அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Wednesday, August 3, 2016

ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்

12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்..

கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் ..

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.

நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் கு.சே பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்..


மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்..
அதன்பின் போரில் மாண்ட விக்கிரம பாண்டியனின் உறவினனான திருபாண்டியன் என்பவன் ஆந்திரா மன்னனின் உதவியோடு ஆன்மீக செல்வருடன் போர் புரிய போரில் ஆன்மீக செல்வரும் அவர்களுடன் வந்த ஏனைய இஸ்லாமிய வீரர்களும் ஷகிதாகினர்..

இஸ்லாத்தை பரப்பி நியாயத்துக்காக போராடி வென்று செங்கோலும் செலுத்தி நல்லாட்சிப் புரிந்து மனித நேயராய் மார்க்க சீலராய் வாழ்ந்து உயிர் நீத்த அந்த உத்தமரின் உடல்
ராமநாதபர மாவட்டம் ஏர்வாடி என்னும் ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது .. அந்த இறைநேசர்தான் செய்யது இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ்..அதற்கு பிறகு பட்டத்திற்கு வந்த திருபாண்டியன் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் முந்திய ஆட்சியை பாராட்டி அன்னாரின் மகனுக்கும்,வழித்தோன்றல் களுக்கும் பல மானியங்களை வழங்கி கெளரவித்தான்..

இன்று மதுரையில் உள்ள காஜியார் குடும்பத்தினர் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் வழித்தோன்றல்கள் என கூறபடுகிறது ..இவர்கள் இன்றும் அந்த மானியங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ..இது ஏர்வாடி இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம் முழுமையான வரலாறு நீளுகிறது..அது மூமின்களின் உள்ளங்களை ஆளுகிறது.வஸ்ஸலாம்.


நன்றி ;- கவிஞர் நாகூர் காதர்ஒலி...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு