அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, July 31, 2016

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் !!!


சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலின்
 சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!!

ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள் 
இது ஒரு ஷாபி பள்ளிவாசல்......

இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்?????
ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!!

ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள்.
இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....

இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று.........

உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார்கள்.  அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப்.

மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள். அதில் ஒருவர் பெரியவர் மட்டும் கை, முகம், கால்கள் என்று சாவகசமாக எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்...

எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன விளக்கங்கள் 
மன்னருக்கு நிம்மதி தரவில்லை. .....

அந்த ஒரு பெரியவர் மன்னரிடத்தில் உங்கள் கேள்வி என்ன என்று கேட்க அந்த மன்னர் அந்த ஹதீஸின் வசனத்தை கூறினார்.

இதை பொறுமையாக கேட்ட அந்த பெரியவர் அந்த மன்னரிடம்,

நீங்கள் தான் மன்னர் ஆச்சே உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கா என்று நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் பல பெண்களுடன் உறவு வைத்து உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் சூது விளையாடியது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

இப்படி ஒவ்வொன்றாக கேட்டு விட்டு பிறகு அந்த பெரியவர் நவாபிடம் கூறினார் ஒரு மன்னர் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று இருந்தும் அல்லாஹ் தடுத்த விஷயத்தை விட்டும் உங்கள் கல்பை சிறை வைத்து இருப்பதால் நீங்களும் சிறைவாசிதான்..... கவலை பட தேவை இல்லை என்று சொன்னதும் நவாப் மகிழ்ந்து விட்டார்...

அந்த பெரியவருக்கு நவாப் அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்க வில்லை, அந்த பெரியவரோ எனக்கு எதுவும் வேண்டாம் அப்படி தருவதாக இருந்தால் அல்லாஹ்வின் பாதையில் ஒரு பள்ளிவாசலை மட்டும் கட்டுங்கள் என்று கூறினார்கள்..... அது தான் மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல் ....மார்க்க விளக்கம் தந்த அந்த பெரியவர்கள் தான், கீழக்கரையில் மறைந்து வாழும் வலியுல்லாஹ் (இறை நேசச் செல்வர் ) மஹான்  சதகத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி   அவர்களாகும்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்..

இராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குடும்பம் !!!


ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.

மறைந்த டாக்டர்  மர்ஹூம் அப்துல்லாஹ்வுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.

மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் மர்ஹூமா செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப் படிப்பைத் தொடரவைத்தார். நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார். பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.

எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார். அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை. ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.

அவர்கள் திருமணம் செய்துகொண்டவர்களும் டாக்டர்கள்தான். மொத்தமாக எங்கள் வீட்டில் இப்போது 20 டாக்டர்கள்.’’ என்று பெருமிதமாகச் சொன்னார். ஒரு பழமையான மரத்தை வெட்டுவதற்கு, அரசு நிர்வாகம் முயற்சி எடுத்தபோது, அதில் உள்ள பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்திவர் டாக்டர் பாபு அப்துல்லா.

‘‘வீட்டில் எல்லோரும் டாக்டர்கள் என்பதால், வருடத்துக்கு ஒருமுறையோ, ஏதாவது விசேஷத்துக்கோதான் ஒன்று சேர முடிகிறது. எங்களுக்கு ஓய்வே இல்லை. நாங்கள் வீட்டில் இருந்த நாட்களைவிட, மருத்துவமனையில் இருக்கும் நாட்கள்தான் அதிகம்’’ என்று சிரிக்கிறார் டாக்டர் சுல்தானா. சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சுல்தானா டாக்டரிடம் போனால், சுகப்பிரசவம் என நம்பி வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப, சிசேரியன் பிரசவங்களை முடிந்தவரையில் தவிர்த்து, அதிக அளவில் சுகப்பிரசவங்களை நடத்தி, கைராசிக்காரர் எனப் பெயர் வாங்கியிருக்கிறார்.

“ஓய்வே இல்லாமல் மற்றவர்களின் உடல்நலனைக் கவனித்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலைக் கவனிக்க நேரம் இருக்கிறதா?”

“காலையில் எழுந்து தோட்டத்தில் உள்ள செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவேன். வாக்கிங் போவேன். வீட்டுக்குள்ளேயே சிம்பிளான உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதுவே சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, பேட்மிண்டன் விளையாடுவேன். மேலும், சில விளையாட்டு கிளப்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறோம்” என்கிற பாபு அப்துல்லாவைத் தொடர்ந்தார் தம்பி சின்னத்துரை அப்துல்லா. “நானும் என் மனைவியும் சேர்ந்து, வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் போவோம். சிம்பிளான உடற்பயிற்சிகள் தினமும் செய்வோம். உடற்பயிற்சியைப் போல, உணவுக்கும் அதிக முக்கியத்துவம் தருவோம். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வோம். விசேஷ நாட்களில் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலேயே எல்லா ஸ்பெஷலிஸ்ட்களும் இருப்பதால், உடலில் ஏதாவது பிரச்னை வந்தால், கன்சல்ட் செய்வோம். உடற்பயிற்சி, சரியான உணவு, மருத்துவ வேலைகளில் பிஸி என இருப்பதால், இதுவரை யாருக்கும் எந்த பெரிய நோயும் வந்தது இல்லை.’’

இந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மருத்துவரான ஷாநாஷ் ஃபாருக் அப்துல்லா, “குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது. டி.விகூட அதிகம் பார்ப்பது இல்லை. வீட்டுக்கு வந்தால் உடனே, ஹாஸ்பிட்டலில் இருந்து ‘சீரியஸ் கேஸ்’ னு போன் வரும். இந்தப் பரபரப்பிலும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் வாழ்க்கை மருத்துவத் துறையைச் சார்ந்து இருப்பதால், குடும்பமாகச் சேர்ந்து பேசும் போதுகூட, மருத்துவம் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். ரம்ஜானுக்கு எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. வீடே ஒரு மருத்துவ மாநாடு மாதிரி இருக்கும்.” என்று சிரிக்கிறார்.
“ராமநாதபுரத்தை மருத்துவ நகரமாக மட்டும் இல்லாமல், கல்வி நகரமாகவும் மாற்ற எங்கள் அப்பா கனவு கண்டார். அதை நாங்கள் முடிந்த அளவு நிறைவேற்றிவருகிறோம். கூடுதலாகப் பசுமை நகரமாக்குவதும் எங்கள் குடும்பத்தின் கனவு. யார் போன் செய்து கேட்டாலும் மரக்கன்றுகளை வழங்கியும், நடுவதற்கு இடம் கொடுத்தால் நட்டுப் பராமரிக்கவும் செய்கிறோம். மருத்துவம் மட்டுமல்ல, மக்களுக்காகச் செய்யும் எல்லா சேவையுமே உயர்வானவைதான்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா.

டாக்டர் குடும்பம் தரும் டிப்ஸ் வெயில் காலங்களில், காட்டன் உடைகளை அணியுங்கள். உணவில் காரத்தைக் குறைப்பது நல்லது. பழங்கள் அதிகமாகச் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு, தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். ஒருமணி நேர சிம்பிள் உடற்பயிற்சிகளை வாரம் மூன்று நாட்களாவது செய்யுங்கள். 20 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த, ஜங் ஃபுட் உணவுகளைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்குக் காய்கறிகள், கீரைகள், மீன் என சத்தான உணவை, சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். உடலில் பிரச்னைவந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல் டாக்டரைப் பாருங்கள்.

சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டாலே, பல நோய்கள் நம்மை அணுகாது. மனதை அலைபாயவிடாமல், ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள். விதை ஒன்று விருட்சமானது!

ராமநாதபுரத்தின் முதல் டாக்டரான மர்ஹும்  அப்துல்லாஹ், தன் தாய் பெயரிலேயே செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். வறுமை, அறியாமை காரணமாக, அந்த காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அந்தத் தருணத்தில், டாக்டர் அப்துல்லாஹ், மற்ற ஆசிரியர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று, வயல்வேலை, கால்நடை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை, சாப்பாடுபோட்டுப் படிக்கவைப்பதாக உத்தரவாதம் கொடுத்து, மாணவர்களை விடுதியில் தங்கிப் படிக்க வைத்தார்கள்.. அப்படிப் படித்த மாணவர்களில் இன்று பலர், ஐ.ஏ.எஸ் உட்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்..

தூக்கம் !!!


"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் :
* பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது 
வறுமையை உண்டாக்கும்.

* லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில் 
சோம்பலை ஏற்படுத்தும்.

* சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில் 
தூங்குவது அறிவாற்றலை அதிகப்படுத்தும்.

* சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம் 
சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும் 
தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும்.

* பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது 
அழிவை ,நாசத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில் 
கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது 
அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும்.


அதிகமான தூக்கம் கீழ் காணும் 
விளைவுகளை ஏற்படுத்தும் ,

* மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும்,

* சளியை அதிகப்படுத்தும்,

* உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்.,

* வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்,

* பார்வையை பலகீனப்படுத்தும்..

இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றது.
எனவே ஸுப்ஹு , அசர் நேரத்தில் தூங்குவது இதை 
விட தங்கடமானதும் கெட்டதுமாகும்.

( நூல் - முஹிம்மாதுள் முதஅல்லிமீன்)


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் அரசாட்சி புரியும் மஹான் சீனி அப்பா ஷஹீது வலியுல்லாஹ் !!!

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிக்கு அருகிலுள்ள, சுந்தரமுடையான் என்ற அழகிய கிராமத்திலுள்ள, அந்தக் கடற்கரையில் அலைகள் இல்லை. அமைதி கொஞ்சும் ஏரி போல் நீலக்கடல் விரிந்து கிடக்கிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மரங்கள் நிழல் விரித்திருக்கின்றன. மன அமைதியை நாடி மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கலாம். இங்குதான் அமைந்திருக்கிறது சீனி அப்பா தர்கா.
ராமநாதபுரம் மாவட்ட இறைநேசர்களின் உறைவிடங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. இது. மண்டபத்திற்கு மேற்கே சுமார் பத்து மைல் தூரத்தில் தர்கா அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மண் சாலையைக் கடந்து வரவேண்டும். வந்து சேர்வதற்கு சிலருக்குக் களைப்பாகவும் தோன்றலாம். ஆனால்,தர்காவுக்கு வந்த பிறகு நிழலும் கடல் காற்றும் தரும் சுகத்தில் அலுப்பும் களைப்பும் அகன்றுவிடும். இந்த இடத்திற்குப் பெயர் மரைக்காயர்பட்டினம். பிரபலமான பாம்பன் கடல் பாலமும் அருகிலுள்ள மண்டபம் பகுதியில்தான் அமைந்துள்ளது.


ஹழரத் யாசீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு என்று சிறப்பிக்கப்படும் சீனி அப்பா, ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள இறைநேசர் மஹான் சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களுடன் அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

சீனி அப்பாவின் செல்வாக்கு கொஞ்ச நஞ்சமல்ல. ஏர்வாடி தர்காவை தரிசிக்க வருபவர்கள் சீனி அப்பா தர்காவையும் தரிசித்து நல்லாசி பெறாமல் போவதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பலர் சீனி முகம்மது, சீனி வாப்பா என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவின் செல்வாக்கே இதற்குக் காரணம்.

தர்காவுக்கு அருகிலேயே ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. உள்ளூர் மக்களும், தர்காவுக்கு வரும் வெளியூர் அன்பர்களும் அங்கு தொழுகிறார்கள். தர்காவுக்கு வருபவர்கள் தங்கிச் செல்வதற்கு இடவசதியும் உள்ளது.
அப்பா நிகழ்த்திய அற்புதங்கள் ;-

யாசீன் எனும் இயற்பெயரைக் கொண்ட சீனி அப்பா ஹிஜ்ரி 582-ல் (கிபி 1177) தமிழ்நாட்டுக்கு வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அவருடைய மற்றொரு பெயர் அப்துல் காதிர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் ஒரு போரில் உயிர் துறந்தார். சீனி அப்பாவைப் பற்றியும் மரைக்காயர் பட்டினத்தைப் பற்றியும் சரித்திர ஆசிரியர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் தமது நுாலில் எழுதியுள்ளார்.

கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் புலவர் எழுதிய சீனி அப்பா பற்றிய கஸீதா முக்கியமான ஒன்று. தனது வயிற்று வலியைக் குணமாக்கியதால் நன்றி கூறி எழுதப்பட்ட கஸீதா அது. இறைநேசர் சீனி அப்பா பல அற்புதங்களை அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளார். நோயுற்றவர்கள் குணமடைவதற்காக இந்த தர்காவிற்கு வந்து தங்கிச் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Saturday, July 30, 2016

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள் !!!
யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்.
அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகிமை:

ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.
மக்பராக்கள்:

ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.

நோய் தீர்க்கும் தலம்:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். 

மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.

சந்தனக்கூடு திருவிழா: 

சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.

சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!


கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான்
இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ
கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி) 
- சிஸ்தான் - கிழக்கு ஈரான்
ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக்
ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான்
ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான்
இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா
இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான்
இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான்
இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா
இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான்
இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக்
இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன்
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக்
இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா
இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான்
மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் !!!


காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.

ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள்.

 தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.

இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர். இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் மகத்தானது.

மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப், ஹதிய்யா மாலை, ஹத்யா ஷரீப், ராத்திபத்துல் ஜலாலிய்யா போன்ற எண்ணற்ற கிரந்தங்களை நமக்குத் தந்துள்ளார்கள்.

தங்களது 84 ம் வயதில் ரஜப் பிறை 5 ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை 
மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் 
அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 


மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.
இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், 
அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்,அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் ஆரம்ப மாகிவிட்டது. பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 50ம் ஆண்டு நினைவு நாள் விழா

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 
50ம் ஆண்டு நினைவு நாள் விழா 28.7.2016 அன்று பனைக்குளம் 
முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய 
முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் 
நிர்வாகிகள் முன்னிலையில், பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா 
ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு மஜ்லிஸும்,
அதனை தொடர்ந்து யாஸீன் ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது. இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை,வாலிநோக்கம்,ஆற்றங்கரை,அழகன்குளம், புதுவலசை, 
அத்தியூத்து, சித்தார்கோட்டை,வாழூர்,பெருங்குளம், உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் மகான்பாபாவின் 
நேசர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்
 குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Saturday, July 23, 2016

முஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( த த ஜ )


கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் வஹ்ஹாபிகளே! உங்களுக்கு ஆண்மை இருந்தால் நீங்கள் பெட்டைகள் இல்லையென்றால் வாதத்துக்கு வாருங்கள் என ஓர் குரல் ஒலித்து சொரணைகெட்டுக் கிடந்த வஹ்ஹாபிசத்துக்கு கொஞ்சம் ரோஷமேற்றியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் முஹம்மது முஸ்தபா மஸ்லஹி என்னும் வஹ்ஹாபிசத்தின் சிம்ம சொப்பணம்!ரோஷத்தி விளைவு வேறு வழியில்லாமல் விவாத களத்தை சந்தித்து தனக்கு தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள ததஜ மூடர்கள்.விவாதத்தில் த த ஜ வினர் எழுந்து நிற்க முடியாத வகையில் சொத்தைகளாக்கப்பட்டனர்.

திருக்குர் ஆனில் எழுத்துப்பிழையென ஓர் கொள்கையை வகுத்து யூத கைக்கூலித்தனத்தின் முழு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்த ஜெயினுலாபிதீன் கோஷ்டியினரின் வேஷ்டியை தூத்துக்குடியில் அவிழ்த்தெறிந்ததில் தொடங்கியது மஸ்லஹியின் விவாதப்பயணம்! அல்ஹம்துலில்லாஹ்!

அற்புதமான பேச்சாற்றலும் தெளிவான சொற்களும் கொண்ட முஸ்தபா மஸ்லஹியின் வாதங்களுக்கு முன் வஹ்ஹபிசத்தால் எழுந்து நிற்கமுடியவில்லை.இதுவே கோவை விவாதத்திலும் தொடர்ந்தது.

எந்தெந்த ஹதீதுகளை எல்லாம் ஆபாசம் என த த ஜ காபிர்கள் மறுத்து வந்தார்களோ அவை அத்துனையையும் தெளிவாக மொழிபெயர்த்து ஆபாசம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் விளக்கமளித்து பெருமானாரின் ஹதீதுகளின் கௌரவத்தை விவாத களத்தில் பாதுகாத்த முஸ்தபா மஸ்லஹி ஹசரத் அவர்களின் வாதங்கள் எதிர்த்தரப்பு பார்வையாளர்களைக்கூட சிந்திக்க வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை!

த த ஜ இயக்கத்தின் போதை என அறியப்படக்கூடிய கஞ்சா இபுராஹீம் செய்த கேலி கிண்டல்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் புன்சிரிப்போடு ஹசரத் அவர்கள் வைத்த மறுப்புக்கள் நிச்சயம் கஞ்சாவை கடுப்பாக்கியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை!

ஹழரத் அவர்களின் வழிகேட்டுக்கெதிரான சத்தியமெனும் வாள் மத் ஹபு விவாதத்திலும் வஹ்ஹபிசத்தை கருவறுக்கும்! வஹ்ஹாபிசத்தின் மரண ஓலத்தை கோவையில் மீண்டும் ஒலிக்கச் செய்யும்!

முஸ்தபா மஸ்லஹி போன்ற இளம் அறிஞர்கள் களத்தில் இருப்பது த த ஜ போன்ற யூத சரக்கு வியாபாரிகளுக்கு ஒரு போதும் நல்ல சகுணமாக இருக்கப்போவதில்லை!

யா அல்லாஹ்! முஸ்தபா மஸ்லஹி ஹழரத் அவர்களின் ஆயுளை நீடித்து அவர்களின் இல்மிலும் பரக்கத் செய்து சத்தியத்துக்காக தொடர்ந்தும் போராடக்கூடிய ஆற்றலையும் வழங்கிடுவாயாக!

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

யார் இந்த தலைமை காஜி !!!அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை 
நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரியும் அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ பெறாதவர்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தின் ஒரு கோடி முஸ்லிம்களும் தலைமை காஜிக்கு ஆதரவாக உள்ளனர். ததஜ வினரின் நிர்பந்தத்துக்கு அரசு இணங்கினால் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லி வைக்கிறோம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!


தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” 
முப்தி டாக்டர் செய்யிது முஹம்மது ஸலாஹுத்தீன்
 ஐயூப் அல் அஸ்ஹரி M.A, M.Phil, Phd. 
.
இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான 
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் 
முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
.
1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர்.
.
4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர்.
.
5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர்.
.
இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
.
காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி தருதலைகள் இவரைப் போன்ற ஒரு நேர்மையான மார்க்க அறிஞர் மீது குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான் என்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
மேலும் இவர்கள் மீது எந்தவொரு தமிழக முஸ்லிம் ஆலிம்கள் யாரும் சுட்டு விரல் நீட்டி அவரை குற்றம் சாட்டியதில்லை. வஹாபிகள் 
மட்டும்தான் குறை கூறி திரிகிறார்கள்.
.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும்தான் காஜி வஹாபிகளுக்கு அல்ல என்றும் தமிழக 
முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 
.
ஆதலால் முஸ்லிம்கள் அனைவரும் வஹாபிகளின் சொல், செயலை பின்பற்றாமல், வஹாபிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
நன்றி: தமிழக முஸ்லிம்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,
அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,
அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,
ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) 
ஹழரத் கிப்லா அவர்களின்,50- ஆம் ஆண்டு நினைவு 
நாள் விழா,நாள்  ( 28-07-2016 ) வியாழன் பின்னேரம்
வெள்ளி இரவு 7-00 மணிக்குதர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு,
  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான
 இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ 
அன்புடன் அழைகின்றோம்.

இப்படிக்கு.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
            M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 

 S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.

விழாக் குழுவினர், பனைக்குளம்.


  
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது 
கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் 
அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.

மெஞ்ஞான கருவூலங்களே மேன்மைமிகு வலிமார்களே! 
நால்வகை அரண்போன்ற வலிமார்களே! 
நாடிவருவோரை காப்பீர்களே!

கவிஞர் நாகூர் காதர் ஒலி 1975 ல் எழுதிய பாடல் 
1977ல் பாடகர் A.ஜெய்னுல் ஆபிதீன் சிங்கப்பூர் 
மஜீது பிரதரஸ் ஆடியோ நிறுவனத்தில் பாடியது.

Wednesday, July 6, 2016

ஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)


முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! 
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! 
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து 
வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல 
அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் 
தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், 
அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! 
உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, 
உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!


1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது.
2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல்.
3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற 
நிய்யத்துடன் குளித்தல்.
4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல்.
5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல்.
6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல்.
7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல்,
8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல்,
9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப் 
பறிமாறிக்கொள்ளுதல்.
10.தர்மங்கள் அதிகமாக செய்தல்.
11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல்.
12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல்.
13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும் 
காரியங்களை எப்பொழுதும் செய்தல்.

14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும் 
வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள். 
ஆதாரம் ; புகாரி.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு