Posts

Showing posts from January, 2012

Moulidur Rasool Invitation

Image
சுந்தர  நபிகளாரின்  சந்தனப்  புகழ்  பாடும்  மாதம்       முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!                            முஸல்லிமா !!!!                அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடை ,   நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம்  ( ஸல் )  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான ,    ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து , பெருமானார்   ( ஸல் )  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும் , பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம் .  மேலும் பெருமானாரின்    புனிதம் நிறைந்த வாழ்க்கை .  வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம் . அது சமயம் இன்ஷா அல்லாஹ்    இந்தியா ,  மலேசியா ,  மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும்    அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும் .  இன்னும் கண்ணியமிகு உலமாப

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

        பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!      மௌலானா டி,ஜெ,எ. ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது முஹம்மது நபி ( ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும் . எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும் . புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா , உத்தம நபியின் உதய தின விழா , மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும் . கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி ( ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ , விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது மீலாது விழாக்களில்  அனாச்சாரம் ,   ஆடம்பரம் , கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது . மனித சமுதாயத்தின் உயர்வுக்கும் , அன்பு , பண்பு , ப

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு