அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Wednesday, June 23, 2010


தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர் ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் 

                      அவர்களின்  இல்லத் திருமண அழைப்பிதழ்.

                         பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அன்புடையீர்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும்.கண்மணி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்.நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 28 ல் (11-07-2010)  ஞாயிற்று கிழமை பகல் 11-00 மணியளவில்.
A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின்அன்பு மகள்
. A.R மர்யமுல் ஆசியா மணமகளுக்கும்
திருநெல்வேலிபேட்டை S.M ஆஷிக் இலாஹி இராவுத்தர் அவர்களின்
 அன்பு மகன் A.  தமீமுல் அன்சாரி DPT., B.B.A மணமகனுக்கும்


இன்ஷா அல்லாஹ் திருநெல்வேலி ஜங்ஷன் கொக்கரகுளம் ரோஸ்மஹாலில் நடைபெறும் திருமண நிகழ்விலும், அதை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசரிப்பிலும், தாங்கள் வருகை தந்து சிறப்பித்து, மணமக்களின் தீன் நெறி வாழ்விற்கு துஆச் செய்யும்மாறு, அன்புடன் அழைக்கின்றோம்.
                                                      தங்கள் அன்புள்ள. 

                  மௌலவி A E M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் மிஸ்பாஹி
                  28 தோப்புத் தெரு, லால்பேட்டை,
                 கடலூர் மாவட்டம்,
                செல் ;9843689800
                போன் ;04144-268708
                    நிகழ்ச்சி நிரல்.

              தலைமை; தாஜுல் மில்லத் மௌலான,அல்ஹாஜ்.
                   T J M ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள்.
                        (தலைவர்,நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை)

                      குத்பா & துஆ; மௌலான,அல்ஹாஜ்,அல்ஹாபிழ்.
            A.   நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.
                   (முதல்வர், J M A அரபுக் கல்லூரி, லால்பேட்டை)  
    
                    வாழ்த்துரை ; மௌலான,அல்ஹாஜ்,அல்ஹாபிழ்,
                                   M O அப்துல் காதிர் ஹள்ரத் அவர்கள்.
                     (பொதுச் செயலாளர். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)

                      செங்கோட்டை சிங்கம் மௌலானா. அல்ஹாஜ்,
ஆவூர் M அப்துஷ் ஷக்கூர் ஹள்ரத் அவர்கள்.
                   (துணைத்தலைவர்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)
                                
நன்றியுரை ; மௌலான,அல்ஹாஜ், கவிஞர்.
தேங்கை M ஷர்ஃபுத்தீன் ஹள்ரத் அவர்கள்.
                  (துணை பொதுச் செயலாளர்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)           

          மணமக்கள் எல்லா நலமும், வளமும், பெற்று நோய் நொடியில்லாமல் பல்லாண்டு காலம் வாழ துஆச் செய்கிறோம்.
இவண்.

         சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்.புனிதம் நிறைந்த மிஃராஜ் இரவு !!!!

 புனிதம் நிறைந்த மிஃராஜ் இரவு

ஜூலை மாதம் 10 ந்தேதி 

மிஃராஜ் இரவு கொண்டாட அறிவிப்பு

ராமநாதபுரம் ஜூன் 22.இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார், கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா மத்ரஸாவின் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறி இருப்பதாவது, கடந்த 13 ந்தேதி ஹிஜ்ரி 1431 ஜமாத்துல் ஆகிர் பிறை 29 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை ரஜப் பிறை தென்பட்டதால், ஆங்கில மாதம் 15 ந்தேதி செவ்வாய்க் கிழமை ரஜப் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப் பட்டுள்ளது. 

எனவே அடுத்த மாதம் ஜூலை 10 ந்தேதி
சனிக்கிழமை பின்னேரம், ஞாயிறு இரவு மிஃராஜ் இரவாக கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் வர இருக்கின்ற புனித மிகு மிஃராஜ் இரவில்விழித்து, நோன்பு நோற்று  அனைவர்களும் நல் அமல்கள் செய்து ,அல்லாஹ்வின் அன்பையும் திருப் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ளும்மாறு, சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளதினர் துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்.

நன்றி -தினத் தந்தி.

Sunday, June 13, 2010

லால்பேட்டையில் புனிதமிகு புஹாரி ஷரீஃப் நிறைவு விழா


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

லால்பேட்டை மாநகரில் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிப் பேழையான புஹாரி ஷரீஃப் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜமாத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப்பிறகும், மஃக்ரிப்தொழுகைக்குப் பிறகும், லால்பேட்டை ஜாமிஆ மத்ரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வர் தலைமையில், ஜாமிஆவின் கண்ணிய மிகு பேராசிரியர்களாலும்,ஜாமிஆவின் மாணவர்களாலும், மற்றும் லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமாவைச் சார்ந்தஉலமாப் பெருமக்களாலும் ஓதப்பட்டு, இஷாத்தொழுகைக்குப்பிறகு அன்று ஓதப்பட்ட ஹதீஸ்களின் சாராம்சத்தை உஸ்தாதுமார்களாலும்,மாணவர்களாலும்,உலமாப்பெருமக்களாலும்,
பயான் செய்யப்படும். 

இது ஜமாத்துல் ஆகிர் மாதம் முழுவதும் புஹாரி ஷரீஃபின் இரண்டு பாகங்களும் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டு, நிறைவு விழா ரஜப் பிறை முதல் நாளன்று புஹாரி ஷரீஃபின் கடைசி ஹதீஸை ஓதி முடித்து, பிறகு மீண்டும் ஆரம்ப ஹதீஸை ஓதி துவக்கி வைப்பார்கள். நிறைவு விழாவில் ஜாமிஆவின் முதல்வர்,மற்றும் கண்ணிய மிகு உஸ்தாது மார்களாலும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களாலும்,பயான் செய்யப்பட்டு இறுதியாக துஆ மஜ்லிஸ் நடைபெறும்.


புனித மிகு புகாரி ஷரீஃப்
34- ஆம் ஆண்டு நிறைவு விழா
& துஆ மஜ்லிஸ்

இடம்; லால்கான் ஜாமிஆ மஸ்ஜித், லால்பேட்டை.

காலம்; இன்ஷா அல்லாஹ் (14-06-2010) ரஜப் பிறை 1 திங்கள் மாலை செவ்வாய் இரவு 9.00 மணி

தலைமை, துஆ; மௌலானா,முஃப்தி, ஷைகுல் ஜாமிஆ
A.   நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.

முன்னிலை; மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ்
A.E,M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்கள்
(தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர்)

மௌலானா மௌலவி நாயிப் முஃப்தி
S.A அப்துர் ரப் ஹள்ரத் அவர்கள்

நிறைவுரை;
மௌலானா மௌலவி
K.A நிஜாமுத்தீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள்
(தலைமை இமாம் புரசைவாக்கம் ஜாமிஆ மஸ்ஜித் சென்னை)
தலைப்பு; சஹாபாக்கள் இல்லையென்றால்


மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகளும், உலமாப்பெருமக்களும்,உரையாற்றுவார்கள்.இறைப்பொருத்தத்தை நாடி புகாரி மஜ்லிஸுக்கு வாரி வழங்கிய நல்ல உள்ளங்களும், மற்றும் ஏனைய முஸ்லிம்களும், இஸ்லாமிய பண்பாட்டில் வாழ்ந்து நிம்மதியான வாழ்வு பெறவும், மறுமையில் ஜென்னத்துல் பிர்தவ்ஸின் பாக்கியம் பெறவும், மஜ்லிஸில் துஆ செய்யப்படும்.
இந்த சிறப்புமிகு பேரூரை நிகழ்விலும்,நிறைவாக நடைபெறும் திக்ரு,துஆ மஜ்லிஸிலும்,பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙணம்
நகர ஜமாஅத்துல் உலமா லால்பேட்டை.

 இன்ஷா அல்லாஹ் இவ்விழாவில் அனைவர்களும் 
கலந்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் அடைந்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறோம்
இவண்
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு