அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைவருக்கும் பெருமானாரின் 1492 வது மீலாதுப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்

Tuesday, February 28, 2017

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் !!!!


THE NAGOR SAINTS !!!!வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS !!!

நமது நாயகம்  நாகூர் அல் குத்துபுல் மஜீத் 

ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்கள் 

மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் 

NAGOR SESSIONS - THE SAINT

வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப் பற்றி இஸ்லாமியப் பாடகர் இராமநாதபுரம் மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள் !!!
கடலோரம் வாழும் காதிர் மீரான்உம்வாசல்தேடி  வந்தோம்சாஹே மீராஉம்மை ஒருபோதும் நான் மற்வேன்நமணை விரட்ட                                            
                                        கருனை கடலாம் காதிர் வலியின்
வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நமது நாயகம் நாகூர் குத்துபு ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து தமிழ் மொழியில் !!!!                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து


இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

 1. என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே!
 2. சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே!
 3. கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!!
 4. சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே!
 5. தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு நேரடியாக வழமைக்கு மாற்றமான புதுமைகள் எத்தனையோ வெளிப்பட்டன.
 6. செழிப்பான முகத்தில் சம்பூரண இன்பங்கள் எல்லாம் தங்களுக்கென்றே நிறைவாய் அமைந்துள்ளன என் தலைவரே! குருநாதரே! அப்துல் காதிரே!
 7. சர்வ சக்திகளுமுடைய இறைவனின் திருத் தூதர் (ஸல்) அவர்களின் சந்ததியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் வழித் தோன்றலில் உதித்தவர்கள்.
 8. குருநாதர்களுக் கெல்லாம் உதவி புரிபவர்,பரிபூரணச் சந்திரனின்  ஜோதி, தூய்மை நிறைந்தவரே! அப்துல் காதிரே!
 9. பரிசுத்த உள்ளத்தோடும் தூயசிந்தை கொண்டும் அனைத்தையும் படைத்து அருளுதவி புரியும் இறைவன் பாதையில் தண்டித்தீர்கள்.
 10. மேலும் சிறந்த அமல்களைக் கைக்கொண்டும்,வடித்த கண்ணீர் துளிகளைக் கொண்டும் தண்டித்தீர்கள்.ஒ! இறைநெருக்கத்தைத் தரும் வணக்கங்களைத் தேர்ந்தெடுத்தவரே! அப்துல் காதிரே!
 11. இன்னும் திருமணம் செய்யாமலும் இறையச்சத்தாலும் உலகாசையை இதயத்தால் வெறுக்கும் பற்றற்ற தன்மையாலும் (இறைவழியில் தண்டித்தீர்கள்)
 12. இன்னும் அதிக ஆவலுடன் இறைவனை நேசித்தீர்கள்,உயர்ந்த அந்தஸ்துகளை அடையப் பெற்ற அப்துல் காதிரே!
 13.  தங்களின் சந்நிதானத்தில் எத்தனையோ கண்ணியமிகுந்த மார்க்கஅறிஞர்கள், சிறப்புக்குரியவர்கள்,பெரியோர்கள்,வர்த்தகர்கள் யாவரும் வந்து தரிசிக்கின்றனர்.
 14. கிறிஸ்துவர்கள் இன்னும் நஷ்டமடைந்த பிராமணர்கள் உள்பட 
 15. ( எத்தனையோ பேர்கள் வருகின்றனர் ) நோய்கள் கஷ்டங்களை நீக்கக்கூடிய அப்துல் காதிரே!
 16. நாகூர் வாழும் எஜமானே! தாங்கள் என் பார்வை தெளிவடையவும்,என் உறுப்புகள்,காதுகள் விஷயத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
 17. இன்னும் என் வாழ்வு குறைவின்றி நீடித்த ஆயுளுக்கும், ( உதவியாக இருங்கள் ) பெரும் நன்மையான காரியங்களை ஒன்று திரட்டிய அப்துல் காதிரே!
 18. இம்மை மறுமையின் நெருக்கடிகள் என்னைத் தாக்காமல் பெருமையாளனின்,( அல்லாஹ்வின் ) பெருமித நாளில் ( மஹ்ஷரில் ) எனக்கு ஒதுங்கும் தலமாக ஆகுங்கள்.
 19. உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்ற நீங்கள் எனக்கு மறுமைநாளில் தங்கரிய சொத்தாக ஆகிவிடுங்கள் அப்துல் காதிரே!
 20. தங்கரியம் செய்ய நினைப்பவருக்கு எவர்களை நினைவுகூர்வது சொத்தாக அமையுமோ அப்படிப்பட்ட பரிசுத்த நபியின் மீதும்,அவர்களது குடும்பத்தார் மீதும் அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஸலவாத் எனும் கருணையைப் பொழிந்தருள் வானாக!
 21. இன்னும் அன்னாரின் தோழர்கள் மீதும் மதிப்பிற்குரிய அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும்,மஹானே!அப்துல் காதிரே! நாயகமே! தங்கள் மீதும் இறைவன் கருணைபுரிவானாக! ஆமீன்!

வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் நாயகம் அவர்கள் மீது சதக்கத்துல்லாஹ் காஹிரி அவர்கள் பாடிய பைத் !!!!


قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة
قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة

مَادِحُ الرَّسُوْلِ شَيْخُ صَدَقَةُ اللهِ رَحِمَهُ اللهِ عَلَيْهِ

يَاسَيِّدِيْ شَيْخِيْ وَصَدْرَ الصَّادِرِ

كَنْزَالْعُلُوْمِ وَرَمْزَ عِلْمٍ نَادِرٍ

مَرْضِيَّ مَوْلَاهُ الْكَرِيْمِ الْقَادِرِ

يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ

كَهْفَ اللَّهِيْفِ اَمَانَ قَلْبٍ حَاذِرٍ

مَأْوَي الضَّعِيْفِ ضَمَانَ قَصْدِ النَّاذِرِ

غَوْثَ الَّذِيْ فِى الْبَحْرِ كَانَ كَعَاثِرٍ

يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ

كَمْ مِّنْ كَرَامَاتٍ بَدَتْ لِلنَّاظِرِ

وَخَوَارِقِ الْعَادَاتِ عِنْدَ الْحَاضِرِ

وَحُلٰى كَمَالَاتٍ بِوَجْهٍ نَّاضِرٍ

لَكَ سَيِّدِيْ يَاشَيْخُ عَبْدَ الْقَادِرِ

مِنْ صُلْبِ نَسْلِ رَسُوْلِ رَبٍّ قَادِرٍ

مِنْ نَهْجِ مُحْيِى الدِّيْنِ عَبْدِ الْقَادِرِ

غَوْثِ الْمَشَائِخِ نُوْرِ بَدْرٍ بَادِرٍ

يَاطَيِّبًا بِالذَّاتِ عَبْدَ الْقَادِر

جَاهَدْتَّ فِى اللهِ الْمُعِيْنِ الْفَاطِرِ

بِالْبَاطِنِ الصَّافِيْ وَحُسْنِ الْخَاطِرِ

وَخِيَارِ اَعْمَالٍ وَّدَمْعٍ مَّاطِرٍ

يَامُؤْثِرَ الْقُرْبَاتِ عَبْدَ الْقَادِرِ

وَعُزُوْبَةٍ طَابَتْ وَتَقْوَي الْغَافِرِ

وَالزُّهْدِ فِي الدُّنْيَا بِقَلْبٍ نَافِرٍ

وَالْحُبِّ لِلْمَوْلٰى بِشَوْقٍ وَّافِرٍ

يَاسَامِيَ الرِّفْعَاتِ عَبْدَالْقَادِرِ

كَمْ زَارَ رَوْضَكَ مِنْ شَرِيْفٍ كَابِرٍ

مِنْ عَالِمٍ اَوْفَاضٍلٍ اَوْتَاجِرٍ

حَتَّى ا لنَّصَارٰى بَلْ بَرَا مَنْ خَاسِرٍ

يَامُبْطِلَ الْعَاهَاتِ عَبْدَ الْقَادِرِ

يَاصَاحِبَ النَّاهُوْرِ كُنْ لِّيْ نَاصِرِيْ

فِي السَّمْعِ وَالْاَعْضَا وَحُسْنِ الْبَاصِرِ

وَبِطُوْلِ عُمْرٍ لَّابِعُمْرٍ قَاصِرٍ

يَامَجْمَعَ الْخَيْرَاتِ عَبْدَ الْقَادِرِ

كُنْ لِّيْ مَلَاذًا يَّوْمَ فَخْرِ الْفَاخِرِ

لِشَدَائِدِ الدُّنْيَا وَيَوْمٍ اٰخِرٍ

وَذَخِيْرَةً لِّيْ يَوْمَ ذُخْرِ الذَّاخِرِ

يَاعَالِيَ الرُّتَبَاتِ عَبْدَ الْقَادِرِ

صَلَّى الْاِلٰهُ عَلَى النَّبِيِّ الطَّاهِرِ

وَالْاٰلِ ذِكْرُهُمُ ذَخِيْرَةُ ذَاخِرٍ

وَالصَّحْبِ وَالتُّبَّاعِ اَهْلِ مَفَاخِرٍ

وَعَلَيْكُمُ يَاشَيْخُ عَبْدَ الْقَادِرِ

நன்றி ;- சூஃபி மன்ஜில்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புனித நாகூரைப்பற்றி !!!


புனித நாகூரைப்பற்றி !!!
நாகூர்  ;- இப்பெயருடன் கூடிய, ஊர் தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் உள்ளது.இங்கு முற்காலத்தில் நாகமரம், 
( புன்னை மரம் ) அடர்ந்து வளர்ந்திருந்ததின் காரணமாக,நாகப்பூர் 
என ஆகிப் பின்னர் நாகூர் என்று மறுவிற்று என்று கூறுவர்.


இவ்வூரில் அல் குத்புல் மஜீது ஷாஹுல் ஹமீது பாதுஷா 
நாயகம் அவர்கள் வந்து 28 ஆண்டுகள் தங்கியிருந்து,சன்மார்க்க சேவை செய்து,அடங்கப்பெற்றிருப்பதின் காரணமாக,இவ்வூர் 
தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.நாள்தோறும்,இவர்களின் அடக்கவிடத்திற்கு,மக்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர்.
ஆண்டு தோறும் நிகழ்வுறும் இவர்களின் நினைவுநாள் 
விழாவிற்கு,மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும்,வந்து குழுமுகின்றனர்.


புலவர் கோட்டை என்று  பெயர் பெற்ற இவ்வூர்,பல தமிழ் புலவர்களை ஈன்றெடுத்திருக்கிறது.குலாம் காதிறு நாவலரும்,அவரின் மகன் ஆரிஃபு நாவலரும்,இவ்வூரைச் சேர்ந்தவர்களே.சீரியர் செவத்த மரைக்காயர் என்ற புலவரும்,இவ்வூரில் தோன்றியவரே.இன்னும் சில புலவர்களும் இவ்வூரில் தோன்றி வாழ்ந்துள்ளனர்.இவ்வூரில் ஏழு பள்ளிவாயில்கள் இருக்கின்றன.அவற்றில் பழமையானது.நவாப் மஸ்ஜிது ஆகும்.அது நவாபால்,ஏறத்தாழ ஹிஜ்ரி 1100 ஆம் ஆண்டில் தர்ஹாவின் வடபகுதியில்,கட்டப்பட்டது.


இவ்வூரில் நான்கு மதரஸாக்கள் உள்ளன.
அவையாவன ;-  ( 1 ) கௌதியா அரபுக் கல்லூரி பைத்து சபா 
( 2 ) காதிரிய்யா மதரஸா இதில் 300 கல்வி பயிலுகின்றனர். 
( 3 ) முஹ்யித்தீன் பள்ளி மதரஸா இதில் 200 மாணவர்கள் மார்க்க 
கல்வி பயிலுகின்றனர்.( 4 ) வாலெப்பை மதரஸா.இது அவரது அறக்கட்டளையின் கீழ் நூறு ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
இவ்வூரில் தோன்றிய மௌலவி அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் 
சாஹிப் நானாசாஹிப் அரபியில்  முந்நூருக்கு மேற்பட்ட,புகழ்ப்பாக்கள்.இரங்கற்பாக்கள் ஆகியவற்றை
இயற்றி 1953 இல் காலமானார்.சென்னை  உயர்நீதி  மன்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் இவ்வூரில் தோன்றியவரே. தொண்டி,பேரறிஞர் மர்ஹூம்,
எம் ஆர் .எம் அப்துர் ரஹீம் ஸாஹிப் அவர்களால்,
1977 ல் வெளியான இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் 
நூலில் வெளிவந்த செய்தியாகும்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித வரலாறு வீடியோ !!!வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு !!!!!


அறிமுகம்

மாபெரும் தவசீலர், சங்கைக்குரிய குதுபு, ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களால் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம்.நாகூர், இந்த பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த மகானைதான். ஆம், மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித அடக்கஸ்தலம் இந்தியாவில், தமிழ் நாட்டில், நாகூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

ஜனனம்

ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அண்மையில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறை 10 ஜமாத்துல் ஆகிர் மாதம் ஹிஜ்ரி 910 (கி.பி. 1491) இல் பிறந்தார்கள். அவர்களின் தந்தை பெயர் ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப், தாயார் பெயர் பீபி பாத்திமா.

ஜனனத்தின் மகத்துவம்

ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் 22 ஆம் பரம்பரையிலும் குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்களின் 9 ஆம் பரம்பரையிலும் வந்துதித்தவர்கள் ஆவர்.

நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறக்கும் முன்னர் ஒருநாள் அவர்களின் தாயார் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை கனவில் கண்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் தாயாரிடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பார் என்றும் அவர் தன் வாழ்க்கையை இஸ்லாத்துக்காகவும் மக்களை பாதுக்காக்கவும் செலவழிப்பார் என்று கூறி சென்றார்கள்.

கல்வி

சிறு வயது தொடக்கமே நாகூர் நாயகம் அவர்கள் ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும் மிக சிறந்த ஒழுக்க சீலராகவும் இறைதொடர்புடையவராகவும் இருந்தார்கள். எட்டு வயதிலேயே அரபி மொழி மற்றும் அதன் இலக்கணத்தை கற்றார்கள். பின்னர் தமக்கு ஆன்மீக கல்வியை போதிப்பதற்காக ஒரு ஆன்மீக வழிகாட்டியை தேடி இறுதியில் குவாலியூர் சென்று ஹஸ்ரத் சையத் முஹம்மத் கௌஸ் சாஹிப் குவால்லியூர் கல்விக்கூடத்திலே சேர்ந்தார்கள்.

இஸ்லாமிய அழைப்பு பணியும் அற்புதங்களும்

சுமார் பத்து வருட பயிற்சியின் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர்களின் 404 மாணவர்களுடன் மாணிக்கப்பூர் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்து இஸ்லாமிய தஃவா பணி செய்தார்கள். இக்காலங்களிலே பல்வேறு கராமத்துகளை (அற்புதங்களை) செய்து காட்டினார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்தல், பிறவி ஊமையை பேச வைத்தல், முடவர்களை மீண்டும் நடக்கச் செய்தல், தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை சுகப்படுத்துதல் என பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.

பின்னர் மக்கமா நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள். வழியில் லாகூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தார்கள். அப்போது காழி ஹஸ்ரத் நூர்தீன் சாஹிப் என்னும் சாலிஹான ஒரு முஸ்லிம் தனவந்தர் நாகூர் நாயகத்தை சந்தித்து தனக்கு பிள்ளை இல்லை என கூறி கலங்கி நின்றார். நாகூர் நாயகம் அன்னவர்கள் சில வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அல்லாஹ்விடம் குழந்தை கிடைக்க துஆ செய்தார்கள். அன்னவர்களின் துஆ பரக்கத்தினால் அவரது மனைவி கருவுற்று சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் என்னும் ஒரு இறைநேசரை ஈன்ரெடுத்தார்கள்.

மகனுடன் ஒன்றினைதல் 

அந்த குழந்தைக்கு ஏழு வயது வரை சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு பின்னர் தன் உண்மையான ஆன்மீக தந்தை நாகூர் நாயகத்தை காண்பதற்காக மக்கா நோக்கி பயணம் செய்து பின்னர் அவர்களை வந்தடைந்தது. பின்னர் நாகூர் நாயகம், அவர்களின் மகன் மற்றும் 404 முரீதுகள் (மாணவர்கள்) என எல்லோரும் இலங்கை, காயல்பட்டினம், கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

நாகூர் வருகை

இறுதியாக நாகூர் நாயகம் அவர்கள் தஞ்சாவூர் வந்தார்கள். அப்போது நாய்க் வம்சத்தினர் அங்கே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர். அங்கே தீர்க்க முடியாத, நீண்டகால நோயோடு அதன் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் வாழ்ந்து வந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னருக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் அங்கே சென்று மன்னருக்கு சூனியம் செய்யப்பட்டு உள்ளதையும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களை கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்கள். தன் மகனை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து, ஓதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பில் இருந்து கழற்றி எடுத்தார்கள். அனைத்தும் நீங்கியவுடன் மன்னர் பரிபூரண சுகமடைந்தார்.

கண்ணெதிரே நடந்த அற்புதத்தை பார்த்து கொண்டிருந்த மகாராணி, நாகூர் நாயகத்திடம் தனக்கும் மன்னருக்கும் இடையே குழந்தை பாக்கியம் இல்லா குறையை சொல்லி தமக்கு உதவுமாறு காலில் விழுந்து கேட்டாள். நாகூர் நாயகம் அவர்கள் அவ்வாறே துஆ (பிரார்த்தனை) செய்ய அவர்களுக்கு நல்ல ஒரு சந்ததி உண்டாயிற்று. நாகூர் நாயகம் அவர்களின் இப்பெரிய உதவிகளுக்கு கைமாறாக மன்னர் பல சொத்துக்களையும் பணங்களையும் கொடுத்தார். ஆனால் நாகூர் நாயகம் அவர்கள் அவற்றை வாங்கவில்லை. மாறாக, கடலோரத்தில் தனக்கு ஒரு துண்டு நிலம் தருமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, மன்னர் கடலோரத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை “சுவர்க்க பூமி” என கூறி நாகூர் நாயகம் அவர்களிடம் கையளித்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய நாகூர் தர்கா மற்றும் கட்டிடங்கள் அமையப்பெற்றுள்ளன.
குடும்ப வாழ்க்கை அவர்கள் தம் வானாளின் கடைசி காலம் வரை அங்கேயே தன் மகனோடு வாழ்ந்தார்கள். அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்களின் மகனார் சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் அவர்கள் காஜா மஹதூமுல் யமனியின் மகளாகிய சையத் சுல்தான் பீவி அம்மா சாஹிபா அவர்களை மணந்தார்கள். அவர்கள் இருவரினது மூலம் ஆறு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றனர்.

துறவு

நாகூர் நாயகம் அவர்கள் ரஜப் மாதம் நாகூருக்கு சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள வஞ்சூர் என்னும் ஊருக்கு சென்று மரப்பலகையினால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் இருந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள். அந்த இடத்திலேயே தற்போதைய வஞ்சூர் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. மேலும் நாகூர் கடலோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள்.

மறைவு

ஹிஜ்ரி 978 ஆம் ஆண்டு நாகூர் நாயகம் அவர்கள் தமது 68ஆம் வயதில் ஒரு வெள்ளிக்கிழமை இப்பூவுலகை விட்டும் மறைந்தார்கள். அவர்களின் அறிவுரையின்படியே அவர்களது புனித மண்ணறை (கப்ர்) அமைக்கப்பெற்றது. அவர்களின் புனித மண்ணறைக்கு வலது பக்கத்தில் அவர்களின் மகனார் மற்றும் மருமகளின் புனித மண்ணறைகள் அமையப்பெற்றுள்ளன.
நாகூர் தர்காவும் மக்கள் செல்வாக்கும்,தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பலவழிகளில் உதவிகள் செய்துள்ளனர். துலசி மகாராஜா அவர்கள் 115 கிராமங்களையும் 4000 ஏக்கர் வேளாண்மை நிலத்தையும் பள்ளிவாசலின் பரிபாலனத்திற்காக கொடுத்துதவினார். மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அற்புதங்கள் அவர்களின் மறைவோடு நின்று விடவில்லை. இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் தினமும் சங்கை மிக்க நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள அன்னவர்களின் நாகூர் தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.

நாகூர் நாயகம் அவர்கள் ஒரு வியாழக்கிழமை தினமன்றே நாகூரிற்கு வருகை தந்தார்கள். எனவே, ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெருந்திரளான மக்கள் தர்காகவிற்கு வந்து நாயகத்தை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் நாகூர் நாயகத்தின் கந்தூரி விழா இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிர் மாதம் முதல் நாள் தொடங்கி 14 நாட்கள் நடைப்பெறுகின்றன. இந்த கந்தூரி விழாவிற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அரேபியா, பர்மா, மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர்பிரதேஷ், மேற்கு வங்காளம் என உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு செல்கின்றனர். -

நன்றி - www.mailofislam.com
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, February 26, 2017

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நாகூர் நாயகத்தின் மௌலிது ஷரீஃப் !!!!!முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப், இவ்வாண்டு,
இன்ஷா அல்லாஹ் 27 -02 -2017 திங்கள் மாலை,செவ்வாய் இரவு 
( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1438 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் 
மௌலிது ஷரீஃப் 08-03-2017 (ஜமாதுல் ஆகிர் 
பிறை 10-1438 ) புதன்  கிழமையோடு நிறைவு பெறும்.

ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், 
மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா,மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின்  
சீரிய தலைமையில் நடைபெறும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது 
கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்...வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு