அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Thursday, September 22, 2011

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியில் மாபெரும் முப்பெருவிழா

பிஸ்மிஹி தஆலா
சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரி
9-ஆம் ஆண்டு நிறைவு விழா
நான்காவது ''மௌலவி'' ஆலிம் பட்டமளிப்பு விழா
மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை (24 23-09-2011)
வெள்ளிக்கிழமை,நேரம் மாலை 3-00 மணியளவில்
இடம் மஸ்ஜித் தையிபா புதிய கட்டிட அரங்கம்
சித்தாரிய்யா அரபுக்கல்லூரி புதிய வளாகம்
சித்தார் கோட்டை.
மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
தலைமை; சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர்
அல்ஹாஜ் M.ஷாஹுல் ஹமீது கனி.Bsc அவர்கள்
 
முன்னிலை வகிப்பவர்கள்;
வள்ளல் அல்ஹாஜ் S.தஸ்தகீர் அவர்கள்.
அல்ஹாஜ் S.M.கமருல் ஜமான் A.E.A.A.(Lon)அவர்கள்
ஜனாப் S.ஆரிஃப்கான் அவர்கள்.
அல்ஹாஜ் வள்ளல் முஹம்மது யூசுப் அவர்கள்.
வாழூர் ஜமாஅத் தலைவர்
அல்ஹாஜ் E.காதர் அவர்கள்.
இராமநாதபுர  மாவட்ட காங்கிரஸ் செயலாளர்
ஜனாப் A.R.துல்கீப் அவர்கள்.
புதிய பள்ளிவாசல் திறப்பாளர்;-
மலேசிய தொழிலதிபர் அல்ஹாஜ்
டத்தோ A.அப்துல் அஜீஸ் அவர்கள்.
RESTORAN SUBAIDHA SDN BHD MALAYSIYA
சிறப்புத் துஆ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் முதுகுளத்தூர்
தலைமை இமாம், சித்தாரிய்யா அரபுக்கல்லூரி
கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர், S.அஹ்மது
பஷீர் சேட் ஆலிம் ஃபாஜில்
மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்
 
நன்றியுறை;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ்
அஃப்ழலுல் உலமா,சித்தாரிய்யா அரபுக்
கல்லூரி தாளாலர் மற்றும் பேராசிரியர், M.சுதானா
முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி
ஹஜ்ரத் அவர்கள்.
சிறப்பு மிகு மாபெரும் இப்பெருவிழா
மென் மேலும் சிறக்க சுன்னத் வல்
ஜமாஅத் ஐக்கியப் பேரவை
வாழூர் கிளையினர் மற்றும் சுன்னத் வல்
ஜமாஅத் ஐக்கியப் பேரவை மலேசியக்
கிளையினரும் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்
செய்கிறார்கள் வஸ்ஸலாம் ஆமீன்….
வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் நான்காவது ‘’மௌலவி’’ ஆலிம் பட்டமளிப்பு விழா

பிஸ்மிஹி தஆலா             
நாள்-(23-09-2011) வெள்ளிக்கிழமை
நேரம் மாலை 5-00 மணியளவில்
தலைமை;சித்தார் கோட்டை முஹம்மதியா
பள்ளிகளின் தாளாலர் பேராசிரியர் அல்ஹாஜ்
P.A.S.அப்பாஸ் Bsc. அவர்கள்.
நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்
முஹம்மதியா பள்ளிகளின் செயலாளர்
ஜனாப் A.முஹம்மது இஸ்மாயீல்
ஆசிரியர் அவர்கள்.
வரவேற்புரை
சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்
நிறுவனர், மௌலானா மௌலவி
அல்ஹாஜ்  செய்யிது முஹம்மது
புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள்
துவக்க உரை
சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர்,
கீழக்கரை, மௌலானா மௌலவி அல்ஹாஜ்
ஹுஸைன் அப்துல் கரீம் ஆலிம் மன்பயீ
ஹஜ்ரத் அவர்கள்.
முன்னிலை வகிப்பவர்கள்.
அல்ஹாஜ் P.A.S.வருசை உமர்கான் அவர்கள்.
ஜனாப் S.T.ஷாஜஹான் அவர்கள் (புருனை)
சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் H.அஹ்மது இப்றாஹீம்
(வட்டம்) அவர்கள்.
ஸனது வழங்குதல்
பினாங்கு மஸ்ஜித் கபிதார் , தலைமை
இமாம், FATWA PANEL OF PENANG ISLAMIC
DEPARTMENT, தொக்கோ, மஅல்ஹிஜ்ரா
டத்தோ அப்துல்லாஹ் புஹாரி ஆலிம்
மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
பரிசு வழங்குதல்.
புதுவலசை, அல்ஹாஜ் டத்தோ
ஜவஹர் அலி அவர்கள்.
RESTORANT ALI MAJU SDN BHD.
பட்டமளிப்பு பேருரை
தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர்,
லால்பேட்டை,J.M.A. அரபுக்கல்லூரியின் பேராசிரியர்,
ஷைஹுல் ஹதீஸ்,அபுல் பயான், மௌலானா
மௌலவி அல்ஹாஜ்  A.E.முஹம்மது அப்துர்
ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா
அவர்கள்.
வாழ்த்துரை வழங்குபவர்கள்.
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா
பொதுச்செயலாளர், மௌலானா
மௌலவி M.O.அப்துல் காதிர் ஆலிம் தாவூதி
ஹஜ்ரத் அவர்கள்.
இராமநாதபுர மாவட்ட ஃபத்வா கமிட்டித்
தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஜ்
அல்ஹாஃபிழ் காரீ,அஹ்மது இப்றாஹீம் ஆலிம்
ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத் அவர்கள்.
பினாங்கு ஹிஃப்ழு மதரஸா முதல்வர்,
மௌலவி அல்ஹாஃபிழ் முஆது பின் யஃகூப்
ஹஜ்ரத் அவர்கள்.
வாழூர் முன்னால் இமாம், பினாங்கு நிபோன்
திபால் மதரஸாவின் ஆசிரியர், மௌலானா
மௌலவி அல்ஹாஜ் K.A.ஷாஹுல் ஹமீது
ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள்.
சித்தார் கோட்டை பெரிய பள்ளி தலைமை
இமாம், அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ M.S.
அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
பனைக்குளம்,  பாபா செய்யிது முஹம்மது
ஆலிம் (வலி) மதரஸாவின் நிறுவனர்
அல்ஹாஜ் S.S.ஹஸன் வதூது பில்லாஹ்
ஆலிம் அவர்கள்.
மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்
மௌலவி அஃப்ழலுல் உலமா
A.அப்துல் ரஹ்மான் சித்தாரி
S/o.மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீ
S.M.அஹ்மது இப்றாஹீம் ஃபாஜில் தேவ்பந்
R.S.மங்களம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா அல்ஹாஃபிழ்
S.செய்யது ஃபைஜ் அஹமது சித்தாரி
S/o.மௌலவி அஃப்ழலுல் உலமா
செய்யது அக்பர் ஆலிம் ஜமாலி இராமநாதபுரம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா
H.முஹம்மது அலிஜின்னா சித்தாரி
S/O.ஹிதாயத்துல்லாஹ், பனைக்குளம்.
இராமநாதபுர மாவட்டம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா
A.அப்துல் ரஹ்மான் சித்தாரி
S/O.அப்துல் லத்தீப், அழகன்குளம்,
இராமநாதபுர மாவட்டம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா
M.ஃபவ்சுல் ஹஸன் சித்தாரி
S/O.முஹம்மது முஹைதீன்,பனைக்குளம்.
இராமநாதபுர மாவட்டம்.
மௌலவி அஃப்ழலுல் உலமா
A.நெய்னார் முஹம்மது சித்தாரி
S/O.M.அப்துல் வஹ்ஹாப்,பனைக்குளம்,
ஒத்தகடை, மதுரை மாவட்டம்.
முப்பெரும் விழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்க்கு வருகை தரும்
அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்
ஐக்கியப் பேரவை வாழூர், மற்றும்
மலேசியக்கிளையினர் வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்
வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

நினைவுநாள் அழைப்பிதழ்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
பனைக்குளம் மெய்ஞான மாமேதை,
மெய்நிலை கண்ட தவஞானி,
அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ்,
அல்லாமா, மலிகுல் உலமா,
அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான்,
மஸீஹுல் அனாம்,  ஆரிஃபு பில்லாஹ்,
ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா,
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்
(ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு
நினைவு நாள் விழா.  (22-09-2011)  வியாழன்
பின்னேரம்  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அது சமயம் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத்
தலைவர்
 மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத்
அவர்கள்  மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை
நிகழ்த்த
 இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப்
பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,
பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில்
கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ்
அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய

இருக்கின்றார்கள்.அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு
வருகை தந்து, சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில்
கலந்து கொண்டு,நல்லாசி பெற்று, உங்கள் வாழ்விலும்,

தொழிலிலும்,சிறப்புப் பெற்று மனம் நிறைந்த நோய் நொடி
இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு ;-
மௌலானா மௌலவி அல்ஹாஜ் மர்ஹும்
முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ ஹளரத்
அவர்களின் மகனார் மௌலானா மௌலவி
செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ அவர்கள்.
இச்சிறப்பு வாய்ந்த  மஜ்லிஸில் கலந்து கொண்டு
அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், பெற்றுக்
கொள்ளுமாறு சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்
வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல்
ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும்
துஆச் செய்து, அகமகிழ்ந்து, மனமுவந்து  அன்புடன்
அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்…
வெளியீடு ;-
மன்பயீ ஆலிம்.காம்

Wednesday, September 14, 2011

ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி
ஸ்தாபிதம்; 2001  
சித்தார் கோட்டை-623513   இராமநாதபுரம் (Dt)    
ph; 04567-261799
            
அன்புடையீர்!
                     
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் பேரருளால் இக்கல்லூரியில் ஒவ்வொரு
ஜூன் மாதம் முதல் கீழ் கண்ட மூன்று முறைகளில் மார்க்க
கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இக்கல்லூரியில் அரபி,
ஆங்கிலம், உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில்
அஃப்ழலுல் உலமா படிப்புடன் கம்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு
கால ''மௌலவி ஆலிம்'' (இஸ்லாமிய்ய மார்க்க) பட்டப்படிப்பு பயில்வது.
கல்லூரி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சித்தார் கோட்டை முஹம்மதியா
மேல் நிலைப் பள்ளியில் + 2 வரை பயில்வது, ஐவேளை தொழுகை,
நல்லொழுக்கப் பயிற்ச்சி, கம்யூட்டர் கலை, அரபி, ஆங்கிலம், உருது
ஆகிய மொழிகளில் சரளமாக பேச, எழுத அரசு தேர்வுகளில் அதிக
மதிப்பெண்கள் பெற திறமை மிக்க ஆசிரியர்களைக்கொண்டு பயிற்ச்சியளித்தல்தஜ்வீது கலையுடன் கூடிய மூன்று ஆண்டு கால ஹிஃப்ழுல் குர்ஆன் (குர்ஆன் மனனப் பிரிவில்) பயில்வது மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து விரும்பிப் பயில முன்வரும் மாணவர்கள் மே மாதம் 15- ம் தேதிக்குள் நேரிலோ 
அல்லது தபால் மூலமோ தொடர்பு கொள்ளவும்.

''எங்கள் கல்லூரியில் அரபியில்'' ''பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்''

1 ஹிஃப்ளுல் குர்ஆன் –  குர்ஆன் மனனம் 2 தஃப்ஸீர்- திருக்குர்ஆன்
விரிவுரை 3 ஹதீஸ் - நபிகளாரின் பொன்மொழிகள். 4 ஃபிக்ஹூ
-இஸ்லாமிய சட்டக் கலை 5 தாரீஹ் வரலாறு 6 அகீதா - அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை 7 ஸர்ஃபு - சொல்லிலக்கணம்
8 நஹ்வு- சொற்புணரிலக்கணம் 9 அதப் இலக்கியம் 10 ஆதாப்,அக்லாக்    
-ஒழுக்கவியல் 11 உசூல் - இஸ்லாமிய சட்ட மூலதாரம்
12 இன்ஷா கட்டுரை 13 பலாகா - அணி இலக்கணம்
14 அரூஸா- யாப்பிலக்கணம் 15 ஜஃரபிய்யா - புவியியல்
16 ஃபலக் வானவியல் 17 ஹிஸாப் கணிதம் 18 ஹன்தஸா         
-வடிவக்கணிதம் 19 ஃபராயில்- சொத்துப் பிரிவினைச் சட்டம்
20 மன்திக்- தர்க்கக் கலை 21 லுகத்-மொழியியல் மற்றும் ஆங்கிலம்
உருது மொழிகளும் பயிற்று விக்கப்படுகிறதுவஸ்ஸலாம்

தொடர்புக்கு ;

மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.சுதானா
முஹம்மது ஆலிம், அரூஸி, ஃபாஜில் ஜமாலி.
மேனேஜர், மற்றும் பேராசிரியர், சித்தாரிய்யா
அரபுக் கல்லூரி, CELL. 9443655135.

என்றும் தங்கள் அன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
I.செய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்,
ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்.
நிறுவனர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி,
சித்தார் கோட்டை.

வெளியீடு-; மன்பயீ .ஆலிம்.காம்

Tuesday, September 13, 2011

அரபுக்கல்லூரிகள் துவங்கியது!!!

பிஸ்மிஹி தஆலா
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்
அரபுக்கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம்
ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது
முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை
என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால்
முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது
குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்
அதாவது காலை மதரஸாக்களுக்குகூட (மக்தப்) அனுப்பாமல்
உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம்
எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு
முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று
இஸ்லாமிய சமுதாயத்தில் குழப்பங்கள் அனாச்சாரங்கள்,
தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக்
கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய
பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.
இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு
ஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும்,
பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய
சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளை
விட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம்
சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக்
கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது
சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.
பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக்கல்லூரிகளில் உலகக்
கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அல்லது ஏழு ஆண்டுகள்,
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,
மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ்  
பெருமானாரின்  ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் 
அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது
இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு
உலகக்  கல்வியுடன்  மார்க்க  கல்வியை  வழங்கிய
உயர்ந்த பெற்றோர்களாக  வல்ல அல்லாஹ் ஆக்குவானாக
ஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக்கல்லூரிகள்; ஷவ்வால்
பிறை 15-ல்  துவங்க  இருக்கிறது  பயணடைந்து
கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு
நல் உதவி  செய்வானகவும்  ஆமீன்.. வஸ்ஸலாம்.
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத்ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

Saturday, September 10, 2011

-; பயனுள்ள தொலைக்காட்சி ;-


பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன் தொலைக்காட்சி
மிகவும்  சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சேவையை    வழங்கிக்
கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் சமீப காலமாக
தமிழகத்தில்  வழி கெட்ட தீய சக்திகள் தனது வழிகெட்ட
தவறான தொலைக்காட்சி   நிகழ்ச்சிகளை   வழங்கி   
இஸ்லாமிய சமுதாய    மக்களை வழிகேட்டின் பக்கம்  
அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வழிகேடானா
பிரச்சாரங்களுக்கு  மத்தியில்  மக்களுக்கும்,  வழிகேட்டில்  
மூழ்கி கெடக்கும் வாலிபர்களுக்கும் உண்மையை தெளிபடுத்து
வதற்காக, மூன் தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே
செய்து கொண்டிருக்கிறது. இத்தொலைக்காட்சியில் அதிகாலை 
முதல் நள்ளிரவு  வரை அதிகமான சிறப்பு  வாய்ந்த  நிகழ்ச்சிகள்
அரபுநாடுகள்இலங்கைமற்றும்  இந்தியா   முழுவதும்
வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் சிறந்த காரீகளால் கிராஅத்
ஓதப்பட்டு துவக்கம் செய்யப்படுகிறது. 1 வது இன்று ஒரு நபி
மொழி என்ற நிகழ்வை மௌலானா மௌலவி   ஹஜ்ரத்
ஸாலிஹ் சேட் ஆலிம் பாகவி அவர்களும், 2 வது சிந்திப்போமா
என்ற நிகழ்வை  மௌலானா  மௌலவி  ஹஜ்ரத்  மன்சூர் 
ஆலிம் காஷிஃபி அவர்களும், 3 வது மழலையர் இஸ்லாம்
என்ற சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியும், 4 வது  குர்ஆன்
ஷரீஃப் ஓதத் தெறியாதவர்களுக்கு  முக்கிய சொத்தாக எளிய
முறையில் திருக்குர்ஆன் கற்ப்போம் என்ற நிகழ்வை ,
மௌலானா மௌலவி ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது ஆலிம்
மன்பயீ அவர்களும்  5 வது கி.பி 570- வது முதல் இஸ்லாமிய
வரலாறு ஆய்வு என்ற நிகழ்வை வரலாற்று ஆய்வாளரும்,
காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி
முதல்வரும்,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம்
மஹ்ழரி அவர்களும்,  6 வது இஸ்லாமிய கீதம் தேரிழந்தூர்
ஹாஜி தாஜூத்தீன் ஃபைஜி அவர்களும் 7 வது  உலகம் உங்ள்
கையில் என்ற நிகழ்வை பேராசிரியர் டாக்டர் சே,மு,,,
முஹம்மது அலி, அவர்களும், 8 வது இணையில்லா
இறைமறை என்ற திருக்குர்ஆன் விளக்கவுரையை காயல்
பட்டிணம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்  காரீ
அல்ஹாஜ் சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களும்,
9 வது  கிராஅத்துல் குர்ஆன் போட்டி என்ற நிகழ்வை
மௌலானா மௌலவி  அல்ஹாஃபிழ் காரீ ஆஸிக் அஹ்மது
ஆலிம் தாவூதி மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ
முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி அவர்களும், 10 வது
ஷரீஅத் சட்டம் என்ற நிகழ்வை பெரம்பூர் மஸ்ஜிதுர் ரஹ்மான்
பெரிய பள்ளி தலைமை இமாமும், சென்னை பல்கலை கழக 
அரபி, உருது, பாரசீகம் விரிவுரையாளர் டாக்டர் மௌலானா
மௌலவி அல்ஹாஜ் அன்வர் பாதுஷா ஆலிம் உலவி அவர்களும்
11 வது  தீன் ஒலி என்ற சிறப்பு நிகழ்வை சுன்னத் வல் ஜமாஅத்
ஐக்கியப்  பேரவை தலைவரும்,ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்
கல்லூரி முதல்வர், அபுத்தலாயில், மௌலானா மௌலவி
அல்ஹாஜ் ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி அவர்களும்
12 வது இறைவனிடம் கையேந்துங்கள் என்ற சிறப்பு பிரார்த்தனை
நிகழ்வை மௌலானா மௌலவி ராஃபிஃ ஆலிம் மஹ்ழரி
மற்றும் ரஹீம் ஃபைஜி அவர்களும், 13 வது சின்ன பாப்பா
பெரிய வாப்பா என்ற அழகிய நிகழ்வை அல்ஹாஃபிழ்
ஸதக்கத்துல்லாஹ் அவர்களும், 14 வது வளைகுடா செய்திகளும்
இன்னும் பல அறிய நிகழ்ச்சிகளையும் தொடராக வழங்கிக்
கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய  சகோதர சகோதரிகளே
மார்க்கத்தை முறையாக அறிய வேண்டுமென்றால் மற்ற
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறவே பார்க்காமல், மூன்
தொலைக்காட்சியை பார்த்து பரிபூரண விளக்கம் பெறுங்கள்.
அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானகவும்.
மேலும் இச்சிறப்பு மிகு தொலைக்காட்சியின் உரிமையாளர்,
மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், இன்னும் மூன் தொலைக்காட்சி
உலமாக்கள் குழுவினருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்
நோய் நொடி இல்லா நீண்ட ஆயுளை வழங்கவும் சுன்னத்
வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினர்
அகமுவந்து வாழ்த்தி இருகரம் ஏந்தி துஆச்செய்கிறார்கள்.
வஸ்ஸலாம் ஆமீன்….
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு