவுகள் சீர்பெற! என்ற தலைப்பில், சென்னையில் மாபெரும் சிறப்புக் கூட்டம் !!!

Image
காலம்: இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரீ 1435 ஸஃபர் பிறை 25 (29-12-2013)  ஞாயிறு மாலை அஸர் முதல் இஷா வரை  இடம்: ஜாமிஆ மஸ்ஜித், மேற்கு மாதா தெரு, இராயபுரம், சென்னை-13  தலைமை: மௌலானா எம்.எஸ்.என். சுலைமான் ரியாஜி ஹள்ரத்  (தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை-துறைமுகம்)  முன்னிலை: அல்ஹாஜ் டாக்டர் கே. மஜீத் அவர்கள்  (முத்தவல்லி, உறுப்பினர் த.நா. வக்ஃப் போர்டு)  மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள்  கிராஅத்: மௌலானா காரீ. அப்துல் ஹலீம் ஹள்ரத்  (அண்ணா நகர்)  கீதம்: மௌலானா முஹம்மது யாசீன் பிலாலி  வரவேற்புரை: மௌலானா முஹம்மது அமீன் பாகவி  (தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித், இராயபுரம்)  அறிமுக உரை: மௌலானா ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி ஹள்ரத் (தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை சென்னை மாவட்டம்)  சிறப்புரை ; மௌலானா பீ.எஸ்.பீ. ஜெய்னுல் ஆபிதீன் பாகவி (முன்னாள் முதல்வர், அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்)  தலைப்பு: தலாக் ஏன்?  மௌலானா, அல்ஹாஃபிழ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., (தலைமை இமாம், மஸ்ஜித் குராசானீ பீர், அடையாறு)  தலைப்பு: குடும்ப உ

சேலம் மழாஹிருல் உலூம் அரபு கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சேலம் மழாஹிருல் உலூம் அரபு  கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் ஹழ்ரத் பாகவி என்ற சீனிஹஜ்ரத் அவர்கள் திண்டுக்கல்லில் 23-12-2013  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா தொழுகை ,24-12-2013 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் திண்டுக்கல் N.G.O.காலணி ஹவ்வா மஸ்ஜித் கபரஸ்தானில் நடைபெற்றது.   10 நாட்களுக்கு முன்புவரை இவர்களை எனக்கு அறிமுகமில்லை. 18-12-13 புதன்கிழமை அன்று P.S.P ஹழ்ரத் அவர்களின் வகுப்பு என் பள்ளியில் நடப்பது அறிந்து என் பள்ளிக்கு வந்தார்கள். ஹழ்ரத் அவர்களின் வகுப்பில் 2 மணி நேரம் முழுமையாக ஒரு மாணவனைப்போல் அமர்ந்திருந்தார்கள்.  வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்ட பின்னரும்,ஹழ்ரத் அவர்களின் கட்டிலில் படுத்திருந்து 1:30 மணிக்கு லுஹர் தொழுத பின்னரே சென்றார்கள். அப்போதுதான் தான் சேலம் மழாஹிருல் உலூமில் 40 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றியதை சொன்னார்கள். பிறகு பாக்கியாத்தின் விழாவுக்கு வெள்ளிக்கிழமைய

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

Image
பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!! மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த  மாதம்  ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்   அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும். எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ,விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது. மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம்,கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வு

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 12 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1488 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வருகிற 02--01--2014  வியாழன் தொடங்கி 13--01--2014  திங்கள் வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின்  சரியாக ஒரு மணி நேரம்  பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் . மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது அபூபக்கர் உலவி ஹஜ்ரத். இமாம்,பெரிய பள்ளிவாசல்,நீடூர்,மயிலாடுதுறை. ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்ப்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்,அஹ்மது ஃ

பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!

Image
   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவரும், பள்ளப்பட்டி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாமும்.பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள்  (13.12.2013) வெள்ளிக்கிழமை அதிகாலை பள்ளப்பட்டியில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை  9 மணிக்கு  பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில்  நடைபெறுகிறது . மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவராகவும், திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் பள்ளப்பட்டி. பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியில் பத்து ஆண்டுகாலம் முதல்வராக பணிபுரிந்து வந்தவர்கள். ஹஜ்ரத் அவர்களுக்கு  3 பெண்மக்களும்,1 ஆண்மகனும் உள்ளனர்.  எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)

Image
நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.  (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.                                          بسم الله الرحمن الرحيم سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَلل

ஒடுக்கத்துப் புதன் !!!

Image
கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். 'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர். பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233 குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது. நன்றி: வஸீலா 1-11-87 ஒடுக்கத்துப் புதன் துஆ          

மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம்!!!

Image
                பிஸ்மிஹி தஆலா மஸ்ஜித், மத்ரஸா,ஷரீஅத்கோர்ட், இஸ்லாமிய நூலகம் & ஆய்வு  மையம் மீட்டிங்ஹால், தங்கும் அறைகள், அனைத்தும் அமைந்த 5 அடுக்குகள் கொண்ட தலைமையகக் கட்டிடம்  கட்டிடப் பணிகள் நிறைவு பெற இருக்கின்றன   நிறைவு செய்திட மனமுவந்து நிதி அள்ளித் தாரீர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் ! அல்லாஹ்வின் பேரருளால் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக 1956 –ல் உலமாக்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையாகும்.பொன்விழா காலத்தை அடைந்த நம் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு இது வரை சொந்தமான தலைமையகக் கட்டிடம் இல்லை.வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இக்காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் சேவைகளும் செய்திகளும் நம் மக்களை விரைவாக சென்றடையவும், ஜமாஅத்துல் உலமா சபை தன் நோக்கங்களிலும், லட்சியங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தனது பணிகளை பரவலாக்கி மக்கள் பயன் பெறும்படி செய்வதற்கும் ஓர் தலைமையகக் கட்டிடம் கட்டுவது  இக் காலத்தின் கட்டாயமாகும்.  இதனை  தீட்சண்யமாக  உணர்ந்தாலோ என்னவோ  மதுரை  மாநகரில் வசித்து வந்த T.S.N.M.S.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் எம்.ஓ . அப்துல் காதர் ஹள்ரத் மறைவு !!!

Image
                                                                             பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும், ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரி பேராசிரியருமான, ஈரோடு பழக்காரத்தெரு ஜன்னத்துல் பாகியாத் மஸ்ஜித் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவீ அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் எம்.ஓ. அப்துல் காதிர் தாவூதி ஹழ்ரத் அவர்கள், (06.12.2013) வெள்ளிக்கிழ்மை காலை ஈரோட்டில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஈரோடு , பெரிய அக்ரஹாரம் , தாவூதிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெறுகிறது . நாடறிந்த மார்க்க மாமேதையாகவும்,அற்புதமான சொல்லாற்றல் மிக்க அறிஞராகவும்,மார்க்கப் பணிகளில் மிகப்பெரும் சேவையாற்றியவராகவும் திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் மேலப்பாளையம்.இவர்கள் 12 வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து ஹிப்ழு பட்டம் பெற்றவர்கள்

சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?

Image
யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே..  உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு