அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Monday, March 31, 2014

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

கடலோரம் வாழும் காதிர் மீரான்உம்வாசல்தேடி  வந்தோம்சாஹே மீராஉம்மை ஒருபோதும் நான் மற்வேன்நமணை விரட்ட                                            
                                        கருனை கடலாம் காதிர் வலியின்

Friday, March 28, 2014

Don't upset துன்பம் கண்டு துவண்டு விடாதீர்!


மரணமும் இரணமும் தேடி வரும்
எங்கிருந்தாலும் இறைவனின் விதி அடைந்தே தீரும்
துன்பம் கண்டு துவண்டு விடவேண்டாம்
ஜும்ஆ உரை (28-03-2014)

Thursday, March 27, 2014

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் புனித வரலாறு


நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS

நமது நாயகம்  நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் 

NAGOR SESSIONS - THE SAINT


நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்

THE NAGOR SAINTS

Wednesday, March 26, 2014

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 1 -04-2014  செவ்வாய்க்கிழமை மாலை,புதன் இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1435 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது 
என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மௌலிது ஷரீஃப்  -10-4-2014 (ஜமாதுல் ஆகிர் பிறை 10-1435 ) வியாழக்கிழமையோடு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,

மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,
அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்


வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நமது நாயகம் நாகூர் குத்துபு ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து
                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து


இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

 1. என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே!
 2. சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே!
 3. கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!!
 4. சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே!
 5. தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு நேரடியாக வழமைக்கு மாற்றமான புதுமைகள் எத்தனையோ வெளிப்பட்டன.
 6. செழிப்பான முகத்தில் சம்பூரண இன்பங்கள் எல்லாம் தங்களுக்கென்றே நிறைவாய் அமைந்துள்ளன என் தலைவரே! குருநாதரே! அப்துல் காதிரே!
 7. சர்வ சக்திகளுமுடைய இறைவனின் திருத் தூதர் (ஸல்) அவர்களின் சந்ததியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் வழித் தோன்றலில் உதித்தவர்கள்.
 8. குருநாதர்களுக் கெல்லாம் உதவி புரிபவர்,பரிபூரணச் சந்திரனின்  ஜோதி, தூய்மை நிறைந்தவரே! அப்துல் காதிரே!
 9. பரிசுத்த உள்ளத்தோடும் தூயசிந்தை கொண்டும் அனைத்தையும் படைத்து அருளுதவி புரியும் இறைவன் பாதையில் தண்டித்தீர்கள்.
 10. மேலும் சிறந்த அமல்களைக் கைக்கொண்டும்,வடித்த கண்ணீர் துளிகளைக் கொண்டும் தண்டித்தீர்கள்.ஒ! இறைநெருக்கத்தைத் தரும் வணக்கங்களைத் தேர்ந்தெடுத்தவரே! அப்துல் காதிரே!
 11. இன்னும் திருமணம் செய்யாமலும் இறையச்சத்தாலும் உலகாசையை இதயத்தால் வெறுக்கும் பற்றற்ற தன்மையாலும் (இறைவழியில் தண்டித்தீர்கள்)
 12. இன்னும் அதிக ஆவலுடன் இறைவனை நேசித்தீர்கள்,உயர்ந்த அந்தஸ்துகளை அடையப் பெற்ற அப்துல் காதிரே!
 13.  தங்களின் சந்நிதானத்தில் எத்தனையோ கண்ணியமிகுந்த மார்க்கஅறிஞர்கள், சிறப்புக்குரியவர்கள்,பெரியோர்கள்,வர்த்தகர்கள் யாவரும் வந்து தரிசிக்கின்றனர்.
 14. கிறிஸ்துவர்கள் இன்னும் நஷ்டமடைந்த பிராமணர்கள் உள்பட ( எத்தனையோ பேர்கள் வருகின்றனர் ) நோய்கள் கஷ்டங்களை நீக்கக்கூடிய அப்துல் காதிரே!
 15. நாகூர் வாழும் எஜமானே! தாங்கள் என் பார்வை தெளிவடையவும்,என் உறுப்புகள்,காதுகள் விஷயத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
 16. இன்னும் என் வாழ்வு குறைவின்றி நீடித்த ஆயுளுக்கும், ( உதவியாக இருங்கள் ) பெரும் நன்மையான காரியங்களை ஒன்று திரட்டிய அப்துல் காதிரே!
 17. இம்மை மறுமையின் நெருக்கடிகள் என்னைத் தாக்காமல் பெருமையாளனின்,( அல்லாஹ்வின் ) பெருமித நாளில் ( மஹ்ஷரில் ) எனக்கு ஒதுங்கும் தலமாக ஆகுங்கள்.
 18. உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்ற நீங்கள் எனக்கு மறுமைநாளில் தங்கரிய சொத்தாக ஆகிவிடுங்கள் அப்துல் காதிரே!
 19. தங்கரியம் செய்ய நினைப்பவருக்கு எவர்களை நினைவுகூர்வது சொத்தாக அமையுமோ அப்படிப்பட்ட பரிசுத்த நபியின் மீதும்,அவர்களது குடும்பத்தார் மீதும் அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஸலவாத் எனும் கருணையைப் பொழிந்தருள் வானாக!
 20. இன்னும் அன்னாரின் தோழர்கள் மீதும் மதிப்பிற்குரிய அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும்,மஹானே!அப்துல் காதிரே! நாயகமே! தங்கள் மீதும் இறைவன் கருணைபுரிவானாக! ஆமீன்!

வெளியீடு

மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
இறைநேசச் செல்வர் மஹாராஜா டத்தோ ஷைகு அப்துல் ஜலீல் (ரலி) அவர்களின் வருடாந்திர கந்தூரிப் பெருவிழா
இச்சிறப்பு மிகு மாபெரும் பெருவிழா  மென்மேலும் சிறக்க,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்திதுஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, March 23, 2014

புதிரும் பதிலும் - 3

பிரார்த்தனை ஏற்கப்படாததேன்?

ஒரு நாள் மகான் இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் பஸராவின் கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்கள்.அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்!

நாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.அவனிடம் அதிகமாகப் பிரார்த்திக்கிறோம்.ஏனோ அல்லாஹ் எங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை.இது ஏன்? என்று வினவி னார்கள்.

அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அது ஏனென்றால், உங்கள் இதயங்கள் பத்து செயல்களைக் கொண்டு மரித்துப் போய் விட்டது.

1)     அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள்.ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை.

2)      அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்களை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை விட்டு விட்டீர்கள்.

3)      குர்ஆன் ஓதுகிறீர்கள்.அதன் படி நடப்பதில்லை.

4)      அல்லாஹ்வின் அருள்கொடை [யான உணவு] களை உண்ணுகிறீர்கள்.அதற்கு நன்றி செலுத்துவதில்லை.

5)      ஷைத்தான் உங்களுடைய விரோதி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.ஆனால் அவனுக்கு மாறு செய்வதில்லை.

6)      சொர்க்கம் உண்மை எனச் சொல்லிக் கொண்டு அதற்காக அமல் செய்வதில்லை.

7)      நரகம் உண்மை எனச் கூறிக் கொண்டு அதை விட்டும் தப்ப வழி பார்ப்பதில்லை.

8)      மரணம் நிச்சயம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்காக ஆயத்தமாவதில்லை.

9)      உறக்கத்திலிருந்து விழித்ததும்,மக்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறீர்கள்.உங்கள் குறைகளை மறந்து விடுகிறீர்கள்.

10)  மரணமானவர்களை அடக்கம் செய்து கொண்டுதானிருக் கிறீர்கள்.ஆனால் அவர்களைக் கொண்டு படிப்பினை தான் பெறுவதில்லை.

இப்படி உங்கள் இதயம் இறந்து போயிருக்கும் போது எப்படி உங்கள் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.
விழித்துக் கொண்டிருக்கும் உள்ளத்திலிருந்து விழிப்பு நிலையில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
என்றும் தங்களன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

மலக்குமார்களுடன் மானசீக நட்பு

  22 -03 -2014  சனிக்கிழமை தஃப்ஸீர் வகுப்பு 
 தலைப்பு ;- மலக்குமார்களுடன் மானசீக நட்பு.  

பேருரை ;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
எ.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி,ஃபாஜில் தேவ்பந்தி.

தலைமை இமாம், மதரஸா இமாம் கஜ்ஜாலி,செலயாங், 
கோலாலம்பூர், மலேசியா.

புதிரும் பதிலும் -2


புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி.

மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள்.

இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்!

1, ஒன்று தான் உள்ளது. இரண்டு இல்லை. அது என்ன?
அல்லாஹ் ஒருவன்.
قل هو الله احد  நபியே கூறுங்கள் [அந்த] அல்லாஹ் ஒருவன் தான். [அல்குர்ஆன் :112 ;1]

2, இரண்டு தான் இருக்கிறது. மூன்று இல்லை. அது என்ன?
இரவும் பகலும்.
وجعلنا الليل والنهار ايتين நாம் இரவையும் பகலையும் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். [அல்குர்ஆன் :17 ;12]

3, மூன்று தான். நான்கு இல்லை. அது என்ன?
கிள்ரு நபி [அலை] அவர்கள், மூஸா நபி [அலை] அவர்களுக்கு நடத்திய பாடத்தின் தலைப்புகள் மூன்று தான்.
1] கப்பல் சேதம்.
2] சிறுவன் கொலை.
3] சுவர்.

4, நான்கு தான். ஐந்து இல்லை. அது என்ன?
வேதங்கள் நான்கு. தவ்ராத்,ஸபூர்,இன்ஜீல்,குர்ஆன்.

5, ஐந்து தான். ஆறில்லை. அது என்ன?
ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் ஐந்து தான்.

6, ஆறு தான். ஏழில்லை. அது என்ன?
வானத்தையும்,பூமியையும் அல்லாஹ் படைத்த நாட்கள் ஆறு.
وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ நிச்சயமாக நாம் தான் வானங்களையும்,பூமியையும் அதற்கு மத்தியிலுள்ளவை களையும் ஆறே நாட்களில் படைத்தோம்.அதனால் நமக்கு யாதொரு களைப்பும் [சோர்வும்] ஏற்பட்டு விடவில்லை. [அல்குர்ஆன் :50 ;38]

பாதிரி      ; இந்த வசனத்தின முடிவில் “அதனால் நமக்கு யாதொரு களைப்பும் ஏற்பட வில்லை” என்று ஏன் சொல்லி முடித்தான்?

பிஸ்தாமி   ; யூதர்களுக்கு மறுப்பு கூறுவதற்காக அவ்வாறு சொல்லி முடித்தான்.ஏனெனில் அவர்கள் சொன்னார்கள் ; அல்லாஹ் வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் [ஞாயிறு முதல் வெள்ளி வரை] படைத்த போது  அவனுக்கு களைப்பு ஏற்பட்டது.எனவே ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டான்.அது சனிக்கிழமை,ஏழாம் நாள். இதை மறுப்பதற்காக மேற்கண்டவாறு “நமக்கு எந்த களைப்பும் ஏற்பட வில்லை” எனக்கூறினான்.

7, ஏழு தான். எட்டு இல்லை. அது என்ன?
வாரத்தின் நாட்கள் ஏழு.

8, எட்டு தான். ஒன்பது இல்லை. அது என்ன?
அர்ஷை சுமக்கும் மலக்குகள் எட்டு பேர்.
وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். [அல்குர்ஆன் :69 ;17]

9, ஒன்பது முஃஜிஸாக்கள். அது என்ன?
அது மூஸா நபி [அலை] அவர்களின் முஃஜிஸாக்கள்.
1]கை. 2]கைத்தடி. 3]தம்ஸ் – பொருள் நாசமாகுதல். 4] [மழையுடன் கூடிய] புயல் காற்று. 5]வெட்டுக்கிளி. 6]பேன். 7]தவளை. 8]இரத்தம். 9]பஞ்சம். [காண்க :7 ;133, 10 ;88, 17 ;101, 27 ;10,12]

10, கூடுதலை ஏற்றுக் கொள்ளும் பத்து. அது என்ன?
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا  எவரேனும் ஒரு நன்மையை செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு [நன்மை கூடுதலாக] உண்டு. [அல்குர்ஆன் :6 ;160]

11, பதினோறு பேர். அவர்கள் யார்?
யூசுஃப் நபி [அலை] அவர்களின் சகோதரர்கள். [காண்க :12 ;04]

12, பன்னிரண்டிலிருந்து உண்டான முஃஜிஸா எது?
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا மூஸா தன் இனத்தாரு [டன் தீஹ் என்ற மைதானத்திற்கு சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களு]க்கு தண்ணீர் தேடிய போது [நாம் அவரை நோக்கி] நீங்கள் உங்களது தடியால் இக்கல்லை அடியுங்கள் என்று கூறினோம்.[அவர் அவ்வாறு அடித்ததும்] உடனே அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித் தோடியன. [அல்குர்ஆன் :2 ;60]

13, பதிமூன்று பேர். அவர்கள் யார்?
யூசுஃப் நபியுடைய சகோதரர்கள் மற்றும் அவர்களின் தாயும் தந்தையும். [11 + 2] 13 பேர்களாகும்.

14, மூச்சு விடும்.ஆனால் அதற்கு உயிர் இல்லை. அது என்ன?
والصبح اذا تنفس மூச்சு விடும் [உதயமாகும்] காலையின் மீதும் சத்தியமாக. [அல்குர்ஆன் :81 ;18]

15, கப்று கொண்டு நடந்தவர் யார்?
யூனுஸ் நபி [அலை] அவர்கள்.
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ  لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ நிச்சயமாக அவர் [யூனுஸ் நபி] நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் [மறுமையில்] எழுப்பப்படும் நாள் [வரும்] வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருப்பார். [அல்குர்ஆன் :27; 143,144]

16, உண்மை சொன்னார்கள். ஆனால் நரகம் சென்றார்கள். அவர்கள் யார்?
யூதர்களும்,கிறிஸ்தவர்களும்.
وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ “கிறிஸ்தவர்கள் எ[ந்த மார்க்கத்]திலுமில்லை” என யூதர்கள் கூறுகின்றனர். [அவ்வாறே] “யூதர்கள் எ[ந்த மார்க்கத்]திலுமில்லை” எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே [தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாடாகிய தவ்ராத் என்னும் ஒரே] வேதத்தையே ஓதுகின்றனர். [அல்குர்ஆன் :2 ;113]

17, பொய் சொன்னார்கள்.ஆனால் சொர்க்கம் சென்றார்கள். அவர்கள் யார்?
யூசுஃப் நபி [அலை] அவர்களின் சகோதரர்கள்.[“யூசுஃப் நபியை ஓநாய் கடித்து தின்று விட்டது” என்று பொய் சொல்லி, பிறகு தௌபா செய்து [பாவ மன்னிப்பு] திருந்தி இறை நேசரானார்கள்]

18, அல்லாஹ் படைத்த அந்த படைப்புகளுக்கு தந்தையும் இல்லை,தாயும் இல்லை. அவர்கள் யார்?
மலக்குகள் – வானவர்கள்.

19, பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட ஒரு மரம். அதில் ஒவ்வொரு கிளையிலும் முப்பது இலைகள். ஒவ்வொரு இலையிலும் ஐந்து பழங்கள்.அதில் மூன்று நிழலிலும் இரண்டு சூரிய வெயிலிலும் இருக்கிறது. இது என்ன?
இந்த மரம் என்பது வருடம். இதில் பன்னிரண்டு மாதங்கள். முப்பது இலைகள் என்பது முப்பது நாட்கள்.ஐந்து கனிகள் என்பது ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை.இதில் மக்ரிப்,இஷா, ஃபஜ்ரு நிழலிலும் லுஹர்,அஸர் சூரிய வெயிலிலும் உள்ளது.

இவ்வாறு வெற்றி கரமாக கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மகான் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் அந்த பாதிரியாரிடம் கூறினார்கள் ; நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறினேன். நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
அப்படி என்ன கேட்டிருப்பார்கள்?.... காத்திருங்கள்.

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!


اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (65:12)

 கடந்த 8 - 3 – 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட போயிங் 777 – 200 ரக மலேஷியா விமானம் வியட்நாமிய வின்வெளி யில் தென்சீனக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது அது ராடாரிலிருந்து மறைந்து காணாமல் போனது.அதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும்,12 சிப்பந்திகளும் இருந்தனர்.இதில் இரண்டு கைக்குழந்தைகள்.

அந்த விமானம் என்ன ஆனது? அதிலிருந்த பயணிகள்,சிப்பந்தி களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதில் இந்த விமானத்திற்கு நேர்ந்தது துயரம் என்றால்,அதற்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருப்பது இதை விட பெரிய ஒரு துயரமாகும்.

காணாமல் போய் விட்ட இந்த விமானத்தை வல்லரசுகளான அமெரிக்கா,சீனா உள்ளிட்ட 25 நாடுகள் தேடுகின்றன. 50 – க்கும் மேற்பட்ட கப்பல்கள்,40 – க்கும் மேற்பட்ட விமானங்கள் இதை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.தேடும் பணி இரு விரிவான மண்டலங்களில் நடந்து வருகின்றது.அதன் வடக்கு மண்டலம் லாவோஸிலிருந்து காஸ்பியன் கடல் வரை நீடிக்கிறது.தென் மண்டல தேடும் பணி இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியி லிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி வரை நீள்கிறது.

சீனா தன்னிடமிருக்கும் 10 ஹைரெசல்யூஸன் சேட்டர்லைட்டுகளை தேடும் பணிக்காக திருப்பி விட்டுள்ளது.செயற்கைக் கோள் மூலமாக எல்லா நாடுகளின் மீதும் தனது இரகசிய கண்காணிப்பை நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் தனது தேடும் பணியை துவக்கி பல நாளாகியும் இந்த விமானம் குறித்த எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை.வான் பரப்பில் விமானம் ஒன்று வெடித்ததற்கான தீப்பொறி சான்றுகள் எதுவும் அவர்களது செயற்கைகோள் கேமரா காட்சிப் பதிவுகளில் இல்லை.

இது நவீன தொழில் நுட்ப யுகம்.ஸ்மார்ட் ஃபோன்களின் வழி, தொலைபேசி அழைப்பின் வழி எங்கிருந்து பேசுகிறார் என்பதனை அறிந்து கொள்ளும் காலம் இது.இணைய தளத்தின் வழி நீங்கள் ஆஃப்ரிக்காவில் இருக்கிறீர்களா அமெரிக்காவில் இருக்கிறீர்களா என்று கூற முடியும்.கூகுள் வழி நீங்கள் இருக்கும் சரியான இடத்தைக் கண்டு பிடிக்க முடியும்.விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகள் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று வரை படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இவ்வாறிருக்க M.H.370 விமானம் எங்கே இருக்கிறதென்று நமக்கு எப்படி தெரியாமல் போகும்? என்று கேள்வி எழுப்பும் வாஷிங்டன் போஸ்ட், தற்போதைய தொழில் நுட்பத்தில் இன்னும் குறைகள் இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவு கடல் கடந்து போய் எதிரிகளின் இலக்குகளை சரியாகத் தாக்கும் ஏவுகனைகளையும், அவற்றைத் திசைமாறாமல் கணிணி மூலமாகவே செலுத்தும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கத் தெரிந்த விஞ்ஞான உலகம்,மாறிமாறி செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தி பூமி முழுவதும் எங்கள் ஆட்சியே என மார்தட்டிக் கொள்ளும் அறிவியல் உலகம், ஒரு விமானம் திடீரென்று காணாமல் போனது. அதற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று தலைகுணிந்து தனது அறியாமை யையும், ஆற்றாமையையும் சொல்லும் நிலையில் தான் இன்னும் உள்ளது. என்னதான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் புதுப்புது பலவீனங்கள், அறியாமைகள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன. 

இந்த இடத்தில் இமாம் ஷாஃபி [ரஹ்] அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

كلما ازددت علما ازددت جهلا

“எனது கல்வியறிவு கூடிய போதெல்லாம் எனது அறியாமையும் கூடியதைக் கண்டேன்.        

மின்னியல் போர்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ராடாரிலிருந்து M.H. 370 விமானத்தை மறைப்பது சாத்தியமற்றது. ஒரு பொருளைக் கண்ணுக்குப் புலனாகாதவாறு செய்யும் மின்னியல் மறைப்புத் தொழில் நுட்பம் இன்னும் தொடக்க நிலை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. அது இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அது எளிதில் கிடைப்பதுமில்லை. அத்துடன் ஒரு விமானம் பறக்கும் போது அது போன்றதொரு மறைப்பு சாதனத்தை விமானத்தில் பொருத்துவதும் சாத்திமற்றதாகத் தெரிகிறது என அத்தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ஜியார்ஜ் எஸ் தெரியாட்ஸ் விவரித்துள்ளார்.அவர் டொரன்டோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளராவார்.

35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமான வடிவமைப்புக் கோளாறு காரணமாக பிய்த்துக் கொண்டு போயிருக்கலாம் என்று சொல்லப்படும் விவாதங்கள் வானூர்தி தொழில் நுட்பத்தையே கேலிக்கு உள்ளாக்குகின்றன. காரணம், 1994 –ம் ஆண்டு அதிநவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட போயிங் 777 – 200 ரக இந்த விமானம் “ஆகாயத்தின் ரானி” என அழைக்கப்பட்டது. மிகப்பெரிய வடிவமைப்பைக் கொண்ட இந்த வகை விமானத்திற்கு [மனிதனுக்கு இரண்டு சிறுநீரகம் இருப்பது போல] இரட்டை இயந்திரங்கள் உள்ளன. ஒன்று பழுதானால் ஒன்று இயங்கும்.

v  இந்த விமானத்திற்கான இயந்திரம் ETOPS -180 எனும் உயர்தர அங்கீகாரத்தைப் பெற்றதாகும்.

v  பிராட் அன்ட் விட்னி 4070, ரோல்ஸ்ராய்ஸ் தி ரெண்ட் 877, ஜெனரல் எலக்ட்ரிக் ஜி இ 90 – 77 பி எனும் இயந்திரத்தை இந்த விமானம் கொண்டிருக்கிறது.

v  தரையிரங்கும் போது ஒவ்வொரு கியருக்கும் 6 சக்கரங்களைக் கொண்டதாக இந்த விமானம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.

v  இந்த விமானத்தில் அதிகபட்சமாக 1,17,340 லிட்டர் எண்ணெய் நிரப்ப முடியும்.

v  35,000 அடி உயரத்தில் 0 – 84 MACH எனும் வேகத்தில் இந்த விமானம் பறக்க முடியும்.

இந்தளவு தரமான இந்த விமானம், வடிவமைப்புக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி இருந்தால் வானூர்தி தொழில் நுட்பத்தின் கோளாறைத்தான் இது பறைசாட்டுகிறது.
அல்லது அது எங்கே போனது? என்ன ஆனது?என்றே தெரிய வில்லையென்றால் நவீன தகவல் தொழில் நுட்பத்தின் குறைபாட்டைத் தான் காட்டுகிறது.

ஆக, எது எப்படி இருந்தாலும் இந்த சம்பவம் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால்;  “அறிவிலும், ஆற்றலிலும் மனிதன் மேம்பட்டிருந்தாலும் அவ்விரண்டிலும் அவன் மட்டுப் படுத்தப்பட்டவன் தான். அவனுக்குத் தெரியாத விஷயங்களும், அவனால் முடியாத காரியங்களும் அனேகம் இருக்கின்றன. அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவன் பூஜ்ஜியம். அல்லாஹ் வுக்குப் பிறகு தான் அவனுக்கு மதிப்பும், சக்தியும், ஞானமும் எல்லாம் ஏற்படுகிறது.அதுவும் அவன் அளித்த அறிவும் ஆற்றலும் தான்.அவனுக்கு சுயமாக எதுவுமே இல்லை” என்பது தான்.

தொழில் நுட்பக்கோளாறுகளும்,குறைகளும்,பாதுகாப்புக் குளறுபடிகளும், குறைபாடுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பது முழுமைப் பெறாத மனித அறிவையும், ஆற்றலையும் அவனுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

2009 –ல் ஏர்பிரான்ஸ் 447 விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போதே காணாமல் போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகளின் எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபத்துக்குக் காரணம் தெரிய வர மேலும் இரண்டு வருடம் ஆனது. அதுமாதிரி இப்போதும் ஆகிவிடக்கூடாது.

மனிதனுடைய அறிவும் ஆராய்ச்ச்சியும் அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் அவனது ஆய்வுத் தொழில் நுட்பத்தில் பலவீனங்கள் இருக்கிறது என்பதைப் பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பிரபலமான ஒரு முஸ்லிம் தொழில் அதிபரும் அவரது மனைவியும் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்தது. இத்தனைக்கும் இவ்விபத்துக் குள்ளான கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன பென்ஸ் காராகும். இதன் விஷேசம் என்ன வென்றால் ; இந்தக்கார் விபத்துக்குள்ளானாலும் இதனுள் பயணம் செய்வோருக்கு பலத்த அடியோ, ஆபத்தோ ஏற்படாதவாறு இதனுள் இருக்கும் குஷன் கவர் இவர்களை மூடிக்கொள்கிற அமைப்பில் வடிவமைக்கப்பட்டது.

இந்த பென்ஸ் கார் எப்படி பிளந்தது? பாதுகாப்பான தங்களது கார் தயாரிப்புத் தொழில் நுட்பத்தில் எங்கே எப்படி கோளாறு வந்தது? என்பதைக் கண்டறிய விபத்துக்குள்ளான அந்தக்காரை ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர்.

தரமான எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் மறு ஆய்வுக்கு உட்பட்டது தான் என்பது மட்டுமல்ல எந்தத் தொழில் நுட்பமும் இறைவிதிக்கு முன்பு தூள்தூளாகி விடும் என்பதை இந்தக் கார் விபத்து நிரூபித்தது. படைப்பினங்கள் பெற்றிருக்கும் சக்தி அதிகமானாலும் அது அளவானது தான். மனித அறிவு அபரிமிதமானது தான். ஆனால் சிலவேளை அபத்தமான தாகவும், ஆபத்தானதாகவும் ஆகிவிடுகிறது.அவனது குறைமதியும், குறுமதியும் கூர்மழுங்கி குறிதவறி விடுவதும் உண்டு. அதனாலேயே விபத்துக்கள் சம்பவிக்கின்றன.

ஆட்சி, அதிகாரம், வல்லமை, ஆளுமை எல்லாம் யாருக்கும் எதற்கும் எப்போதும் எங்கேயும் நிரந்தரமானதல்ல. அது கைமாறிக் கொண்டும்,கை நழுவிக் கொண்டும் இருக்கும். நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் இது தான் விதி.

காட்டு ராஜா சிங்கத்தின் தர்பார் நடைபெறும் வனத்தில் சிலவேளை அது வீழ்த்தப்படுவதும் உண்டு என்பதை அண்மையில் யூ டியூபில் ஒரு விசித்திரமான காட்சியைப் பார்த்துத் தெரிந்திருப்பீர்கள். அதில் ஒரு மாடு ஒரு சிங்கத்தை தனது முரட்டுக் கொம்பால் குத்தி தூக்கி வீசிக் கொல்கிறது.

பொதுவாக சிங்கம் ஒரு இரையைத் தாக்க முற்படுகிறபோது இரையின் இனங்கள் உதாரணமாக காட்டு எருமை மாடுகள் அல்லது மலாக்கள் ஒன்று சேர்ந்து இதைச் சுற்றி அணிவகுத்து நின்றால் சிங்கம் தனக்குக் கிட்டிய இரையை மேலும் தாக்கிக் கொல்லாமல் அப்படியே விட்டுவிட்டு விலகி விடும். இப்படி சிங்கத்திற்கு எதிராக அணிவகுக்கும் பிராணிகள் ஒன்று ; அவை எல்லாம் சேர்ந்து வந்து எதிர்கொள்ளும். இரண்டாவது ; அப்படி அணிவகுத்து எதிர் கொள்ள வரும் பிராணிகள் சிங்கத்திற்கு சற்று தள்ளி அதன் பார்வையில் படுகிற மாதிரி நின்று அமைதி தர்னா மறியலில் ஈடுபடுமே தவிர அவையாவும் ஒன்று சேர்ந்து சிங்கத்தைத் தாக்க கிட்டே நெருங்காது. 

ஆனால் இங்கே இந்த யூ டியூப் காட்சியில் ஒரு மாடு தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதைப் பார்த்து ஒரே ஒரு மாடு ஆவேசத்துடன் ஓடி வந்தது, சிங்கதிற்கு அருகில் வந்தது, சிங்கத்தின் மீது வீராவேசத்துடன் மோதியது, தனது கொம்பால் அதைப் பந்தாடியது, எல்லாம் நிச்சயம் அதிசயமான காட்சியே.

அதுவும் எந்த சிங்கத்தை? அதன் உடல் வலிமை, அதன் தசைப்பிடிப்பு யாரும் அறியாததல்ல. ஏதாவது ஒரு மிருகத்திற்குமுன் அது தோன்றி விட்டால் இதைப் பார்த்ததுமே அந்த மிருகத்திற்கு பாதி உயிர் போய் விடும். ஏதாவது ஒரு மிருகத்தின் மீது பாய்ந்தால் அப்போது அதன் வேகத்தையும், வீரியத்தையும் காண்போர் அதிசயித்துப் போவர்.
இவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கத்தை ஒரு மாடு தன்னந்தனியாக தூக்கி வீசிப் பந்தாடி கதையை முடிக்கிறது என்றால், இறைசக்தி இருந்தால் மாடும் சிங்கத்தை முட்டி மரணிக்கச் செய்யலாம். இறைசக்தி இல்லாது போனால் சிங்கத்தாலும் கூட சீறவோ, பாயவோ முடியாது என்ற எதார்த்தத்தைத்தான் அந்த வீடியோ பதிவு புரிய வைக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஒரு ஏரியில் மலைப்பாம்புக்கும் முதலைக்கும் மத்தியில் நடந்த சண்டைக்காட்சி பத்திரிக்கையின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றிருந்தது ; இதைப்பார்க்க பொது மக்கள் கூடி விட்டனர். மலைப்பாம்பு முதலையை அடித்து கடித்து விட்டு விடும். அல்லது முதலை பாம்பை விழுங்கும் என்று எதிர்பார்த்திருந்த போது அந்த மலைப்பாம்பு முதலையை விழுங்கிய அதிசயக் காட்சியை விழிபிதுங்கிய நிலையில் இமை கொட்டாமல் மலைத்துப்போய் மக்கள் பார்த்து நின்றனர்.

எந்த முதலையை பாம்பு விழுங்கியது? அதன் சக்தி எந்தளவுக்கு அதிகமென்றால், அது வாலை சுருட்டி பலம் வாய்ந்த சிங்கத்தை அடித்தால் அதன் கால்கள் ஒடிந்து விடும். அதை விட்டும் தப்ப முடியாது. அந்தளவு ஆற்றல் மிகு 700 கிலோ எடையுள்ள முதலையைத் தான் மலைப்பாம்பு விழுங்கியது என்றால், சக்தி என்பது எதற்கும் நிரந்தரமானதோ, நிலையானதோ கிடையாது. எந்த சக்தி வாய்ந்த ஒன்றும் தன் நிலையில் பல பலவீனங்களை உள்கொண்டிருக்கிறது என்பதற்கான நிதர்சன நிரூபணங்களில் ஒன்று தான் முதலை பாம்பால் விழுங்கப்பட்ட நிகழ்வு.

யானை பானையோடு மோதினால் பானை உடையுமா? யானை அழியுமா? பானை தான் உடையும்.உடைய வேண்டும் என்று நடைமுறை அறிவும், உலக நிகழ்வுகளும் சொல்லும்.ஆனால் வீரமிகு இஸ்லாமிய வினோதமான வரலாற்றில் பத்ருப்போர் காட்சியில் யானை [பலம் கொண்ட காஃபிர் சேனை] யும் பானை [போன்ற பலகீனமான சிறுபடை] யும் மோதியதில் யானை உடைந்து போனது. பானை பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல மோதி வெற்றியும் பெற்றது.

كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ

“[எவ்வளவோ] பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றனர். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” [அல்குர்ஆன் :2 ; 249]

அல்லாஹ்வின் உதவியும்,ஒத்துழைப்பும் இருந்தால் அஞ்ஞானம் [ஆற்றலும்,அறிவும் இல்லாதவர்கள்] கூட வெற்றி பெறும். இல்லையென்றால் விஞ்ஞானமும் கூட வெற்றி பெற முடியாது.
அல்லாஹ் உதவி செய்து பாதுகாப்பதாக இருந்தால் யாரையும் எதையும் எப்படியும் பாதுகாப்பான். அதற்கு ஒரு வரையறையோ, விதிமுறையோ அல்லாஹ்வுக்குக் கிடையாது.

அல்லாஹ் அவனது அன்பர் அண்ணலம் பெருமானார் [ஸல்] அவர்களையும் அவர்களுடைய உற்றத் தோழரையும் ஹிஜ்ரத் பயணத்தின் போது அவர்களைக் கொலை வெறியோடு தேடி அலைந்த அரக்கர்களை விட்டும் சிலந்தி வலையைக் கொண்டும் புறாக்களைக் கொண்டும் பாதுகாத்தான் என்பது புனிதமானது மட்டுமல்ல புதிரான வரலாறும் கூட.

இறைவன் நினைத்தால் சிங்கத்தைக் கொண்டே அதன் இரையையும் பாதுகாப்பான். பசியோடு இருக்கும் சிங்கத்திற்கு தன் இரை கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்யும்? சீறிப்பாய்ந்து கடித்துக் குதறி சின்னாப் பின்னமாக்கும். ஆனால் அல்லாஹ் இரங்கினால் இரையை அதற்கு இரணமாக்கி மரணமாக்காமல் அதைக்கொண்டே அதன் மீது இரக்கம் சொறிய வைப்பான்.

இதோ.... இறைவனின் வனத்தில் இப்படியும் ஒரு ஈரமான இரக்கமுள்ள ஒரு நிகழ்வு யூ டியூபில் வெளியானது.அல்லாஹ்வின் சக்தி சிலசமயம் எதிர்மறையாகவும் வினை புரியும். 

காட்டுமாடு ஒன்று அப்பொழுது தான் தன் குட்டியை ஈன்றது. பாவம் அந்தக்குட்டியால் சரியாக எழுந்து கூட நிற்க முடியவில்லை. தனது தாயோடு வேகமாக ஓட அல்லது விரைவாக நடக்கக் கூட அதுவால் முடியாது. இந்த நிலையில் சிங்கம் ஒன்று விடியற்காலையில் கோரப்பசியோடு இரை தேடி பதுங்கிப் பதுங்கிப் பாய வருவதைப் பார்த்து விட்ட அந்தக் குட்டியின் மாட்டுக் கூட்டம் சிட்டென பறந்து சென்று மாயமாக மறைந்து விட்டது. பாவம் அந்தக் குட்டி ஓட முடியாமல் தள்ளாடி தள்ளாடி நடந்தது.

சிங்கம்- இல்லை இல்லை அல்லாஹ்- நினைத்திருந்தால் அந்தக் குட்டியை சுலபமாக சுவைத்திருக்க முடியும். ஆனால் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாம் அல்லாஹ், அந்தக் குட்டியின் மீது சிங்கத்தின் வழியாக தனது கருணைச் சொரிந்தான். தான் நாடி வந்த இரை இப்போது சிங்கத்தைத் தேடி வந்தது. பசியோடு இருந்த சிங்கத்திற்கு இளங்கறியைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறவில்லை. இதயத்தில் ஈரம் கசிந்தது. ஒன்றுமறியாத சின்னச்சிறியக் குட்டி பசியோடு பால் குடிக்க சிங்கத்தின் மடுவை நாடியது. எமனாக வந்த சிங்கம் தாயாக நடந்து கொண்டது. இப்பொழுது மாட்டுக் குட்டி, சிங்கத்தின் அரவணைப்பில், ஆதரவில், அன்பில் வளர்ந்தது.

இந்த டியூப் காட்சி காட்டில் நடக்கிறது. மிருகம் மனிதனாக நடந்து கொள்கிறது. ஆனால் நாட்டில் மனிதன் மிருகத்தை விட மோசமான வனாக கேடுகெட்டவனாகத் திரிகிறான்.

அல்லாஹ்வின் கருணை இருந்தால் கொல்ல வரும் மிருகமும் கருணை காட்டும். முள்ளும் மலராகும். இல்லையெனில்......மலரும் முள்ளாகும்.

ஆக சக்தி, கருணை எங்கேயும் இல்லை.அது அல்லாஹ்விடம் இருக்கிறது. அவன் இசைவு இருந்தால் சக்தி சுபமாகும்.காடும் நாடாகும். வானம் வசப்படும். இல்லையெனில் சகலமும் சாபமாகும். நாடும் காடாகும்,கரியாகும்.

وَآَيَةٌ لَهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ (41) وَخَلَقْنَا لَهُمْ مِنْ مِثْلِهِ مَا يَرْكَبُونَ (42) وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُونَ (43) إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَى حِينٍ    

  “கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.அவர்கள் ஏறிச்செல்ல அதைப்போன்ற [பாலை வனக்கப்பல் ஒட்டகம்,ஆகாயக்கப்பல் விமானம் போன்ற]வைகளையும் நாம் அவர்களுக்காக படைத்திருக்கிறோம்.நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து  [விபத்துக்குள்ளாக்கி]விடுவோம். அச்சமயம் [அபயக்குரலில்] அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்.அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். சிறிது காலம் நம்முடைய அருளால் நாம் அவர்களை சுகம் அனுபவிக்க விட்டாலொழிய”     [அல்குர்ஆன் : 36 ;41,42,43,44]

யாஅல்லாஹ்! உனது அருளைத்தவிர இப்போது வேறு வழியில்லை. உனது கிருபையால் விமானத்தையும், WE மானத்தையும், அவர்களையும்,எங்களையும் காப்பாயாக! ஆமீன்!
                                                                               
                                                   தேடும் பணி தொடரும்......                                                  

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

Saturday, March 22, 2014

WE PRAY CONTINUOUSLY தொடர்ந்து பிரார்த்திப்போம்

21 -03 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
 தலைப்பு ;- மாயமான மலேசிய விமானம்: பல நாட்களாகியும் மர்மமாகவே உள்ளது. மக்கள் சடைந்துவிட வேண்டாம்-

 குத்பா பேருரை ;- மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி,
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Friday, March 21, 2014

இலங்கை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவில் மாபெரும் மீலாத் பெருவிழா !உஸ்மானிகள் பேரவை மற்றும் மஸ்ஜிதே முஹம்மதிய்யா & மதரஸா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு !


இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, March 12, 2014

கப்ரு ஜியாரத் பற்றிய தெளிவான ஆதாரங்கள் !!!


♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.

இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.

புரைதா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 - 241

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்.

ஸஹிஹுல் முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.

பைஹகி, மிஷ்காத் - 154

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள்.

மிஷ்காத் 2 – 407

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.

ஸஹிஹுல் முஸ்லிம், மிஷ்காத் - 154

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382

♣ ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் – 154

♣ அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.

முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377

♣ மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.

அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் - 149, முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079 -

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

அர்த்தமுள்ள காதலும் ஆகாத அனாச்சாரங்களும் !!!

மலேசியத் தலை நகர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா,மௌலவி,அல்ஹாஃபிழ்,
அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா
அவர்களின் வெள்ளிக்கிழமை குத்பா பேருரை

)

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு