நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், செப் 11 .
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உலக அமைதி, மத நல்லிணக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்தனர். முஸ்லிம்கள் கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு மேற் கொண்டனர். நேற்று முன் தினம் மாலை ஷவ்வால் பிறை தென் பட்டதையடுத்து ரம்ஜான் (ஈகை திரு நாள்) கொண்டாட ராமநாதபுர மாவட்ட தமிழ்நாடு அரசு காஜியார் கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி V.V.A ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் முறையான அறிவிப்புச் செய்தார்கள்.இதையடுத்து நேற்று முன் தினம் இரவு தக்பீர் ஓதப்பட்டது. நேற்று காலை 8 முதல் 9 மணிவரை தேவிபட்டினம் ,சித்தார் கோட்டை, வாழூர், அத்தியூத்து, புதுவலசை,பனைக்குளம்,ஆற்றங்கரை, உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.இதில் ஜமாஅத்தார்கள் உள்பட முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று ,உலக முஸ்லிம்களிடம் சமாதானமும், சுக வாழ்வும், ஏற்பட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் மௌலானா மௌலவி இமாம் அப்துல் அலி மன்பஈ ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். கீழக்கரை, தொண்டி, நம்புதாளை,சோழியக்குடியில் ஹஜ்ரத் நெய்னா முஹம்மது (ரலி)அவர்களின் தர்காவிலுள்ள பள்ளிவாசலிலும்,எஸ்,பி,பட்டினத்தில் ஜமாஅத் சார்பிலும் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். வஸ்ஸலாம்.
நன்றி- தினகரன்.
Comments
Post a Comment