Posts

Showing posts from January, 2014

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா !!!!

Image
அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 24 (26-01-2014) ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்பாரில், ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலையில்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார்கோட்டை கிளையின்  முக்கியஸ்த்தர்கள் ,கொடியேற்றினார்கள். ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 25 (27-01-2014)  திங்கட்கிழமை  காலை 9-30 மணிக்கு சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்,முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் மாணவர்கள் இன்னும் வெளியூர்  உலமாப் பெருமக்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் புனிதம்  வாய்ந்த  மௌலிது ஷரீஃப், ஓதினார்கள். சித்தார்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌல

ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம் !!!

Image
. வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர் பிறை 1- (31-01-2014) வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்கி,பிறை 11- 4-1435  (10-02-2014) திங்கட்கிழமை வரை 11 நாட்கள்,மலேசியத் தலைநகர் நமது மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெறும், அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும்  ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப்  நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்... வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!!

Image
அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் திருப்பெயரால்           சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த             உத்தம திருநபியின் உதய தின விழா             அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரபீஉல் அவ்வல்  பிறை 17-ல்  (19-01-2014)  ஞாயிற்றுக்கிழமை  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இடம்-     முஹம்மதிய பள்ளிகளின் மைதானம். தலைமை- தீனுல்லாஹ் கான்.அவர்கள்.           (தலைவர்,முஸ்லிம் தர்ம பரிபாலன சபா) முன்னிலை- சித்தார் கோட்டை ஜமாஅத்தார்கள். கிராஅத்-  சின்னப்பள்ளி இமாம்  மௌலானா மு.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி  அவர்கள். வரவேற்புரை- செயலர் அவர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா துவக்கஉரை- ஹாஜி அஹமது கபீர்  அவர்கள் மீலாது நினைவுப்பரிசு வழங்கியவர்கள் ;- அல்ஹாஜ் ஃபக்கீர் நெய்னா முஹம்மது அவர்கள். சிறப்புரை-  கடலூர் மாவட்டம்,பரங்கிப்பேட்டை,நவாப் ஜும்ஆப் பள்ளி இமாம். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.ஆர்.கௌஸ் முஹ்யத்தீன்  ஹஜ்ரத் மன்பயீ அவர்கள். சிறப்புப் பேருரை-  வீரசோழன் ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம் அரப

முதல் மீலாது மாநாடு !!!

Image
இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம். ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89 பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு