அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் 843 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

Wednesday, February 1, 2012

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த கல்விக் கடலின் மறைவுFrom: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>
Date: 1/2/2012
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான
மிகப்பெரும் சேவையாற்றியவரும், பன்னூல்
ஆசிரியரும்,திருக்குர்ஆன் விரிவுரையாளரும்,
சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின் 
தலைமை இமாமும், தமிழகத்தின் மிகப்பெரும்
சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும், மௌலானா மௌலவி 
அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ
ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை
விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சிந்திக்க வைக்கும் சொற்ப்பொழிவுக்கு சொந்தக்காரரான 
ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி
ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் 
செய்தியாகிவுள்ளது.அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை
பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள்.
இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ
மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை 
இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்து ஷரீயா என்ற
ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள். 
ஹஜ்ரத் பெருந்தகையவர்கள். சன்மார்க்க கோட்டையாகிய 
லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் 
மௌலவி ஆலிம் (தஹ்ஸீல்) பட்டம் பெற்று, சன்மார்க்க
விளக்கம் தருவதில் முன் மாதிரி அறிஞராகவும், சிக்கலான மார்க்க
விசயங்களைக் கூட பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்து கூறுவதில்
வல்லவராகவும்,திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் பெருந்தகையவர்கள். தமிழகத்திலும்,
வெளிநாடுகளிலும்,மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், 
கல்லூரி விழாக்களிலும்,சுன்னத் வல் ஜமாஅத் மாநாடுகளிலும், 
ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால்அதனைக்கேட்கும் கூட்டமே தனியே தெறியும். 
இதயங்களை ஈர்க்கும் சொல்லரசாக விளங்கினார்கள். ஹஜ்ரத் அவர்களின்
சொற்ப்பொழிவுகள், பல்லாயிரக்கணக்கில் ஒளி ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும்
பரவியுள்ளன. தமிழக மக்களின் இறைநம்பிக்கையை (ஈமானை) தகர்த்தெறிந்த 
நவீன தீய குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள் .சத்திய
மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். யாருக்கும்
பயப்பிடாமல், எந்தவித மிரட்டலுக்கும் பயப்பிடாமல் அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மார்க்கப் 
பணியாற்றினார்கள்.பிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற 
விமர்ச்சனங்களுக்கும்,தீய குழப்பவாதிகளால் தவறாக சித்தறிக்கப்பட்ட
சட்டங்களுக்கும், ஆதாரங்களுடன் பதில் கொடுத்து தீய குழப்பவாதிகளின்
வாய்களை அடைத்தார்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும்
பழக்கமில்லாத மார்க்க மேதை,எதையும் இதயத்தை தொடும்படியாக
எடுத்துக்கூறும் இயல்புள்ள மார்க்க அறிஞர்.சிந்தனையாளர்களுக்கு
தூண்டுகோல்,செயல் வீரர்களுக்கு துணைவர், மொத்தத்தில் சமுதாய 
ஒற்றுமைக்கும்,சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பன்பட்ட
மேதை அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்ப்பட்ட
பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஜ்ரத் பெருந்தகையின் நல்
அமல்களை ஏற்றுக்கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்க சேவைகளை அங்கீகறித்து
குற்றங்களை மன்னித்து தன்னுடைய ''ஜன்னத்துல் பிர்தெளஸ்'' எனும் சுவன
பதியில் நுழைய வைப்பானாக என்று துஆச் செய்வதுடன், அன்னாரின்
பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர், ஆலிம் 
பெருமக்கள்,மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும்
''ஸப்ரன் ஜமீலா'' என்ற அழகிய பொருமையை தந்தருளவும் , சுன்னத் 
வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் மற்றும் மலேசியக்கிளை
இன்னும் சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்
இணைய தளமும் துஆச்செய்கிறது ஆமீன் வஸ்ஸலாம்..
உலகெங்கும் வாழும் அனைத்து சகோதரர்களும் ஹஜ்ரத் 
பெருமகனாரின் ஹக்கில் துஆச்செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
வெளியீடு -;மன்பஈ ஆலிம் .காம்

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்