அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைவருக்கும் பெருமானாரின் 1492 வது மீலாதுப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்

Sunday, June 13, 2010

லால்பேட்டையில் புனிதமிகு புஹாரி ஷரீஃப் நிறைவு விழா


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

லால்பேட்டை மாநகரில் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிப் பேழையான புஹாரி ஷரீஃப் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜமாத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப்பிறகும், மஃக்ரிப்தொழுகைக்குப் பிறகும், லால்பேட்டை ஜாமிஆ மத்ரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வர் தலைமையில், ஜாமிஆவின் கண்ணிய மிகு பேராசிரியர்களாலும்,ஜாமிஆவின் மாணவர்களாலும், மற்றும் லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமாவைச் சார்ந்தஉலமாப் பெருமக்களாலும் ஓதப்பட்டு, இஷாத்தொழுகைக்குப்பிறகு அன்று ஓதப்பட்ட ஹதீஸ்களின் சாராம்சத்தை உஸ்தாதுமார்களாலும்,மாணவர்களாலும்,உலமாப்பெருமக்களாலும்,
பயான் செய்யப்படும். 

இது ஜமாத்துல் ஆகிர் மாதம் முழுவதும் புஹாரி ஷரீஃபின் இரண்டு பாகங்களும் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டு, நிறைவு விழா ரஜப் பிறை முதல் நாளன்று புஹாரி ஷரீஃபின் கடைசி ஹதீஸை ஓதி முடித்து, பிறகு மீண்டும் ஆரம்ப ஹதீஸை ஓதி துவக்கி வைப்பார்கள். நிறைவு விழாவில் ஜாமிஆவின் முதல்வர்,மற்றும் கண்ணிய மிகு உஸ்தாது மார்களாலும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களாலும்,பயான் செய்யப்பட்டு இறுதியாக துஆ மஜ்லிஸ் நடைபெறும்.


புனித மிகு புகாரி ஷரீஃப்
34- ஆம் ஆண்டு நிறைவு விழா
& துஆ மஜ்லிஸ்

இடம்; லால்கான் ஜாமிஆ மஸ்ஜித், லால்பேட்டை.

காலம்; இன்ஷா அல்லாஹ் (14-06-2010) ரஜப் பிறை 1 திங்கள் மாலை செவ்வாய் இரவு 9.00 மணி

தலைமை, துஆ; மௌலானா,முஃப்தி, ஷைகுல் ஜாமிஆ
A.   நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.

முன்னிலை; மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ்
A.E,M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்கள்
(தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர்)

மௌலானா மௌலவி நாயிப் முஃப்தி
S.A அப்துர் ரப் ஹள்ரத் அவர்கள்

நிறைவுரை;
மௌலானா மௌலவி
K.A நிஜாமுத்தீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள்
(தலைமை இமாம் புரசைவாக்கம் ஜாமிஆ மஸ்ஜித் சென்னை)
தலைப்பு; சஹாபாக்கள் இல்லையென்றால்


மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகளும், உலமாப்பெருமக்களும்,உரையாற்றுவார்கள்.இறைப்பொருத்தத்தை நாடி புகாரி மஜ்லிஸுக்கு வாரி வழங்கிய நல்ல உள்ளங்களும், மற்றும் ஏனைய முஸ்லிம்களும், இஸ்லாமிய பண்பாட்டில் வாழ்ந்து நிம்மதியான வாழ்வு பெறவும், மறுமையில் ஜென்னத்துல் பிர்தவ்ஸின் பாக்கியம் பெறவும், மஜ்லிஸில் துஆ செய்யப்படும்.
இந்த சிறப்புமிகு பேரூரை நிகழ்விலும்,நிறைவாக நடைபெறும் திக்ரு,துஆ மஜ்லிஸிலும்,பங்கு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙணம்
நகர ஜமாஅத்துல் உலமா லால்பேட்டை.

 இன்ஷா அல்லாஹ் இவ்விழாவில் அனைவர்களும் 
கலந்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் அடைந்து கொள்ளும்மாறு கேட்டுக்கொள்கிறோம்
இவண்
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு