அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Saturday, February 11, 2012

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

From: Ganimathullah Alim :<ganimathullah@rocketmail.com>

முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!   
 முஸல்லியன்!    முஸல்லிமா!
 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்) 
அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்
 இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி 
வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்
 சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)
 அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை 
காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் 
சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப் சித்தார் கோட்டையின் மூன்று
 இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்கள்,
மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. பிறகு ஊர் மக்கள்
 அனைவருக்கும் விசேச உணவு வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது.மாலை அஸர் தொழுகைக்குப்
 பிறகு மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவ,மாணவிகளின் மீலாது ஊர் வலம் நடைபெற்றது.
இறுதியில் துஆ ஓதப்பட்டு மீலாதுப் பெரு விழா இனிதே நிறைவு பெற்றது வஸ்ஸலாம்
இவண்-
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு