Posts

Showing posts from July, 2014

ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், தஞ்சை மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள்,  இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65. அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் ஆவூரில் நடைபெறும். சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது. செங்கோட்டை சிங்கம் என்று உலக தமிழ் முஸ்லிம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல்

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் 28-07-2014 நோன்புப் பெருநாள் குத்பா பேருரை.

Image
28-07-2014 நோன்புப் பெருநாள் குத்பா பேருரை.    குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் 25-07-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

Image
25-07-2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- பிரியா விடைபெறும் புனித ரமலான் குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா.

ஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)

Image
முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே!  சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து  வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல  அல்லாஹ்  இந்த ரமழான்  மாதத்திலே நமக்கு வழங்கினான். பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து  தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

மேலப்பாளையம் மாநகரில் உஸ்மானிகள் பேரவை நடத்தும் சமூக தீமைகள் மாநாடு

Image
இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.

Image
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. பத்ர் தளம் சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு.

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்!!!

Image
அருள்   நிறை   லைலத்துல்   கத்ர்   இரவில் அனைவரும்   ஆற்ற   வேண்டிய   அமல்கள் லைலத்துல்   கத்ர்   இரவு   வணக்கம்   பற்றி!!! அண்ணலார்  ( ஸல் )  அவர்கள்   யார்   நன்னம்பிக்கையுடனும் , தூய   நிய்யத்துடனும் , ' ' லைலத்துல்   கத்ர் ''  எனும்   இரவில் விழித்திருந்து   இறை   வணக்கத்திலே   கழிக்கிறாரோ  அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத்   4;  அல்ஹம்து  1  முறை ,  அல்ஹாக்கு முத்தகாதுரு  1  முறை ,  குல்ஹுவல்லாஹு  3  முறை ஓதி   தொழ   வேண்டும் இதன்   பலன் ;  மரண   வேதனை   இலேசாக்கப்படும் , மண்ணரை   வேதனை   குறைக்கப்படும் . (2)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 1  முறை   குல்ஹுவல்லாஹு  27  முறை   ஓதி   தொழ   வேண்டும்   இதன்   பலன்   அன்று   பிறந்த   பாலகனைப்   போன்று   பாவ   மற்றவராகிறார் (3)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 3  முறை   குல்ஹுவல்லாஹு  50  முறை   ஓதி   தொழ   வேண்டும் . இத்   தொழுகை   முடிந்தவுடன்   ஸஜ்தாவில்  3- ம்   கலிமா   ஒரு   முறை   ஓதிய  

லைலத்துல் கத்ர் இரவு அமல்கள்

Image
அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும்  S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்  ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை ) வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

பத்ர் களத்தில் சஹாபாக்களின் சிறப்பு

வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான்  அரபுக் கல்லூரி முதல்வருமான,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களளின் சிறப்புப் பேருரைகள்.

பத்ர் மௌலித் தமிழ் மொழிப்பெயர்ப்பு

புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு

லால்பேட்டை,ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர். மௌலானா மௌலவி அல்லாமா, ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான், ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லாவின்,புனித  பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு பற்றிய சிறப்புப் பேருரை.

பத்ரு சஹபாக்களின் நினைவுப் பெருவிழா

Image
நாள்: 15-07-2014 செவ்வாய்க்கிழமை பின்னேரம் 10:30 மணியளவில் தரவீஹுக்கு பின் தொடங்கி சஹர் வரை இடம்: நவாப் சஆததுல்லாஹ்கான் சாஹிப் ஜாமிஆ மஸ்ஜித், சென்னை. இச்சிறப்பு மிகு பெருவிழா மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம்,கே.எ.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்களின் இஃதிகாப் பற்றிய பேருரை

Image

ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள்

Image
  நேன்பில் புடம் போடப்படும் ஈமான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......! உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில்,  உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  நோன்பு ஓரு அதிசயம் பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....! சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….! ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது. உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது. “இறைநம்பிக்கையாளர்களே......!  உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1 நோன்பு உடலையும் உள்ள

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு