அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Tuesday, December 28, 2010

ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) அவர்களின் புனித வரலாறு

                                 ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி)

                          பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

ஆத்ம ஞானப் பெரியார் மகிமை தாங்கிய மாமேதை அல் ஆரிபுபில்லாஹ்
மாதிஹுர் ரசூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் அப்பா 
ஒலியுல்லாஹ்  (ரஹ்) அவர்களின்
                      
வாழ்க்கைக் குறிப்பு


பிறப்பிடம் ;  காயல் பட்டினம்
காலம்    ;  ஹிஜ்ரி 1042-ல் பிறந்து கீழக்கரையில் 
ஹிஜ்ரி 1115 ஸபர் பிறை 5- ல் வபாத்தானார்கள்.

தந்தை    ;         அல் குத்புஷ் ஷெய்கு ஸுலைமான் 
ஒலியுல்லாஹ்   (ரஹ்) அவர்கள்.
 (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்)

ஆசிரியர்  ; இமாமுல் ஹுதா, ஷம்ஸுல் மஆரிப் அல்லாமா அல்   
                   மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம்  (ரஹ்) அவர்கள்.
                   (அடக்கஸ்தலம்- கீழக்கரை பழைய 
ஜும்ஆப் பள்ளியில் உள்ளது)

சகோதரர்கள் ; 1-வது அஷ் ஷெய்கு ஷம்ஸுத்தீன் வலி (ரஹ்) அவர்கள்
                    (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்)

               2-வது அஷ் ஷெய்கு அஹ்மது வலி (ரலி) அவர்கள்
                     (அடக்கஸ்தலம்- மஞ்சக்கொல்லை,தஞ்சை மாவட்டம்)

               3-வது அஷ் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் வலி (ரஹ்) அவர்கள்
               4-வது அஷ் ஷெய்கு ஸாம் ஷிஹாபுத்தீன் வலி (ரஹ்)
               அவர்கள் (அடக்கஸ்தலம்-காயல் பட்டினம்)

               5-வது அஷ் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலி (ரஹ்) அவர்கள்.

                (அடக்கஸ்தலம்-களக்காடு,ஏர்வாடி,நெல்லை மாவட்டம்)

மஹான் அவர்கள் மாபெரும் சன் மார்க்க சட்டக்கலை ஞானியாகவும்,ஆத்ம ஞானப் பெரியாராகவும் இருந்து வாழ் நாள் முழுவதும் சத்திய இஸ்லாத்திற்காகப் பாடுபட்டார்கள்.இரு உலகத் தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது மனமுவந்து யாத்தளித்த புகழ் கவிதைகள் அநேகம்.அவற்றிலே ‘’ கஸீதாயே வித்ரிய்யா ’’ அரபு உலகமே வியக்கும் வண்ணம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. உமறுப்புலவர் அப்பா (ரஹ்) அவர்கள் சிறப்புமிகு  ‘சீறாப்புராணம்’’ இயற்றுவதற்கு உரை கொடுத்தது. மஹான் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் (ரஹ்) 
அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.

மஹான் அவர்களின் அடக்கஸ்தலத்தை அவர்களின் ஆருயிர்த் தோழரான மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் (முஹ்யுத்தீன்) (ரஹ்) 
அவர்கள் அழகிய மக்பராவாகக் கட்டினார்கள்.

‘’ நம்மை ஆள் உடையான்வேத நபிதிருவசனம் தீனோர்
 சம்மதித் திடப்பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர்
 இம்மையும் மறுமையும் பேறிலங்கிய ஸதக்கத்துல்லாஹ்
 செம்மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே.’’உமறுப் புலவர்---


                                       www.chittarkottaisunnathjamath.blogspot.com
 

Wednesday, December 1, 2010

சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தாரின் இல்லத் திருமண மஜ்லிஸ் அழைப்பிதழ்முபஸ்மிலன்!   முஹம்திலன்!!      முஸல்லியன்!!!      முஸல்லிமா!!!!

அன்புடையீர்!

               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் M.அப்துல் ஹை 
ஆலிம் பாக்கவி மற்றும்    மௌலானா   மௌலவி    அல்ஹாஜ் 
மர்ஹூம் S.A முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ  ஆகியோரின் இல்லத்   திருமண விழா  நிகழ்வு

மணமகன்

S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்  அவர்களின் 
செல்வப் புதல்வன்
S.A.M முஹம்மது  நூருல்லாஹ்

மணமகள்
M.முஹம்மது ஹபீப் ஆலிம் அவர்களின் 
செல்வப் புதல்வி
M. நலீஃபா ஷமீம்

ஹிஜ்ரி 1432 வருடம் முஹர்ரம் பிறை 12 (19-12-2010)
ஞாயிற்றுக் கிழமை காலை 10-30 மணியளவில்
முபாரக்கான வேலையில் இன்ஷா அல்லாஹ் சித்தார் கோட்டை ஜன்னத்துல்
பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் நடை பெறும் திருமண நிகழ்விலும்,அதை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசரிப்பிலும்,தாங்கள் வருகை தந்து சிறப்பித்து மணமக்களின் தீன் நெறி வாழ்விற்கு துஆச் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை

      மௌலானா மௌலவி அபுல்பயான் லால்பேட்டை
                A.E.M.அப்துர் ரஹ்மான்   மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்
                 (தலைவர் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை)

வாழ்த்துரை;-  

மௌலானா மௌலவி அல்ஹாஜ்
               V.V.A. ஸலாஹுத்தீன் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்
                (தமிழ் நாடு அரசு இராநாதபுர மாவட்ட காஜியார்)

               மௌலானா மௌலவி அல்ஹாஜ்
               K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
                (சென்னை,புரசைவாக்கம் ஜும்ஆ பள்ளி தலைமை இமாம்)

               மௌலானா மௌலவி செங்கோட்டை சிங்கம், அல்ஹாஜ்
               M.ஆவூர் அப்துஸ் ஷக்கூர் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
                (துணைத் தலைவர் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை)

                மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
               A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள்
                 (முதல்வர் J. M. A. அரபுக்கல்லூரி  லால்பேட்டை)

               மௌலானா மௌலவி அல்ஹாஜ்
               P.A. ஹாஜா முயீனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்
                (பேராசிரியர் மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக்கல்லூரி)

 துஆ ;-   
     மௌலானா மௌலவி அல்ஹாஜ்   அழகன்குளம்
               ஷாதிக்குல் அமீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
                (மாநில ஜமாஅத்துல் உலமா சபை செயற்குழு உறுப்பினர்)

நிகழ்ச்சிதொகுப்பு- 

      மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
                 அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்
                  (தலைமை இமாம், சித்தார்கோட்டை)
                
குறிப்பு;-
இன்னும் லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி
பேராசிரியர்களும், மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த உலமாப் பெருமக்களும், இச் சிறப்பான மஜ்லிஸில் கலந்து கொண்டு துஆச் செய்ய இருக்கின்றார்கள். ஆகவே  உள்நாடு,மற்றும் வெளிநாடு  இணைய தள பார்வையாளர்களும், இந்த அழைப்பினை ஏற்று, இவ்விழாவில் கலந்து கொண்டு துஆச் செய்யும்மாறும், 
இச் சிறப்புமிகு மஜ்லிஸ் மென் மேலும் சிறக்கவும்,
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழவும்,
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினர் வரவேற்று வாழ்த்தி அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.

Tuesday, November 16, 2010

Watch Hajj 2010 LIVE on Chittarkottai Sunnath Jamath

Live broadcast of the Holy Mosque

"Labaik, Allahumma Labaik, Labaik La Sharika Laka Labaik,
Innal Hamda Wa N'amata Laka Wal Mulk, La Sharika Lak."


Saturday, October 2, 2010

நினைவு நாள் அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான்னிர்ரஹீம் 
பனைக்குளம்          
மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,
          அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,
          அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்
         ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா
              செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி)

                          ஹஜ்ரத் கிப்லா அவர்களின்
                      44- ம் ஆண்டு நினைவு நாள் விழா
                     நாள் ; 02-10-2010 சனி பின்னேரம்
                      ஞாயிறு இரவு -7-00- மணிக்கு
  தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு
                        ஜீரணி வழங்கப்படும்.

அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும்,சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு துஆச் செய்ய இருக்கின்றார்கள் அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும்,தொழிலிலும், சிறப்புப் பெற்று, மனம் நிறைந்த நோய் நொடி  இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு.

மௌலவி M. செய்யிது முஹம்மது ஆலிம்                 
S/O அல்ஹாஜ் மர்ஹூம் முஹம்மது முபாரக் ஆலிம்
விழாக்குழுவினர், பனைக்குளம்.

.இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும்  கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும்,பெற்றுக் கொள்ளும்மாறு, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும், துஆச் செய்து அகமகிழ்ந்து அன்புடன் அழைக்கின்றார்கள். வஸ்ஸலாம்.

Monday, September 27, 2010

* ஹஜ்,உம்ரா,ஐியாரத் *

ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-1


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-2


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-3


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-4


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-5


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-6


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-7


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-8


ஹஜ்,உம்ரா,ஐியாரத்.Part-9

Wednesday, September 15, 2010

மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம்

               
                          பிஸ்மிஹி தஆலா
                 
  மஸ்ஜித், மத்ரஸா,ஷரீஅத்கோர்ட், இஸ்லாமிய நூலகம் & ஆய்வு  மையம் மீட்டிங்ஹால், தங்கும் அறைகள், அனைத்தும் அமைந்த 5     அடுக்குகள் கொண்ட
                       தலைமையகக் கட்டிடம்

                            
             
கட்டிடப் பணிகள் துவங்கி வருகின்றன
நிறைவு செய்திட மனமுவந்து நிதி அள்ளித் தாரீர்.

    தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் !
அல்லாஹ்வின் பேரருளால் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக 1956 –ல் உலமாக்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையாகும்.
பொன்விழா காலத்தை அடைந்த நம் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு இது வரை சொந்தமான தலைமையகக் கட்டிடம் இல்லை.
வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இக்காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் சேவைகளும் செய்திகளும் நம் மக்களை விரைவாக சென்றடையவும், ஜமாஅத்துல் உலமா சபை தன் நோக்கங்களிலும், லட்சியங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தனது பணிகளை பரவலாக்கி மக்கள் பயன் பெறும்படி செய்வதற்கும் ஓர் தலைமையகக் கட்டிடம் கட்டுவது இக் காலத்தின் கட்டாயமாகும்.  இதனை  தீட்சண்யமாக  உணர்ந்தாலோ என்னவோ  மதுரை  மாநகரில் வசித்து வந்த T.S.N.M.S.A.P.M     முஹம்மது முஸ்தபா ஹாஜியார் அவர்கள் ,37 –ம் வயதில் மரணமாகி விட்ட தனது மருமகன் N. அப்துர் ரஜ்ஜாக் M.A.B.L அவர்களின் ஈசாலே சவாபுக்காக மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு 1974 –ல்  11 சென்ட் காலியிடத்தை மாநில ஜமாஅத்துல் உலமா சபை,  தான் விரும்பிய படி கட்டிடம் கட்டிக் கொள்வதற்கு  என்று வக்ஃப் செய்துள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் !
அந்த காலி இடத்தில் தான் தற்போது மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம் கட்டும் பணி துவங்கி வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
  தலைமையக கட்டிடத்தின் விபரங்களும், அதன் நோக்கங்களும்.
அன்டர் கிரவுண்ட் (கீழ்தளம்) மாபெரும் நூலகமும் மற்றும் இஸ்லாமிய சட்டங்களின் ஆய்வு மையமும்;
குர்ஆன், ஹதீஸ், தஃப்ஸீர், ஃபிக்ஹு வரலாறு போன்ற பல்வேறு கலைகளில் வெளிவந்துள்ள லட்சக்கனகாண அரபி மற்றும்  உர்தூ தமிழ் மொழிகளிலுள்ள வியத்தகு நூல்கள் அடங்கிய மகத்தான நூலகம் இன்ஷா அல்லாஹ் அதில் அமைக்கப்படும். மேலும் இது இஸ்லாமிய மார்கக் சட்டங்களின் ஆய்வு மையமாகவும் செயல்படும்.
தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த திறமையான ஆலிம்கள் குழு இதில் பணியாற்றுவார்கள்
                குழுவின் பொறுப்புகள்
இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களுக்கு இன்ஷா அல்லாஹ் உடனுக்குடன் பதில் தருவது.
தேவையான நவீன மஸாயில்களை ஆய்வு செய்து ‘’ஃபத்வா’’ வழங்குவது.
மக்தப் மத்ரஸாக்களுக்கான பாட திட்டம் தயாரித்தல்.
தமிழகத்திலுள்ள மஸ்ஜிதுகள்,மத்ரஸாக்கள், மக்தப் பாட சாலைகள் அனைத்தையும் கணக்கெடுத்தல்
தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்துகளின் நோக்கங்களை கண்டறிந்து வாகிஃபின் (வக்ஃபு செய்தவரின்). நோக்கங்களுக்கு ஏற்ப செலவிட தூண்டுதல்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃபு சொத்துகளுக்கும் கால நிலைக்கேற்ப இன்றைய மார்க்கெட் நிலவரப்படி நியாயமான வாடகைகள் கிடைக்க மஸ்ஜித், மத்ரஸாக்களின் நிர்வாகிகளோடு இணைந்து அதிவேகமாக பாடுபடுதல்.
பட்டம் பெற்று வரும் உலமாக்களுக்கு பயிற்ச்சி அளித்தல்.
அரபி மற்றும் உர்தூ கிதாபுகளில் புதைந்து கிடக்கின்ற இஸ்லாமிய ஞானங்களை மொழி பெயர்த்து தமிழக மக்களுக்குத் தருவது.
நாம் பெற்ற ஹிதாயத் (நேர்வழி) எல்லா மக்களுக்கும் கிடைக்க இஸ்லாமிய அழைப்பு  (தஃவா) பணி செய்வது, இன்னும் இது போன்ற பல்வேறு நற்பணிகள் செய்வது இக் குழுவின் பொறுப்புகளாகும்
முதல் தளம்; ஆஃபீஸ் ரூம் மற்றும் மீட்டிங் ஹால்;
சமுதாய பிரச்சினைகள் சம்மந்தமாகவும், கால நிலைக்கேற்ப செய்ய வேண்டிய சேவைகள் பற்றியும், ஆலோசிப்பதற்காக மீட்டிங் ஹால்,இதில் மாதம் ஒரு முறை நிர்வாகக் குழு கூட்டமும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உயர்மட்டக்குழு கூட்டமும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டமும்,வருடத்திற்கு இரண்டு முறை பொதுக்குழு கூட்டமும், வருடத்திற்கு ஒரு முறை மகா சபைக் கூட்டமும் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.

முதல் மாடி             தங்கும் அறைகள் கட்டி வாடகைக்கு விடுதல்
இரண்டாவது மாடி
சபையின் நிர்வாகச் செலவினங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில், மதுரைக்கு வரும் வெளியூர் வாசிகளான நம் சமுதாய பெருமக்கள் தங்குவதற்கான தங்கும் அறைகள் கட்டி வாடகைக்கு விடுவது. மேலும் மீட்டிங் இல்லா நேரத்தில் மீட்டிங் ஹாலையும் திருமணம் மற்றும் இதர விஷேசங்களுக்கும் வாடகைக்கு விடுதல்.
மூன்றாவது மாடி; மஸ்ஜித்,ஹிப்ளு மத்ரஸா மற்றும் ஷரீஅத் கோர்ட்
 முஸ்லிம்கள் தமது குடும்பப் பிரச்சணைகளுக்காக கோர்ட்டுக்கு சென்று பணங்களையும், காலங்களையும், பாழ்படுத்தாமல் இருக்க,குடும்ப பிரச்சனைகளை மார்க்க அடிப்படையிலும் சுமூகமான முறையிலும் தீர்த்துக் கொள்வதற்கு ஷரீஅத் கோர்ட் அமைத்து செயல்படுதல். மேலும் எந்த நேரமும் இபாதத் (வணக்கம்) நடைபெறும் வகையில் அல்லாஹ்வின் கலாமை ஓதிக் கொண்டிருக்க ஓர் ஹிஃப்ளு (குர்ஆன் மனன) மத்ரஸா நடத்துவது, மாணவர்களும் மற்றவர்களும் தொழுவதற்கு ஓர் மஸ்ஜித் ஏற்படுத்துதல், இவைகள் தான் தலைமையக கட்டிடத்தின் நோக்கங்களாகும்.
எனவே, இதுபோன்ற பல்வேறு சேவைகள் செய்திட மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகக் கட்டிடம் கட்ட நாடி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இப் பணியை துவக்கியுள்ளோம்.
சமுதாய சான்றோர்கள் இக் கட்டிடம் கட்டி முடிக்க தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்தியமக்களுக்கும் மகத்தான சேவைகள் செய்யும் கேந்திரமாகத் நம் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை திகழவும் தாங்கள் அனைவரும் துஆச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.வஸ்ஸலாம்.
               
தங்களன்புள்ள
M.O அப்துல் காதிர் தாவூதி
பொதுச்செயலாளர்
தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
         
நிதி உதவிகள் செய்ய அனுக வேண்டிய முகவரி
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
மௌலானா மௌலவி
A.E.M. அப்துர் ரஹ்மான் ஹள்ரத்
CELL; 9843689800 , 9360394875

நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை


ராமநாதபுரம், செப் 11 .
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உலக அமைதி, மத நல்லிணக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்தனர். முஸ்லிம்கள் கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு மேற் கொண்டனர். நேற்று முன் தினம் மாலை ஷவ்வால்  பிறை தென் பட்டதையடுத்து ரம்ஜான் (ஈகை திரு நாள்) கொண்டாட ராமநாதபுர மாவட்ட தமிழ்நாடு அரசு காஜியார் கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி V.V.A ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் முறையான அறிவிப்புச் செய்தார்கள்.இதையடுத்து நேற்று முன் தினம் இரவு தக்பீர் ஓதப்பட்டது. நேற்று காலை 8 முதல் 9 மணிவரை தேவிபட்டினம் ,சித்தார் கோட்டை, வாழூர்,  அத்தியூத்து, புதுவலசை,பனைக்குளம்,ஆற்றங்கரை, உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.இதில் ஜமாஅத்தார்கள் உள்பட முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று ,உலக முஸ்லிம்களிடம் சமாதானமும், சுக வாழ்வும், ஏற்பட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் மௌலானா மௌலவி இமாம் அப்துல் அலி மன்பஈ ஹள்ரத்  அவர்கள்  தலைமையில்  நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான  முஸ்லிம்கள்  பங்கேற்றனர்.  கீழக்கரை,  தொண்டி, நம்புதாளை,சோழியக்குடியில் ஹஜ்ரத் நெய்னா முஹம்மது (ரலி)அவர்களின் தர்காவிலுள்ள பள்ளிவாசலிலும்,எஸ்,பி,பட்டினத்தில் ஜமாஅத் சார்பிலும் சிறப்பு தொழுகை  நடந்ததுஒருவரை ஒருவர் கட்டித்  தழுவி ரம்ஜான் நல் வாழ்த்துக்களை  பகிர்ந்து  கொண்டனர்வஸ்ஸலாம்.
நன்றி- தினகரன்.

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு