அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Friday, February 13, 2015

சித்தார்கோட்டையில் மாபெரும் மீலாதுப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!!

12-02-2015 நேற்று சித்தார்கோட்டையில் மாபெரும் மீலாதுப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.


அது சமயம் மேலப்பாளையம்,உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் 
முதல்வர், மௌலானா மௌலவி அல்லாமா S.S.ஹைதர் அலி 
மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றிய போது


அது சமயம் மேலப்பாளையம்,உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின்
 முதல்வர், மௌலானா மௌலவி அல்லாமா S.S.ஹைதர் அலி 
மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றிய போது


அது சமயம் கோவை,கரும்புக் கடை,சுன்னத் ஜமாஅத், ஜாமிஆ 
மஸ்ஜிதின் தலைமை இமாம், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,
அஃப்ஜலுல் உலமா.அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி M.A..M.Phil 
ஹஜ்ரத் அவர்கள். சிறப்புரையாற்றிய போது...


இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர் வஸ்ஸலாம்...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Friday, February 6, 2015

வாழூர் முன்னால் இமாம் தென்காசி,மௌலானா கே.எ.ஷாஹுல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத்தின் தந்தை, மௌலானா மௌலவி அஹ்மது ஷாஹ் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாழூர் முன்னால் இமாம் தென்காசி,மௌலானா  மௌலவி 
கே.எ.ஷாஹுல் ஹமீது பாகவி ஹஜ்ரத்தின் தந்தையும்,பொதக்குடி,
அந்நூருல் முஹம்மதிய்யி அரபுக் கல்லூரி, மற்றும் கடைய நல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபுக் கல்லூரி ஆகியவைகளின் முன்னால் பேராசிரியருமான,மௌலானா மௌலவி அஹ்மது ஷாஹ் 
பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் தென்காசியில் (05.02.2015) 
வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில்,தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  (05.02.2015) அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு  தென்காசியில் நடைபெற்றது .

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சித்தார் கோட்டையில் உலகை உய்விக்க வந்த உத்தம திருநபியின் உதய தின விழா !!!!சிறப்பு மிகு  மாபெரும் பெருவிழா, மென்மேலும் 
சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் 
ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி 
துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா நடைபெற்றது !!!!வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் 
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு 
மௌலிது ஷரீஃப்,வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி 
வாசலில் ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு 
தினங்கள் சிறப்பாக ஓதப்பட்டு,(01-02-2015) ஞாயிற்றுக் கிழமை 
காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் 
ஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் 
ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி 
ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில், 
மதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் 
நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.


இறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு