அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Monday, August 29, 2016

மலேசியாவில் இப்னு தைமியாவின் நூல்கள்,கருத்துக்களுக்குத் தடை !!!


மலேசியாவில் பஹாங் மாநிலத்தில் இப்னு தைமியாவின் 
கிதாபுகளையோ, கொள்கைகளையோ மேற்கோள் 
காட்டி பேசுவது ஹராம்.
.
இவ்வாறு அம்மாநிலத்தின் முஃப்தி டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான்
 ஒஸ்மான் அவர்களும் மலேசிய இஸ்லாமிய அமுலாக்க துரையினர், 
மற்றும் மற்ற மாநிலத்தின் மார்க்க அறிஞர்களின் ஆய்வு முடிவில் 
இப்னு தைமியாவின் தீவிரவாதக் கருத்துக்களை கொண்ட 
எந்த ஒரு கிதாபுகளை உபயோகித்து பேசக்கூடாது 
என்று பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
.
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த தீவிரவாததிற்கு எதிரான 
விழிப்புணர்வு மக்கள் சந்திப்பில், தீவிரவாதக் குற்றப் புலனாய்வு 
உயர் அதிகாரி டத்தோ அயுப் கான் மைடின் பிச்சை அவர்கள் 
கூறும்போதும் இதையே வலியுறுத்தி பேசினார். 
.
இதுவரையில் மலேசியாவில் தீவிரவாதப் போக்கில் சென்று 
பிடிபட்டு கைதானவர்கள் அனைவருமே இப்னு தைமியாவின் 
கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களே.
.
இப்னுதைமியா போன்ற கடும்போக்கு கொண்ட வஹாபிகள் 
மிகவும் அச்சுருத்தலுக்கு உரியவர்களே என்றும் பேசப்பட்டது.
.
மேலும் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஒஸ்மான் அவர்கள் 
கூறும்போது மலேசியா காலங்காலமாகவும் இனி எந்தக் 
காலத்திலும் அஷ் அரியா, மாத்துரிதியா 
(ஸுன்னத் வல் ஜமாஅத்) கொள்கையிலேயே 
அமல் செய்யக் கூடியவரகள். 
.
அதனால் இப்னு தைமியா போன்ற வழிகேடுகளையும், 
தீவிரவாதக் கொள்கைகளையும் பரப்பக்கூடிய எந்த 
கருத்துக்கும் அனுமதி கிடையாது என்றார்.
.
மேற்காசிய நாடான மெஸ்ஸிர், ஜோர்டான் மற்றும் 
அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இப்னு தைமியா 
போன்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்ட பலருடை 
நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
.
இந்த உம்மத்தில் பிளவுகளை ஏற்படுத்தி குழப்பத்தை 
உண்டாக்கியவர் இந்த வஹாபிகள் என்பதை 
மக்கள் விளங்கி விலகிக் கொள்ளவேண்டும் 
என்றும் வலியுறுத்தினார்.
.
முஃப்தி அவர்களின் இதற்கு முந்திய 
எச்சரிக்கைகளும் ஃபத்துவாவும் கீழே..

https://m.facebook.com/story.php…
https://m.facebook.com/story.php…
.
நன்றி: Aziz Ahamed Bin Habib.

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Saturday, August 20, 2016

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும், சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற கோவை விவாதம் !!!

 கடந்த ஜூலை மாதம் 19,20,ஆகிய தேதிகளில், இஸ்லாத்தை
 விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும், 
சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற 
விவாதத்தின் முதல் தலைப்பின் 
எடிட்டிங் செய்யப்படாத வீடியோ !!!

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Monday, August 15, 2016

சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் 70 வது சுதந்திர தின விழா 15-08-2016 இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

வெளியீடு-
மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Wednesday, August 3, 2016

ஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் !!!!!

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி 
அபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள்.


ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுமியின் அழகிய பாடல்ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுவனின் அழகிய பாடல்ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
அழகிய மலையாளப் பாடல்ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
ஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல்
வெளியீடு-
மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி
இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.


வெளியீடு-
மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின்  சிறப்பை பற்றி 
நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.
வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

புனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு !!!


முதல் பாகம்.இரண்டாம் பாகம்.மூன்றாம் பாகம்.நான்காம் பாகம்.வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்

12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்..

கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் ..

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.

நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் கு.சே பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்..


மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்..
அதன்பின் போரில் மாண்ட விக்கிரம பாண்டியனின் உறவினனான திருபாண்டியன் என்பவன் ஆந்திரா மன்னனின் உதவியோடு ஆன்மீக செல்வருடன் போர் புரிய போரில் ஆன்மீக செல்வரும் அவர்களுடன் வந்த ஏனைய இஸ்லாமிய வீரர்களும் ஷகிதாகினர்..

இஸ்லாத்தை பரப்பி நியாயத்துக்காக போராடி வென்று செங்கோலும் செலுத்தி நல்லாட்சிப் புரிந்து மனித நேயராய் மார்க்க சீலராய் வாழ்ந்து உயிர் நீத்த அந்த உத்தமரின் உடல்
ராமநாதபர மாவட்டம் ஏர்வாடி என்னும் ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது .. அந்த இறைநேசர்தான் செய்யது இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ்..அதற்கு பிறகு பட்டத்திற்கு வந்த திருபாண்டியன் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் முந்திய ஆட்சியை பாராட்டி அன்னாரின் மகனுக்கும்,வழித்தோன்றல் களுக்கும் பல மானியங்களை வழங்கி கெளரவித்தான்..

இன்று மதுரையில் உள்ள காஜியார் குடும்பத்தினர் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் வழித்தோன்றல்கள் என கூறபடுகிறது ..இவர்கள் இன்றும் அந்த மானியங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ..இது ஏர்வாடி இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம் முழுமையான வரலாறு நீளுகிறது..அது மூமின்களின் உள்ளங்களை ஆளுகிறது.வஸ்ஸலாம்.


நன்றி ;- கவிஞர் நாகூர் காதர்ஒலி...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.

ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.

அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.


அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.

அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.

இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.

உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,


ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.

ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 


தகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Tuesday, August 2, 2016

சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு - MOI- SJM - SSF - 
இணைந்து நடத்தும், சுன்னத் வல்  ஜமாஅத் எழுச்சி மாநாடு,ஆகஸ்டு
 7 ஆம் தேதி,திருப்பூரில், அல்லாமா மர்ஹூம்  ஷைகு ஆதம் 
ஹழரத் ரஹ்மத்துல்லாஹி அவர்களின், நினைவுத்திடலில்,
மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.

இம்மாபெரும் சுன்னத் வல் ஜமாஅத் எழுச்சி மாநாடு ,
மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், 
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளைகள்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு