அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, February 26, 2011

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

    பிஸ்மிஹி தஆலா
''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்''
''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்''
மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!
     மௌலானா டி,ஜெ,எ. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும்.
எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும். புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ, விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம், கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வுக்கும்,அன்பு, பண்பு, பாசம், நேசம் மனிதாபிமானம் வளர்வதற்கும், தேவையான மிக அவசியமான வழிகாட்டல் மட்டும் மீலாது விழாக்களில் இருந்து கொண்டிருக்கும். பெண்கள் சன்மார்க்க விழிப்புணர்வு பெற்று இறை அச்சத்துடன் வாழவும், மனித நேயம் வளரவும் காரணமாக இருந்த மீலாது விழாக்கள் சமீபகாலமாக குறைந்து விட்டதால் நமது மக்களும்,சமுதாயமும் பல சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாள் பெருவிழாக்கள் மூலமாக நாட்டிற்கும், மனித சமுதாயத்திற்கும் நல்ல பல செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்ததுடன், நமது  சமுதாய இளைஞர்களிடம் தீனுல் இஸ்லாத்தின் உணர்வுகள் மேலோங்கி எல்லா வகையிலும் எழுச்சியுடன் செயல்பட மீலாது விழாக்கள் காரணமாக இருந்தன. எனவே மனிதநேயம், மனிதாபிமானம் வளர்ந்திடவும், அமைதியும்,கண்ணியமும் நிறைந்த வாழ்வு அமைந்திடவும், ஒற்றுமை ஓங்கவும், சமுதாய சாபக்கேடுகள் சாகவும், அல்லாஹ்வின் அருளும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆசியும், அன்பும், கிடைக்கவும், நமது வாழ்வு பரக்கத்தான வாழ்வாக அமைந்திடவும்,எல்லா ஊர்களிலும், மஹல்லாக்களிலும் மீலாது விழாக்கள் நடத்தப்பட வேண்டும். சங்கைக்குரிய ஆலிம்களும், மஸ்ஜிதுகளின் இமாம்களும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், சமுதாய ஆர்வமும்,துடிப்பும், நிறைந்த இளைஞர்களும், எல்லா பகுதியிலும் மீலாது விழாக்கள் நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று, மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அருளாளன் அல்லாஹ் எல்லா நலன்களையும்,பரக்கத்தான வாழ்வையும்,நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் தந்தருல் புரிவானாக! ஆமீன். வஸஸலாம்.
வெளியீடு;- T-J-M- பாசறை திருநெல்வேலி-4
தொகுத்து வழங்கியவர்கள்-
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.Sunday, February 20, 2011

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில் மீலாதுப் பெருவிழா

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
                அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சித்தார் கோட்டை மாநகருக்கு புனிதம் சேர்க்கும்  ''ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில்''
''லஜ்னத்துல் லம்ஆன் மாணவர் மன்றம்'' சார்பில், மீலாதுப் பெருவிழா-  
(16-02-2011) -புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் இனிதே தொடங்கியது. 
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் மௌலானா அல்ஹாஜ் கீழக்கரை ஹுஸைன் அப்துல் கரீம் மன்பஈ ஹழரத் தலைமை தாங்க, மாணவர் ஜியாவுல் ஹக்  திருமறை ஓத, முஹம்மது ரிஷாத், மற்றும் முகம்மதியா பள்ளிகளின் முன்னால் ஆசிரியர் E.M. ஹனீஃபா 
அவர்கள் கீதம் பாட விழா இனிதே துவங்கியது. 
மாணவர் மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஃபைஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். ஆரம்பமாக கல்லூரியின் தாளாலர் மௌலவி அல்ஹாஜ் சுதானா முஹம்மது ஆலிம் 
அரூஸி,ஃபாஜில் ஜமாலிதுவக்கவுரை ஆற்றினார்கள். 
கல்லூரிப் பேராசிரியர்கள், மௌலவி அல்ஹாஜ் செய்யிது அபுத்தாஹிர் ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி, மௌலவி அல்ஹாஜ் ஷைகு நிஜாம் அலி ஆலிம் ஃபாஜில் மன்பஈ, மௌலவி அல்ஹாஜ் ஷம்சுல் ஹக் ஆலிம் பாகவி, சித்தார் கோட்டை சின்னப் பள்ளி இமாம் மௌலவி ஆரிப் ஆலிம் மஸ்லஹி, ஆகியோர் துவக்க உரையாற்றினார்கள்.
  பனைக்குளம்  மௌலவி அல்ஹாஜ் செய்யிது முஹம்மது மதனி ஆலிம் அரூஸி
கீழக்கரை ஜும்ஆப் பள்ளி கதீப், மௌலானா ஹாஃபிழ் ஜெய்னுல் 
ஆபிதீன் ஆலிம் நூரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

சிறப்பு மிகு விழாவிற்கு,  சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் தாளாலர் பேராசிரியர்  ஹாஜி அப்பாஸ், செயலாளர் ஆசிரியர் இஸ்மாயில்,வாழூர் மௌலவி ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பஈ,  ஆசிரியர் ஜின்னா, அழகன்குளம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ஜாஹிர் ஹுஸைன். மற்றும் பலர் இச் சிறப்பான மஜ்லிஸில் திறளாகக் கலந்து கொண்டு, அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொண்டனர். 

விழாவில் இனிப்புகளும், தேனீரும் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவர் மன்றத் தலைவர் நன்றியுறை வழங்க, கல்லூரி முதல்வரின்  சிறப்பான  துஆ மஜ்லிஸுடன்  மீலாதுப் பெருவிழா இனிதே நிறைவை அடைந்தது. வஸ்ஸலாம்.....

இவண்-
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.
Friday, February 18, 2011

பெருமானாரின் மீலாது ஊர்வலம்

முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
                   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (16-2-2011) அன்று செவ்வாய் கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.செவ்வாய் கிழமை காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. 

பிறகு ஊர் மக்கள் அனைவருக்கும் விசேச உணவு வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது.மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவ,மாணவிகளின் மீலாது ஊர் வலம் நடைபெற்றது.இறுதியில் துஆ ஓதப்பட்டு மீலாது விழா இனிதே நிறைவு பெற்றது வஸ்ஸலாம்
இவண்-
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

Friday, February 4, 2011

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் மாதம்

     முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! 
முஸல்லியன்!!! முஸல்லிமா!!!!
              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடைநம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,   ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார்  (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும்,பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின்  புனிதம் நிறைந்த வாழ்க்கை. வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம்.

அது சமயம் இன்ஷா அல்லாஹ்  இந்தியாமலேசியா, மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும்   அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும். இன்னும் கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் பெருமானாரின் வாழ்க்கை வரலாறுகளை  பன்னிரெண்டு நாட்களும் 
பயான் செய்யப்படும்.

ஆகவே இச்சிறப்பான மஜ்லிஸ்களில் முஃமினான ஆண், பெண்கள் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூறி சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்…..


ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு