Posts

Showing posts from June, 2016

மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள் !!!

Image
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள்  இராமநாதபுரம் மாவட்டம்,கிளியூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள்.இவர்களின் இயற்பெயர் மெளலானா  செய்யது ஆலிம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம்  மாவட்டம் வாழூர் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவில்,  பல ஆண்டுகள் பணிசெய்தார்கள்.ஏராளமான  நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கினார்கள். எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாகவும்,தமாசாகவும்  பழகுவார்கள். இவர்கள் வாழூருக்கு கிடைத்த பொக்கிஷங்களில், இவர்களும் ஒருவர்.அல்லாஹ் இவர்களுடைய தீன் பணியையும்,நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ் நாளை மறுமையில் உயர் பதவிகளை  வழங்குவானாக,என்று இன்றைய நாளில் அனைவரும்  துஆச் செய்வோமாக ஆமீன்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி நக்ஷ்பந்தி அவர்கள் மறைவு !!!

Image
பிரபல உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி  நக்ஷ்பந்தி  அவர்கள்  04 -06-2016 அன்று தாருல் ஃபனாவை விட்டும்  தாருல் பகாவை  அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி  வ இன்னா  இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,  உற்றார்,  உறவினர், மற்றும் நண்பர்கள்  அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை  தந்தருளவும், சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணைய  தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்  கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்... வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.  அவர்கள்  

சித்தார்கோட்டை,மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் 21- வது பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
  அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 18-  ( 26-05-2016 )  வியாழன் மாலை, வெள்ளி இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 21- வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் ;- முன்னிலை ;- அல்ஹாஜ்  அ.முஹம்மது யூசுப் அவர்கள். (ஆயுட்கால தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள்) அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். (புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.) ஜனாப் ஆரிப்கான் அவர்கள் (புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ் மு.ஷாகுல் ஹமீது கனி அவர்கள். (தாளாளர் முஹம்மதியா பள்ளிகள்.) மௌலானா மௌலவி அல்ஹாஜ்  சையிது முஹம்மது  புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள். (நிறுவனர் - சித்தாரிய்யா அரபுக் கல்லூரி) வரவேற்புரை ;- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்

சஹ்ருக்கு நேரமாச்சு எழுந்திரு சகோதரி !!!

Image
இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களும்,மூன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜனாப் ஆஸிப் அஹ்மது குரைஷி ஆகியோர், புனித ரமழான் மாதத்தின் சஹ்ர் நேரத்தின் சிறப்பை பற்றி பாடிய சிறப்பான பாடல்.இது மூன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அரபுலகத்தின் பிரபல இஸ்லாமிய பாடகர் மாஹிர் ஜைன் அவர்கள் புனித ரமலானைப் பற்றி பாடிய அழகான பாடல்

Image
Maher Zain (Arabic: ماهر زين‎ ; born 16 July 1981[1] in Tripoli, Lebanon) is a Muslim Swedish R&B singer, songwriter and music producer of Lebanese origin. He released his debut album Thank You Allah, an internationally successful album with strong Muslim religious influences, in 2009. He released his follow-up album Forgive Me on 2 April 2012.

புனிதம் நிறைந்த ரமழான் மாதத்தின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
(1 ) ரமலான் புனித ரமலான். வீடியோ (2 ) ரமலான் புனித ரமலான்.ஆடியோ ( 3 ) ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting

Image
நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள். 01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். 02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும். 03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். 04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும். 05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள். ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும். களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்

ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)

Image
ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும். ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும். பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும். ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது. தொழுகை முறை: ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு. முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓ

லைலத்துல் கத்ர் இரவு அமல்கள் !!!

Image
அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும்  S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்  ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை ) வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்!!!

Image
அருள்   நிறை   லைலத்துல்   கத்ர்   இரவில் அனைவரும்   ஆற்ற   வேண்டிய   அமல்கள் லைலத்துல்   கத்ர்   இரவு   வணக்கம்   பற்றி!!! அண்ணலார்  ( ஸல் )  அவர்கள்   யார்   நன்னம்பிக்கையுடனும் , தூய   நிய்யத்துடனும் , ' ' லைலத்துல்   கத்ர் ''  எனும்   இரவில் விழித்திருந்து   இறை   வணக்கத்திலே   கழிக்கிறாரோ  அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத்   4;  அல்ஹம்து  1  முறை ,  அல்ஹாக்கு முத்தகாதுரு  1  முறை ,  குல்ஹுவல்லாஹு  3  முறை ஓதி   தொழ   வேண்டும் இதன்   பலன் ;  மரண   வேதனை   இலேசாக்கப்படும் , மண்ணரை   வேதனை   குறைக்கப்படும் . (2)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 1  முறை   குல்ஹுவல்லாஹு  27  முறை   ஓதி   தொழ   வேண்டும்   இதன்   பலன்   அன்று   பிறந்த   பாலகனைப்   போன்று   பாவ   மற்றவராகிறார் (3)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 3  முறை   குல்ஹுவல்லாஹு  50  முறை   ஓதி   தொழ   வேண்டும் . இத்   தொழுகை   முடிந்தவுடன்   ஸஜ்தாவில்  3- ம்   கலிமா   ஒரு   முறை   ஓதிய   பின

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.

Image
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. பத்ர் தளம் சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு.

பத்ர் களத்தில் சஹாபாக்களின் சிறப்பு

Image
வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான்  அரபுக் கல்லூரி முதல்வருமான,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி  அவர்களின் சிறப்புப் பேருரைகள்.

பத்ர் மௌலித் தமிழ் மொழிப்பெயர்ப்பு

Image
  

புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு !!!

Image
லால்பேட்டை,ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர். மௌலானா மௌலவி அல்லாமா, ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான், ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லாவின்,புனித  பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு பற்றிய சிறப்புப் பேருரை.

மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம்,கே.எ.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்களின் இஃதிகாப் பற்றிய பேருரை

Image

ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள் !!!

Image
நேன்பில் புடம் போடப்படும் ஈமான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......! உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில்,  உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  நோன்பு ஓரு அதிசயம் பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....! சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….! ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது. உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது. “இறைநம்பிக்கையாளர்களே......!  உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1 நோன்பு உடலையும் உள்ளத

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு