Posts

Showing posts from December, 2014

மேலப்பாளையம் மாநகரில் ஷரீஅத் விளக்க கூட்டம் & மௌலானா S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் எழுதிய வெளிச்சப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா !!!1

Image
மாபெரும் ஷரீஅத் விளக்க  மாநாடு மற்றும்  “வெளிச்சப் பூக்கள்”  புத்தக வெளியீட்டு விழா, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருமானாரின் மாபெரும் மீலாது மாநாடு மற்றும் “வெளிச்சப் பூக்கள்” புத்தக வெளியீட்டு விழா !!!

Image
பெருமானாரின் மாபெரும் மீலாது மாநாடு மற்றும்  “வெளிச்சப் பூக்கள்”  புத்தக வெளியீட்டு விழா, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1489 வது மீலாது விழா!!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு  தினங்களும் பயான் செய்யப்படும், ஆகவே இச்சிறப்பு

பெருமானாரின் மௌலித் ஷரீஃப், மற்றும் மீலாதுப் பெருவிழா பற்றிய பயான்கள் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்களைப் பற்றிய அழகிய பாடல்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

உலகம் முழுவதும் நடைபெற்ற பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சுப்ஹான மௌலிது ஷரீஃப் தமிழாக்கத்துடன் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மன்னர் நபியின் மாண்பார் அற்புதங்கள் !!!

Image
வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் வாழ்வுக்காலம். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்புவியில் சந்திரக் கணக்குப்படி 63 ஆண்டுகள், 3 நாட்கள், 6 மணி நேரமும்,சூரியக் கணக்குப்படி 61 ஆண்டுகள், 49 நாட்கள், 6 மணிநேரமும் வாழ்ந்து வையகத்திற்கு வெற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் சரீர சக்தி! ஒரு நபிக்கு 500 மனிதர்களின் சக்தி உண்டு,காரணம் வஹியைத்தாங்க அதிக சக்தி வேண்டும். ஆனால் நீதர்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் 4 0 நபியின் சக்தியை கொடுக்கப்பட்டவர்கள்.சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்!.....  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள். 1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள்  தங்கள் முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,பின்னாலும் தொலைவிலும் இருப்பதையும் ஏக காலத்தில் ஒன்றாகவே  பார்ப்பவர்களாக இருந்தார்கள். 2. பகலிலும்,வெளிச்சத்திலும் பார்ப்பதைப் போன்றே,இரவிலும்,இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள். 3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும். 4.

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்ற மகத்தான வெற்றி !!!

Image
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை. இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.  நபி (ஸல்) அவர்களின் இரு

முதல் மீலாது மாநாடு !!!

Image
இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம். ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89 பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?

Image
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா?  ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உருவாக

மீலாது விழாவின் அடிப்படை நோக்கங்கள்

Image
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!  மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் : மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.  அல்லாஹுதஆலா கூறுகிறான்: "அல்லாஹுத

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

Image
பிஸ்மிஹி தஆலா ''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்'' ''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்'' மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!! மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக்  கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும். எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ, விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது. மீலாது விழாக்களில் அனாச்சாரம், ஆடம்பரம்,கேளிக்கூத்துகள் எதுவ

إحياء علوم الدين

Image
  மலேசியத் தலைநகர்  selayang  இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில்,  ( 06-12-2014 )  அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். அது சமயம்  selayang  மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்  தலைமை இமாம்,,மௌலானா மௌலவி, அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.

உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  05-12-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை       குத்பா பேருரை        மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள். தலைப்பு ;-  உள்ளமையை உணர்த்தும் உன்னத உலகம் !!! 

சென்னையில், 05-09-2014 அன்று தமிழக மஸ்ஜித் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் & சுன்னத் ஜமாஅத் பாதுகாப்பு பேரவை சார்பாக நடத்தப்பட்ட மார்க்க விளக்க மாநாடு !!!

சிறப்புரை மௌலானா அல்ஹாஜ் சன்மார்க்க போர்வாள் மௌலவி அல்ஹாஜ் S .சைபுத்தீன் ரஷாதி தலைப்பு:- குர்ஆன் , ஹதீஸ் ஆதாரத்துடன் சூனியம் சிறப்புரை  மௌலவி அல்ஹாஜ் M .சதீதுத்தீன் பாகவி  தலைப்பு : நான்கு மத்ஹபுகளும் மத்ஹப் மறுப்பாளர்களும்

இலங்கை,காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு-2014 பயான்கள்.

தலைமையுரையும் வரவேற்புரையும். ஸுபிஸமும் வஹ்ஹாபிஸமும். நன்மையைச் சேர்த்து வைத்தல். கூட்டு துஆவும்,பறகத் பெறுதலும். வழிகெட்ட கூட்டத்தினர் வஹ்ஹாபிகள். நான்கு மத்ஹப்களை பின்பற்றுதல். ஸஹாபாக்கள் ஓதிய மௌலித். கப்றுகளை தரிசித்தலும், கட்டிடம் அமைத்தலும். வஸீலா  தேடலும்,இரட்சிப்புத் தேடலும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை,மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு,

Image
திருக்குர்ஆன் விரிவுரை;-       மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்.

( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா 14 வது வசனம் முதல் 37 வரை.

Image
மலேசியத் தலைநகர்  selayang  இமாம் கஜ்ஜாலி மதரஸாவில்,29-11-2014   சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன்  விரிவுரை வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். .  தலைப்பு ;-  ( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா  14 வது வசனம் முதல் 37 வரை. சிறப்புப்பேருரை ;-  selayang  மதரஸா,  இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம், மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,  ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

ஒடுக்கத்து புதன் பற்றி !!!

Image
ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன் கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82 அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு -தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை. -அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை. -துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை. -இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை. நோயின் துவக்கம். عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين] இறைத்தூதர் ص

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு