அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, March 24, 2012

உத்தம திருநபியின் மாபெரும் உதய தின விழாக்கள்


From: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>

 
மூன் டிவி ஷரீஅத் சட்டத்தின் புகழ், சென்னைப் பல்கலை கழக அரபி
உருது பாரஸீக விரிவுரையாளர் டாக்டர் முனைவர் மௌலானா மௌலவி
அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் அவர்கள்  துபாயில் அதிகமான
இடங்களில் நடைபெற்ற மீலாது பெருவிழாக்களிலும், கலந்துரையாடல்
நிகழ்ச்சிகளிலும், சிறப்புரையாற்றினார்கள்.

மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா
மௌலவி அல்ஹாஃபிழ் பிஎ.காஜா முஹ்யத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத்
அவர்கள் அபுதாபியில் அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாதுப்
பெருவிழாக்களில் சிறப்புரையாற்றினார்கள்

சென்னையைச் சேர்ந்த மௌலானா மௌலவி முஹம்மது பக்ருத்தீன்
பாகவி ஹஜ்ரத்,வேலூர் பாக்கியாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா
மௌலவி ஆதம் ஹஜ்ரத், மற்றும் வேலூர் பாக்கியாத்தின் பேராசிரியர் மௌலானா
மௌலவி அப்துல் ஹமீது ஹஜ்ரத், மஸ்ஜித் இந்தியாவின் முன்னால் இமாம்
சென்னை மௌலானா அப்துல்லாஹ் பாகவி ஹஜ்ரத் ஆகியோர்கள் பினாங்கு
மற்றும் மலேசியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மீலாதுப் 
பெருவிழாக்களிலும் சிறப்புறையாற்றினார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் அபுத்தலாயில் மௌலானா
மௌலவி அல்ஹாஃபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் 
இலங்கையில் அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாதுப் பெருவிழாக்களில்
சிறப்புரையாற்றினார்கள்.

லால்பேட்டை மாநகரில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் 
கமிட்டி நடத்திய மீலாது விழாவில் மதுரை J.M.S.அரபுக் கல்லூரியின் பேராசிரியர்
மௌலானா லியாகத் அலி மன்பஈ  ஹஜ்ரத், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா
சபைத் தலைவர் ஷைகுல் ஹதீஸ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அப்துர்
ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத அவர்களும் மற்றும் லால்பேட்டை J.M.A.அரபுக் 
கல்லூரியின் முதல்வர் முஃப்தி அ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத், ஜாமிஆவின்
முன்னால் முதல்வர் முஃப்தி அப்துர் ரப் ஹஜ்ரத் மற்றும் ஜாமிஆவின் 
பேராசிரியப் பெருமக்கள் அனைவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இதுபோன்று
லால்பேட்டையில் அதிகமான மஹல்லாக்களில் 12 தினங்கள்
தொடர் சொற்பொழிவுகள் நடைபெற்றது .
 
நீடுர் நெய்வாசல் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில்  12 தினங்கள்
தொடர் மீலாது சொற்ப்பொழிவு நடைபெற்றது. இதில் ஜாமிஆ மிஸ்பாஹுல்
ஹுதாவின் முன்னால் முதல்வர் மௌலானா அல்ஹாஜ் ஓ.எம்.அப்துல்காதிர்
பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,காயல் பட்டிணம் மஹ்ழரா அரபுக் கல்லூரியின்
பேராசிரியர் மௌலானா ஹாஃபிழ் சைய்யது அப்துல் ரஹ்மான் தங்கல் பாகவி
ஆலிம்,மற்றும்புதுக்கோட்டை அய்னுல் உலூம் தையிபா அரபுக் கல்லூரியின்
முதல்வர் அல்ஹாஃபிழ் எஸ் அப்துல் ஜப்பார் ஆலிம் பாகவி ஹஜ்ரத் ஆகியோர்கள்
சிறப்புரையாற்றினார்கள்.

தாய்ச் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தமிழ் மாநிலத் தலைவர்
பேராசிரியர் காதிர் முஹைதீன் அவர்களின் தலைமையில் தமிழகத்தின் அதிகமான
இடங்களிலும், அண்டை நாடான இலங்கையிலும் மீலாது விழாக்கள் நடத்தப்பட்டு
அனைத்து விழாக்களிலும் சிறப்புரையும் ஆற்றினார்கள். மீலாது விழாக்கள் நடத்தி
அல்லாஹ்விடத்தில் பெரும் நன்மைகளைப் பெற்ற தாய்ச் சபை தலைவர் மற்றும்
அனைத்துப் பொருப்பாளருக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணைய தளம்,இன்னும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் மற்றும்
மலேசியக்கிளைகள், மணமார்ந்த நன்றியை தெரிவிக்கிறார்கள்.வஸ்ஸலாம்..

Wednesday, March 21, 2012

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள்


From: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>


சென்னையில் 24 ஆம் தேதி வியாசர்பாடி
சுபுஹானியா மஸ்ஜிதில் நடைபெற்ற மீலாது விழாவில்
மௌலானா பி எஸ்ஏ அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி
ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை மடுவன்கரையில் 28 ஆம் தேதி மஸ்ஜிது
நூரில் நடைபெற்ற  மீலாது விழாவில் மௌலானா 
எம் நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
மயிலாப்பூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில்
வேலூர் பாக்கியாத் முன்னால் முதல்வர் அல்லாமா
பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா மற்றும்
சென்னை ஜமாலியாவின் முதல்வர்  மௌலானா
சைய்யது நியாஸ் அஹ்மது ஜமாலி ஹஜ்ரத், மந்தைவெளி
இமாம் மௌலானா இல்யாஸ் ரியாஜி ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை சைதாப்பேட்டையில் பிப் 4ஆம் தேதி நடைபெற்ற மீலாது
விழாவில் மௌலானா எம் நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத் 
சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை ஆயிரம் விளக்கில் பிப் 4ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்  மௌலானா  ஷைகு அப்துல்லாஹ்
ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.   
 
வேலூர் மாவட்டம் விரிஞிபுரத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் பெங்களூர்
அமீரே ஷரீஅத் முஃப்தி  அஸ்ரஃப் அலி ஹஜ்ரத்
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
காயல்பட்டிணம் மஹ்ழராவில் நடைபெற்ற மீலாது விழாவில்  சேலம்
நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா எம் முஹம்மது
அபூத்தாஹிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அய்யம் பேட்டை அஞ்சுமன் பள்ளியில் நடைபெற்ற மீலாது விழாவில்
சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா பி எம் ஜியாவுத்தீன்
பாகவி ஹஜ்ரத் மற்றும் தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவர்
மௌலானா எம் சையது அஹ்மது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை   மண்ணடி மூர் தெருவில் நடைபெற்ற மீலாது விழாவில் மௌலானா
மௌலவி ஓ.எம்.அப்துல்காதிர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் காணையில் நடைபெற்ற மீலாது விழாவில் தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவர் மௌலானா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன்
ரியாஜி ஹஜ்ரத் கிப்லா  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை மண்ணடியில் உள்ள இயூ.முஸ்லிம் லீக் தலைமையகத்தில்
நடைபெற்ற மீலாது விழாவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்
மௌலானா மௌலவி ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் 
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்ற
மீலாது விழாவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மௌலானா
மௌலவி ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்
சிறப்புரையாற்றினார்கள்
சென்னை. ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் நடைபெற்ற மீலாது விழாவில் 
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மௌலானா மௌலவி ஷைகு 
அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
 
இராமநாதபுரத்தில் இயூ முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்ற மீலாது
விழாவில் சென்னை மந்தைவெளி இமாம் மௌலானா இல்யாஸ்
ரியாஜி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரத்தில் இயூ முஸ்லிம்லீக் சார்பாக நடைபெற்ற மீலாது விழாவில்
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்  மௌலானா
மௌலவி ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை சக்கராப் பள்ளியில் நடைபெற்ற மீலாது
விழாவில் மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியர்
மௌலானா மௌலவி பி..காஜா முஹ்யத்தீன் ஆலிம் பாகவி
ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற மீலாது விழாவில் சிந்தனைச்சரம்
மாத இதழின் ஆசிரியர் மௌலானா மௌலவி பீர் முஹம்மது ஆலிம் பாகவி
ஹஜ்ரத் அவர்களும்,ஈரோடு மௌலானா பி.எம்.ஜியாவுத்தீன் ஆலிம் தாவூதி
ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
தேவிபட்டிணத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் சென்னை அடையார்
ஜும்ஆ பள்ளி தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் ஆலிம்
பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சாத்தான் குளத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் மேலப்பாளையம் உஸ்மானியா
அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி பி.எ காஜா முஹ்யத்தீன் ஆலிம்
பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
நன்றி-மணிச்சுடர்
வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்

வாழூரில் ஹஜ்ரத் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா


From: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>

பிஸ்மிஹி தஆலா
ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 30- (23-02-2012) ஆம் தேதி
வியாழக்கிழமை அன்று மாலை ரபியுல் ஆகிர் முதல் பிறை தென்பட்டதினால்,
ஆங்கிலமாதம் (24-02-2012) -ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரபியுல் ஆகிர் மாத
முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை 
கீழக்கரை  ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும்,தமிழ்நாடு
அரசு இராமநாதபுர மாவட்ட காஜியார்  அஃப்ழலுல் உலமா மௌலானா மௌலவி
அல்ஹாஜ் V.V.A.ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் 
தெறியப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் வாழூர் ஜும்ஆப் பள்ளிவாசல்
மற்றும் சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்களிலும். ரபியுல் 
ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள் முஹ்யத்தீன் ஆண்டகை 
அவர்களின் மௌலிது ஸரீஃப் சிறப்பாக  ஓதப்பட்டு.(05-03-2012) திங்கள் 
காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில்
வாழூர் இமாம் மற்றும் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்களின் தலைமையில்
மதரஸா மதாரிஸுல் அரபியா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, 
சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியில் கந்தூரி விசேச உணவு , 
வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வாழும்ஊரில்
(வாழூரில்) பகுதாதில் வாழும் ஞானி ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
(ரஹ்)அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று 
தமிழக முழுவதும், மலேசியா, இலங்கை, மற்றும் உலகமெங்கும் அதிகமான
இடங்களில் ஹஜ்ரத் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக
நடைபெற்றது, வஸ்ஸலாம். ஆமீன்..
இவண்-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் 
பேரவை வாழூர் கிளைSunday, March 11, 2012

கோவை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நடத்திய மாபெரும் மீலாது மாநாடு.


பிஸ்மிஹி தஆலா

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும்,பூமான் நபி
(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,நாதாக்களின்
நல்லாசியாலும்,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு
சார்பாக உத்தம நபி (ஸல்)அவர்களின் 1486 வது உதயதின
விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4-30
மணியளவில் கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் அமைந்துள்ள
கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அது சமயம் அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத்
ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும்,மௌலானா,
மௌலவி அல்ஹாஜ், அபுல்அய்தாம், கமருல்உலமா, ஷைகுனா,
கேரள மாநிலம் காந்தபுரம் 
A.P.அபுபக்கர் முஸ்லியார் ஹஜ்ரத் கிப்லா
அவர்கள் ஹுப்பூ ரஸுல் (ஸல்) என்ற 
தலைப்பில் சிறப்புப்பேருரை
வழங்கினார்கள். 

பெங்களூர் தாருல் உலூம் ஸஃபிலுர் ரஷாத்
அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
S.ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சத்தியமார்க்கமும் சமீப
குழப்பங்களும்,என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள்.

மேலும்சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானாமௌலவி அல்ஹாஜ் M.முஹம்மது அபுதாஹிர் ஆலிம் ஃபாஜில்பாகவி ஹஜ்ரத் அவர்கள்  நடைமுறை வாழ்வில் நபி (ஸல்)அவர்கள்,என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
உலமாக்கள்பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் இச்சிறப்பு மிகு மாநாட்டில்அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்ட ஏராளமானோர்கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும்பெற்றுக்கொண்டனர். 

இச்சிறப்புமிகு மாநாடு www.safaresunnah.com
www this-is-truth.blogspot.com ஆகிய இரு சுன்னத் வல் ஜமாஅத்
பேரியக்க இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

மாநாட்டின் இறுதியில் கோழிக்கோடு மார்கஸ் மாணவர்கள்
சங்கத்தின் புனித மிகு கஸீதத்துல் புர்தா மஜ்லிஸும், சிறப்பு
கூட்டு துஆவும் நடைபெற்று, பெருமானாரின் புனித மீலாது
மாநாடு இனிதே நிறைவடைந்தது. வஸ்ஸலாம்.ஆமீன்…..
வெளியீடு;-
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத்
வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
வாழூர் மற்றும் மலேசியக் கிளை.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு