Posts

Showing posts with the label LATEST INFO

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்

Image
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல

ஜமாஅத்துல் அவ்வல் பிறை 3-முதல் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 25-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

சென்னை வியாசர்பாடி,7-வது தெரு S.A.காலனியில் புதுப்பிக்கப்பட்ட ஷுபுஹானியா மஸ்ஜிது, மற்றும் மதரஸா திறப்புவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில், மௌலானா A.K.சிப்கதுல்லாஹ் ஆலிம் பாகவிM.A.Mphil  அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தாய்ச்சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம். காதிர் முஹைதீன் அவர்கள் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள். ஜமாலியா  அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி M.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத், மஸ்ஜித் மஃமூர் தலைமை இமாம்,மௌலானா O.S.M. இல்யாஸ் ஆலிம் காஸிமி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் மௌலானா A.M.M.இப்றாஹிம் ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள். மீலாது நபி (ஸல்)விழா, முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா,சுன்னத் ஜமாஅத் பேரியக்க கிளை துவக்கவிழா,ஆகிய முப்பெரும் விழா, சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி,சென்னை தண்டையார்பேட்டை,நேதாஜிநகர்,3-வது தெருவில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் மஹ்ழரி அவர்கள்,கிராஅத் ஓதினார்கள்.மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆமிர

ரபியுல் அவ்வல் 5 முதல் ரபியுல் அவ்வல் 20 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

 பிப்ரவரி 9 -ஆம் தேதி நெல்லை பேட்டையில்  ரஹ்மானியா பள்ளி வணிக வளாகத்தில் மீலாது  விழா நடை பெற்றது.விழாவிற்க்கு சிறப்பு அழைப் பாளராக  தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  சபைத்  தலைவர், அபுல் பயான், ஷைகுல்  ஹதீஸ்,அல்லாமா  மௌலானா மௌலவி எ.இ.முஹம்மது  அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மேலப்பாளையத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாபெரும் ஷரீஅத் மாநாடு  நடைபெற்றது.மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட  ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா  மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி னார்கள்.மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக  தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத்  தலைவரும்,காயல் பட்டினம் மஹ்ழரத்துல் காதி ரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா  மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.கே. கலந்தர் மஸ்த்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத்  அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஹஜ்ரத்,நீடூர் அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா எம்.எஸ்.அப்துஸ் ஸலாம் ஹஜ்ரத். மௌலானா மௌலவி என்.ஹாமித் பக்ரி மன்பஈ ஹஜ்ரத்,கோவை கரும்பு கடை ஜூம்ஆப் பள

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

Image
From: Ganimathullah Alim  :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!     முஸல்லியன்!    முஸல்லிமா!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்  இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி  வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்  சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)  அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை  காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில்  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று  இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடை

இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா

Image
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில் உத்தம திருநபியின் உதயதின விழா , இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள் , பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது . இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார் . ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர் . ஈசா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார் . காதர் பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை வழங்கினார் . சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள் . முன்னதாக மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் , பேச்சுப்போட்டி , ஹதீஸ்போட்டி , மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது . வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் . செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்

TNTJ இயக்கத்தை விமர்சிப்பது ஏன்?

From: Abdul Rahman more video

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த கல்விக் கடலின் மறைவு

Image
From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > Date: 1/2/2012 நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான மிகப்பெரும் சேவையாற்றியவரும், பன்னூல் ஆசிரியரும்,திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின்  தலைமை இமாமும், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும், மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சிந்திக்க வைக்கும் சொற்ப்பொழிவுக்கு சொந்தக்காரரான  ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச்  செய்தியாகிவுள்ளது.அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை  இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்து ஷரீயா என்ற ஷரீஅத் பே

தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி

Image
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து  ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அரபுக

நினைவுநாள் அழைப்பிதழ்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை, மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ், அல்லாமா, மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான், மஸீஹுல் அனாம்,  ஆரிஃபு பில்லாஹ், ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.  (22-09-2011)  வியாழன் பின்னேரம்  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அது சமயம்  சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர்  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்  மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை நிகழ்த்த  இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு வருகை தந்து,  சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு, நல்லாச

அரபுக்கல்லூரிகள் துவங்கியது!!!

Image
பிஸ்மிஹி தஆலா எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக்கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால் முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல் அதாவது காலை மதரஸாக்களுக்குகூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளை விட்டும் விலகி வாழ்ந்தார்கள்.

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

Image
பிஸ்மிஹி தஆலா அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து,தனித்திருந்து,வி ழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களையும், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையின் சார்பாக தெறிவித்துக்கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை   கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனது ஊ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு