அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Wednesday, September 14, 2011

ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி
ஸ்தாபிதம்; 2001  
சித்தார் கோட்டை-623513   இராமநாதபுரம் (Dt)    
ph; 04567-261799
            
அன்புடையீர்!
                     
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் பேரருளால் இக்கல்லூரியில் ஒவ்வொரு
ஜூன் மாதம் முதல் கீழ் கண்ட மூன்று முறைகளில் மார்க்க
கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இக்கல்லூரியில் அரபி,
ஆங்கிலம், உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில்
அஃப்ழலுல் உலமா படிப்புடன் கம்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு
கால ''மௌலவி ஆலிம்'' (இஸ்லாமிய்ய மார்க்க) பட்டப்படிப்பு பயில்வது.
கல்லூரி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சித்தார் கோட்டை முஹம்மதியா
மேல் நிலைப் பள்ளியில் + 2 வரை பயில்வது, ஐவேளை தொழுகை,
நல்லொழுக்கப் பயிற்ச்சி, கம்யூட்டர் கலை, அரபி, ஆங்கிலம், உருது
ஆகிய மொழிகளில் சரளமாக பேச, எழுத அரசு தேர்வுகளில் அதிக
மதிப்பெண்கள் பெற திறமை மிக்க ஆசிரியர்களைக்கொண்டு பயிற்ச்சியளித்தல்தஜ்வீது கலையுடன் கூடிய மூன்று ஆண்டு கால ஹிஃப்ழுல் குர்ஆன் (குர்ஆன் மனனப் பிரிவில்) பயில்வது மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து விரும்பிப் பயில முன்வரும் மாணவர்கள் மே மாதம் 15- ம் தேதிக்குள் நேரிலோ 
அல்லது தபால் மூலமோ தொடர்பு கொள்ளவும்.

''எங்கள் கல்லூரியில் அரபியில்'' ''பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்''

1 ஹிஃப்ளுல் குர்ஆன் –  குர்ஆன் மனனம் 2 தஃப்ஸீர்- திருக்குர்ஆன்
விரிவுரை 3 ஹதீஸ் - நபிகளாரின் பொன்மொழிகள். 4 ஃபிக்ஹூ
-இஸ்லாமிய சட்டக் கலை 5 தாரீஹ் வரலாறு 6 அகீதா - அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை 7 ஸர்ஃபு - சொல்லிலக்கணம்
8 நஹ்வு- சொற்புணரிலக்கணம் 9 அதப் இலக்கியம் 10 ஆதாப்,அக்லாக்    
-ஒழுக்கவியல் 11 உசூல் - இஸ்லாமிய சட்ட மூலதாரம்
12 இன்ஷா கட்டுரை 13 பலாகா - அணி இலக்கணம்
14 அரூஸா- யாப்பிலக்கணம் 15 ஜஃரபிய்யா - புவியியல்
16 ஃபலக் வானவியல் 17 ஹிஸாப் கணிதம் 18 ஹன்தஸா         
-வடிவக்கணிதம் 19 ஃபராயில்- சொத்துப் பிரிவினைச் சட்டம்
20 மன்திக்- தர்க்கக் கலை 21 லுகத்-மொழியியல் மற்றும் ஆங்கிலம்
உருது மொழிகளும் பயிற்று விக்கப்படுகிறதுவஸ்ஸலாம்

தொடர்புக்கு ;

மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.சுதானா
முஹம்மது ஆலிம், அரூஸி, ஃபாஜில் ஜமாலி.
மேனேஜர், மற்றும் பேராசிரியர், சித்தாரிய்யா
அரபுக் கல்லூரி, CELL. 9443655135.

என்றும் தங்கள் அன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
I.செய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்,
ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்.
நிறுவனர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி,
சித்தார் கோட்டை.

வெளியீடு-; மன்பயீ .ஆலிம்.காம்

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு