அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Wednesday, January 29, 2014

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா !!!!

அன்புடையீர்! 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 24 (26-01-2014) ஞாயிற்றுக்கிழமை மாலை 5-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தர்பாரில், ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலையில்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார்கோட்டை கிளையின் முக்கியஸ்த்தர்கள் ,கொடியேற்றினார்கள்.
ஹிஜ்ரி 1435 ரபீஉல் அவ்வல் பிறை 25 (27-01-2014)  திங்கட்கிழமை 
காலை 9-30 மணிக்கு சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்,முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் மாணவர்கள் இன்னும் வெளியூர் 
உலமாப் பெருமக்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் புனிதம் 
வாய்ந்த மௌலிது ஷரீஃப், ஓதினார்கள்.


சித்தார்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி ஹஜ்ரத், சின்னப்பள்ளி 
இமாம் மௌலானா மு.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி ஹஜ்ரத் 
ஆகியோர் சிறப்பு துஆ ஓதினார்கள். 


பெருங்குளம் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி அப்துல் காதிர் ஜீலானி ஆலிம் ஸிராஜி ஹஜ்ரத்,இராமநாதபுரம்,பாரதிநகர் புஹாரி ஆலிம் ஜும்ஆப்பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் சைய்யது அக்பர் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புப்பேருரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் உள்ளூர்,மற்றும் வெளியூர் பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,இறைநேச செல்வர்களின் அன்பையும்,பெற்றுக் கொண்டார்கள்.அனைவருக்கும் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாம்.வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு