அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Tuesday, August 31, 2010

புனிதமிக்க கத்ர் இரவு-LAYLAT UL-QADR

புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-01


புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-02


புனிதமிக்க கத்ர் இரவு.பாகம்-03

Sunday, August 29, 2010

ஜகாத்-Zakah

ஜகாத்.பாகம்-01


ஜகாத்.பாகம்-02

Wednesday, August 18, 2010

புனிதம் நிறைந்த ரமலான் மாதம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

           அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 லைலத்துல் கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும். அல்ஹம்து லில்லாஹ் குறைந்த பட்சம் மேல் கூறப்பட்டுள்ள அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, நன்மைகளை, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக்கூறியும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் வாழ்த்தி, அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள்.  
   குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு www.jamalinet.com மற்றும்
www.tmislam.com ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண விளக்கம் பெறவும்
வஸ்ஸலாம்..


பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது

   
பனைக்குளம் ஆக-13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது, அரபு மாதங்களில் 10-வது மாதமான ரமலான் மாதத்தின்  முதல் பிறை நேற்று முன்தினம் இரவு  6-50 மணிக்கு தெறிந்தது.இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார்கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A. ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள். இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட
8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது. இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம்திருப்பாலைக்குடி, சித்தார்கோட்டை, வாழூர்அத்தியூத்துபுதுவலசைஆற்றங்கரை
பெருங்குளம்,  வழுதூர், உச்சிப்புளி, புதுமடம், வேதாளை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து, குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு, அதிகாலை 4-30 மணிக்கு சஹர் (நோன்பு உணவு) செய்து முதல் நோன்பை துவக்கினர்.
நன்றி- தினகரன்

Saturday, August 7, 2010

இனிய ரமலானே வருக!
நோன்பின் சட்டங்கள். கேள்வி? பதில்!
இஸ்லாமிய கேள்வி? பதில்!.கஹடோவிட – இலங்கை

 

இனிய ரமலானே வருக!பாகம் – 1இனிய ரமலானே வருக!பாகம் – 2

இனிய ரமலானே வருக!பாகம் – 3


இனிய ரமலானே வருக!பாகம் – 4

Wednesday, August 4, 2010

சிறப்பு பயான் மஜ்லிஸ் அழைப்பிதழ்

    பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவரும், சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்கல்லூரி முதல்வர், மௌலானா மௌலவி
அஃப்ழலுல் உலமா, அபுத்தலாயில், அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A. ஹள்ரத் அவர்களின் பயான் நிகழ்ச்சி,

மலேசியத் திருநாட்டின் தலைநகர், கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே! உஸ்தாது அல்ஹாஃபிழ் மௌலானா மௌலவி M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு  இன்ஷா அல்லாஹ்
(இரவு 7-30) மணியளவில் புனித ரமளானை வரவேற்று  இஸ்லாமிய்யச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.எனவே இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும், இச்சிறப்பான மஜ்லிஸில் கலந்து, அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும், பெற்றுக் கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம்,

     
    03-08-2010         அல்மதரஸா மன்பவுன் நூர், பண்டார் புக்கிட் பூச்சோங்.
    (செவ்வாய்)           இரவு  7-30  (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
     04-08-2010      அல்மதரஸதுல் அஜீஸிய்யா, பூச்சோங் இண்டா.
     (புதன்)           இரவு  7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
    (05-08-2010)          மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்
கம்போங் தாஸிக்      பெர்மாய்.
    (வியாழன்)         இரவு 8-30 (இஷா தொழுகைக்குப் பிறகு)
    (06-08-2010)          அல்மதரஸதுல் ஜமாலிய்யா, சிலாயாங் பாரு
    (வெள்ளி)          இரவு 7-30 (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
    (07-08-2010)          அல்மதரஸதுல் ஃபரீதிய்யா, தாமன் ஸ்ரீராம்பாய்.
     (சனி)          இரவு  7-30   (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
    (08-08-2010)          மதரஸா கம்பங்பண்டான், கம்பங்பண்டான்
    (ஞாயிறு)         இரவு 7-30  (மஃரிப் தொழுகைக்குப் பிறகு)
    (09-08-2010)             மதரஸா கௌஸிய்யாபிரிக்ஃபீல் சூரா. பிரிக்ஃபீல்.
     (திங்கள்)         இரவு  8-30   இஷா (தொழுகைக்குப் பிறகு)

மலேசியத் திரு நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் மதிப்பிற்குரிய ஹள்ரத் அவர்களை வரவேற்றும், வல்ல
அல்லாஹ் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை வழங்கவும், அவர்களின் தீண் பணி மென் மேலும் சிறக்கவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும், வரவேற்று, துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..
ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு