அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Friday, June 3, 2016

புனித நிறைந்த ரமலான் மாதம் !!!அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் 
நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. 
அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான 
நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் 
ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் 
தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக 
ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் 
தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் 
ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க 
நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு 
வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே 
பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு 
நோன்பு வைக்க வேண்டும். 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு 
திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த 
பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய 
பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் 
உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள 
ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும்.
9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  
ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், 
இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 லைலத்துல்
 கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் 
அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும். 


அல்ஹம்து லில்லாஹ் குறைந்த பட்சம் மேல் கூறப்பட்டுள்ள 
அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் 
நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, 
நன்மைகளை, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, 
எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக்கூறியும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளையினரும் வாழ்த்தி, அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள்.  

   
குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு 
www.jamalinet.com மற்றும் www.tmislam.com 
ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண 
விளக்கம் பெறவும்.வஸ்ஸலாம்..

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு