அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Wednesday, February 12, 2014

யோகா ... ஆகா! ( யோக பற்றி இஸ்லாமியப் பார்வை )

மலேசியத் தலை நகர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா,மௌலவி,அல்ஹாஃபிழ்,
அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா
அவர்களின் ( 7-02-2014 ) வெள்ளிக்கிழமை குத்பா பேருரை

                                                           முதல் பாகம்இரண்டாம் பாகம்

குத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு தின விழா

சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.


Sunday, February 9, 2014

மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!

நாள்: 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை
இடம்: முஹம்மதியர் தெரு, கோரிப்பாளையம்.


பேருரை :-

அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )
இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்

வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Friday, February 7, 2014

மெய் நிலை கண்ட தவஞானிகள்.


சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்,ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

               

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும்
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி
·         முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்.
·         இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி
·         உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர்.
·         பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யாஒருங்கிணைத்தவர்.
·         ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்.
·         கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்..
·         ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர்
                                                                               كان   كثير الكرامة

அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.
வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு தெரியாது.

இன்றைய ஈரானில் காஸ்பியன் கடலை ஒட்டியிருக்கிற ஜீலான் என்ற நகரத்தில் நீப் பகுதியில்  ஹிஜ்ரி 470 ல் (கிபி 1077) அப்துல் காதிர் ஜீலானி பிறந்தார்.

அது ஹிஜ்ரி ம் நூற்றாண்டுஇஸ்லாமிய அரசாங்கத்தை அப்பாஸிய கலீபாக்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்முஸ்லிம்கள் அரசியலிலும் அறிவியலிலும் உலகின் முதலிடத்தில் இருந்தார்கள்.

அப்துல் காதிர் ஜீலானியின் தந்தை அபூசாலிஹ் மூஸா அவர்களின் வமிசத்தொடர் ஹஸன் ரலி அவர்களுடன் முடிகிற்துஜீலானி ரஹ் அவர்களுக்கும்பாத்திமா ரலி அவர்களுக்குமிடையே 11 தந்தையர் உள்ளனர்.

                                                   ( التاريخ الكبير، تأليفالحافظ الذهبي. )

அவரது தாய் உம்முல்கைர் அவர்களுடைய வமிசம் தொடர் ஹுசைன் ரலி அவர்களுடன் சேருகிறதுஇவ்வாறு தாய் தந்தை இருவரது சங்கிலித்தொடர்பும் பெருமானார் (ஸல்அவர்களுடன் சேருகிறது.
அப்துல் காதிர் ஜீலானியின் குடும்பம் சாலிஹான குடும்பமாக இருந்தது.அவரது தந்தையும் பாட்டனார் அப்துல்லாஹ் பின் யஹ்யாவும் இறைச்சிந்தனையில் முன்னோடிகளாகவும் மக்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருந்தார்கள்அப்துல் காதிர் ஜீலானியின் தந்தையின் சகோதரி ஆயிஷா வை முன் வைத்து மழை வேண்டாப்பட்டால் மழை பொழியும்.
ஆரம்ப கல்வியை தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்து கற்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தன்னுடைய 18 வயதில் மேற்படிப்புக்காக இராக்கிலிருக்கிற பக்தாதுக்கு வந்தார்கள்.
பக்தாதில்  أبو سعيد المُخَرِمي  யின் மதரஸாவில் சேர்ந்தார்அங்கு திறன்மிக்க மாணவராக விளங்கினார்.  இளம் வயதிலேயே இதயங்களுக்குள் ஊடுறுவும் சொற்பொழிவுத்திறமை அவரிடமிருந்தது.
அவருடைய சொற்பொழுவின் ஆகர்ஷனத்தைப் அறிந்த உஸ்தாது أبو سعيد المُخَرِميஅவர்களே தன்னுடைய மானவருக்கு மதரஸாவிலேயே தொடர்ந்து சொற்பொழிவாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்பாபுல் அஸ்ஜ் என்ற இடத்திலிருந்த அந்த மதரஸாவில்  வெள்ளி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் காலையிலும் செவ்வாய்க்கிழமை மாலையிலுமாக வாரத்தில் மூன்று நாட்கள் அன்னாரின் பிரசங்கம் தொடர்ந்ததுஅந்தப் பிரசங்கங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றனபெரிய அளவில் மக்கள் திரண்டனர்பிரமுகர்கள் அமைச்சர்கள் சுல்தான்கள் அக்கூட்டங்களுக்கு வந்தனர்.
அந்தப் பிரசங்கங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையிலும் உள்ளச் சுத்த்தை தூண்டும் வகையிலும் அமைந்தனஅல்லாஹ் அன்னாருக்கு கொடுத்த அந்த மாபெரிய ஆற்றல் மக்கள் இதயங்களை ஊடுறுவிச் சென்றது.
அக்கிரமம் செய்த அதிகாரிகள் மனம் மாறினர்திருடர்களும் குற்றவாளிகளும் மனம் திருந்தினர்சுமார் இலட்சம் தீயோர் மனம் திருந்தினர்சுமார் 50ஆயிரம் பேர் இஸ்லாமை தழுவினர்.
30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட ஜீலானி ரஹ் அவர்கள்
أبو سعيد المُخَرِمي அவர்களின் வபாத்திற்கு பிறகு அந்த மதரஸாவிற்கு பொறுப்பேற்ற ஜீலானி ரஹ் அவர்கள் பொறுப்பேற்ற ஆசிரியப்பணியிலும் பத்வா வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்கள்பல பகுதிகளிலும் வந்து குவிந்த மாணவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசர்கள் பொதுமக்கள் எல்லோருமாக சேர்ந்து அக்கம் பக்கத்து நிலங்களை வாங்கி அந்த மதரஸாவை பொரிது படுத்தினர்.
ஜீலானி ரஹ் அவர்கள் அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார்கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். ஷாபி ஹன்பலி மத்ஹபுகளின் படி அவர் பதவாக்கள் வழங்குவார்அந்த பத்வாக்கள் இராக் அறிஞர்களை ஆச்சரியப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.
பக்தாதிலிருந்து திடீரென் வெளியேறிய ஜீலானி ரஹ் அவர்கள் பல வருடங்கள் இராக்கின் வனாந்தரங்களில் சுற்றினார், இந்த உலகின் ஈடுபாடுகளை விட்டு தனித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செல்லத் தூண்டியது.  பிறகு மக்களின் நிலையையும் தன்னுடைய கடமையையும் உணர்ந்த ஜீலானி ரஹ் அவர்கள் மீண்டும் பக்தாதுக்கு திரும்பி தன்னுடைய பொறுப்பை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
பெருமானார் (ஸல்அவர்களது கனவில் தோன்றி மக்களின் சீர்திருத்தப் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
பணிகள்
அனைத்து வகையான கலைகளையும் ஜீலானி ரஹ் கற்றிருந்த்தனால் அவர்களது சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் அனைவரையும் சென்றடைந்த்து.
அவரது சொற்பொழுவுகள் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன.ஏராளமானோர் நேர்வழி பெற்றனர்.
அவர் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்கள் அரசியல் அரங்கிலும் அறிவியல் துறையிலும் முதன்மையாக இருந்தாலும் உள் நாட்டு நிலவரம் குழப்பமானதாக இருந்த்துமக்களின் ம்னோ நிலையிலும் ஈமானிய நிலைப் பாடு குறைந்து – உலகியல் மோகம் அதிகரித்திருந்த்துபுகழ் ஆடம்பரம் அதிகாரத்தை பெரிதாக கருதும் போக்கு மிகைத்திருந்த்து.
ஜீலானி ரஹ் தன்னுடைய சொற்பொழிவுகள் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்மக்களது சிந்தனையை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்ப்டையான இறைச் சிந்தனையின் பால திருப்புவதில் பெரும் வெற்றி கண்டார்கள்இந்த ஆன்மீக மாற்றத்தை தேடி குதிரைகள் ஒட்டகைகளில் பயணம் செய்து மக்கள் வந்தனர்ஒரு சம்யம அவரது உரையை கேட்க 90ஆயிரம் பேர் பக்தாதில் கூடினர்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிக்ழந்த்தால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.
அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து.
ஒரு நாள் தனது உரையில் அவர் கூறினார் :
أنت معتمد عليك ، وعلي الخلق ، ودنانيرك ودراهمك ، وعلي بيعك وشرئك ، وعلي سلكان بلدك ، كل من إعتمدت عليه فهو إلهك ، وكل من خفته ورجوته فهو إلهك،  كل من رأيته في الضر والنفع ، ولم تر أن الحق يجري ذلك علي يديه قهو إلهك :  الفتح الرباني  - المجلس
நீ உன்னை நம்புகிறாயபடைப்புக்களை நம்புகிறாய்உனது தீனார்களையும்திர்ஹம்களையும் நம்புகிறாய்உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்!உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்யார் மீது நீ பிடிமானம்கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள்யாரை நீ பயப்படுகிறாயோ!ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள்அல்லாஹ் தான்எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார்வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.

ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு நாள் இவ்வாறு கூறினார். . .

                             كل من يري الضرر والنفع من غير الله فليس بعبد له ، هو عبد من رأي ذلك له : الفتح الرباني
அல்லாஹ் அல்லாத மற்ற எதனிடமிருந்து நன்மையும் தீமையும் ஏற்படுகிறது என்று கருதுகிற எவனும் அல்லாஹ்வின் அடிமை அல்ல.அவன் எதை நம்புகிறானோ அதன் அடிமையாவான்.
மற்றொரு நாள் இந்த உலக ஆசையில் திழைப்பதை இப்படி எச்சரித்தார்.
ويحك ! الدنيا في اليد يجوز ، في الجيب يجوز ، إدخارها لسبب وبنية صالحة يجوز ، أما في القلب فلا يجوز. وقوفها علي الباب يجوز ، اما دخولها إلي وراء الباب فلا . و لا كرامت لك . الفتح الرباني  - المجلس 51
உனக்கு நாசமேஇந்த உலகம் உனது கையில் இருக்கட்டும்உனது பையில் இருக்கட்டும்ஒரு தேவைக்காக அல்லது நல்ல நோக்கத்திற்காக அதை சேர்த்து வைத்தாலும் கூடும்ஆனால் இதயத்தில்
இடமளிக்க கூடாதுஅது வீட்டு வாசலில் நிற்கட்டும்அதை தாண்டி வரக்கூடாதுஅப்படி வந்தால் உனக்கு எந்த மரியாதையும் இல்லை.
ஷைக் அவர்களின் இந்த உரை வீச்சுக்கள் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் இப்போது கேட்கிற போது கூட சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றனநேரில் இது எத்தகையை விளைவுக்ளை ஏற்படுத்தியிருக்கும் கற்பனை செய்து பாருங்கள்.
மக்கள் இந்தப் பேச்சுக்கு கூட்டம் கூட்டமாக திரண்டார்கள்அவரது வாயிலிருந்து உதிரும் முத்துக்களுக்காக காத்திருந்தார்கள்திருந்தினார்கள்.திருத்தினார்கள்.
தன்னுடைய உரையில் அரசர்கள் அதிகாரிகளை ஜீலானி விட்டுக் வைக்கவில்லைதவறு எங்கு கண்டாலும் கண்டித்தார்.
ஜீலானி ரஹ் அரசர்கள் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நீதிபதிகளுக்கும்பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொது மேடையில் நன்மையை எடுத்துச்சொல்பவராகவும் தீமையை தடுப்பவராகவும் இருந்தார் என இப்னு கஸீர்(ரஹ்கூறுகிறார்.

ஒரு நாள் தன்னுடையை உரையில் இப்படி கர்ஜித்தார்.
إني أقول لكم الحق ، ولا أخاف منكم ولا أرجوكم ، أنتم واهل الأرض عندي كالبق ، لأني أري  النفع و الضرر من الله – لا منكم . المماليك والملوك عندي سواء (  الفتح الرباني  - المجلس الواحد والخمسون )
நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறேன்நான் உங்களை பயப்படவும்மாட்டேன்உங்களிடமிருப்பதை ஆசைப்படவும் மாட்டேன்நீங்களும் இந்தஉலகில் இருப்பவையும் என்னிட்த்தில் ஒரு கொசுவைப் போலத்தான்.நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன உங்களிடமிருந்துஅல்ல என்றே நான் நம்புகிறேன்மக்களும் மன்னர்களும் என்னிடம் சம்ம்தான்.

அப்பாஸிய கலீபா முக்தபா லி அம்ரில்லாஹ்  المقتفي لأمرالله    இப்னுல் முஜஹ்ஹிம்என்ற அக்கிரமக்கார்ரை நீதிபதியாக நியமித்த போது ஜீலானி ரஹ் அவர்கள்மின்பரின் மீதேறி அறைகூவினார்கள்.

                           وليت غلي المسلمين أظلم الظالمين ، ما جوابك غدا عند رب العالمين ، ارحم الراحمين .
மிக்க் கொடிய அக்கிரமக்காரனை முஸ்லிம்களின் அதிகாரியாக நியமித்துவிட்டாய்நாளை ரப்புல் ஆலமீன் மிக்கருணையாளனான அல்லாஹ்விடம்என்ன பதில் சொல்லப் போகிறாய என்று கேட்டார்கள்.

வர்லாறு சொல்கிறதுஜீலானி (ரஹ்)  அவர்களின் இந்த வாக்கியத்தில் நடுக்கமுற்ற கலீபா அழுதபடியே நீதிபதியை மாற்றினார்.
فارتعد الخليفة وبكي   ، وعزل القاضي المذكور ( قلائد الجواهر )
ஜீலானி ரஹ் அவர்களின் மற்றொரு மகத்தான பணி
ஆன்மீகம் என்ற பெயரில் மார்க்கத்தின் அடிப்படைகளை குழுதோண்டிப்புதைக்கிற பணியை சிலர் செய்து வந்தார்கள் .

அன்னாரின் மற்றுமொரு சிறப்புஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறீ நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப் பட்டது.

அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி
ஒரு நாள் தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார்சீடர்கள் காரணம் விசாரித்தனர்என்னிடம் வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால் என்றான்அவனை விரட்டினேன் என்றார்அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டன்ர்.. ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டதுவேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்.     
சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்)  யிடம் சொன்னான்  இதே போல நாற்பது பேரை ஏமாற்றி யிருக்கிறேன் நிர் மார்க்க ஞானம் பெற்றிருந்த்தால் தப்பித்துவிட்டீர்.

·         قال الإمام ابن حجر العسقلاني : كان الشيخ عبد القادر متمسكاً بقوانين الشريعة, يدعو إليها وينفر عن مخالفتها ويشغل الناس فيها مع تمسكه بالعبادة والمجاهدة ومزج ذلك بمخالطة الشاغل عنها غالبا كالأزواج والأولاد, ومن كان هذا سبيله كان أكمل من غيره لأنها صفة صاحب الشريعة صلى الله علية وسلم   (قلائد الجواهر، ص 23.)


ஜிலானி (ரஹ்அவர்கள் அனைத்து தரீக்கா பிரிவின்ரையும் இணைத்து மாபெரும் மாநாடுகளை நட்த்தி தரீக்கா பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தினார்.அதனால் நக்ஷபந்தி தரீக்காவினர் ஜீலானி (ரஹ்அவர்களை எங்களுடையவும் உங்களுடையவும் ஷைகு என்று அழைப்பதுண்டு.

ஜிலானி ரஹ் அவர்களின் முயற்சியின் விளைவாவாகத்தான் பல தரீக்காகளும் இணைந்த பொதுவான ஷைகுகளும் தரீக்காகளும் உருவாயின.


ஜீலானி ரஹ் அவர்களால் திருந்தியவர்கள் – அவரிடமிருந்து பை அத் பெற்றவர்கள் அன்னாரின் கருத்துக்களை நாடு நகரமெங்கும் எடுத்துச் சென்றார்கள்.
அப்போது பக்தாது முஸ்லிம்களின் தலை நகராக இருந்த்தால் இந்தப் பிரச்சாரம் முஸ்லிம் உலகம் முழுவதற்கும் சென்றது.
இன்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் பெருமை உலகின் நாலாபுறத்திலும் நிலைத்து நிற்பதற்கு அல்லாஹ்வின் பாதையில் பெருமானார் (ஸல்அவர்கள் காட்டிய வழியில் சரியான தீனை கடைபிடிப்பதற்கு அன்னார் வழி காட்டினார் என்பதே காரணமாகும்அவரது உபதேசங்களும் அறிவுரைகளும் இறை நெருக்கத்திற்கு அவர் கற்றுக் கொடுத்த வழிமுறைகளும் மக்களிடம் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தன.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் உபதேசங்களும்வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தானதாக்கத்தை செலுத்தியது என்றால் அதற்கு காரணம அன்னாரின் இறைபக்தியும்உளத்தூயமையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.

கராமத்

உளத்தூயமையும் இறைச்சிந்தனையிலேயே திளைத்திருப்பதும்இறையடியார்களின் இயல்பாகும்இந்த இயல்பின் உச்சத்திலிருந்த் ஜீலானிரஹ் அவர்களிடமிருந்து கராமத்துக்கள் ஏராளமாக வெளிப்பட்டனஇப்னுகய்யூம் அல் ஜவ்ஸீ – வலிமார்களின் அதிக கராமத்துக்களுக்கு சொந்தக்கார்ர்அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்கிறார்.
·         قال الإمام النووي : ما علمنا فيما بلغنا من التفات الناقلين وكرامات الأولياء أكثر مما وصل إلينا من كرامات القطب شيخ بغداد محيي الدين عبد القادر الجيلاني رضي الله عنه,

பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடைய இதயங்களில் என்னஇருக்கிறது என்பதை ஜீலானி ரஹ் அவர்கள் சொல்லிக் காட்டுவதுண்டு.

وقال عمر البزاز : خرجت مع سيدي الشيخ عبد القادر   إلى الجامع يوم الجمعة الخامس عشر من جمادي الاولى سنة 556  هـ فلم يسلم عليه أحد فقلت في نفسي : يا عجباً نحن كل جمعة لا نصل إلى الجامع إلا بمشقة من ازدحام الناس على الشيخ فلم يتم خاطري حتى نظر إلي الشيخ مبتسماً وهرع الناس إلى السلام حتى حالوا بيني وبينه فقلت في نفسي : ذاك الحال خيرٌ من  هـذا الحال فألتفت إلي مسابقاً لخاطري وقال يا عمر أنت الذي أردت  هـذا
உமருல் பஸ்ஸார் சொல்கிறார்நான் ஷைகுடன் 556 வது வருடம் ஜமாதுல்அவ்வல் 15 வெள்ளிக்கிழமை அன்று ஜும்  தொழுகைக்காகபள்ளிவாசலுக்கு சென்றேன்அவருக்கு யாரும் சலாம் சொல்லவில்லைநான்என் மனதுக்குள் பேசிக்கொண்டேன்என்ன ஆச்சரியம்எப்போதும் மக்கள்ஷைகுக்கு சலாம் சொல்ல முண்டியடித்து வருவார்கள்நெருக்கடியில்லாமல்இருக்காதே !
எதேச்சையாக ஷைகை பார்த்தேன் என்னைப் பார்த்து சிரித்தார்கள்அடுத்தகணம் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்எனக்கு அவருக்கும் இடையேஇடைவெளி ஏற்பட்டதுஅப்போது நான் இதற்கு முன் பிருந்த்து  போலவேஇருந்திருக்கலாம் என்று என மனதிற்குள் எண்ணினேன்ஷைகு சொன்னார்கள்உமரேஇதைதானே நீங்கள் விரும்பினீர்கள்.

கராமத்து எனும் அதிசயங்கள் வலி மார்களிடமிருந்து வெளிப்படுவது ச்கஜம்.அது அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கிற சிறப்புநாம் கவனிக்க வேண்டியதுஇறைநேசர்களுடைய வாழ்க்கயை எப்படி இருந்த்து அவர்கள் என்னசொன்னர்ர்கள் என்பதையும் மாகும்.

குடும்ப வாழ்க்கை
ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாத அப்துல் காதிர் ஜீலானி ரஹ்அவர்கள் ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார்கள்திருமணம்பெருமானாரின் சுன்னத்து என்பது அப்போது தான் தீன் பரிபூர்ணத்துவம்அடையும் என்ற பெருமானாரின் அறிவுரையுமே அதற்கு காரணமாகும்நான்கு மனைவியரை திருமணம் செய்த ஜீலானி ரஹ் அவர்களுக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.

40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமானநூற்களை எழுதியுள்ளார்கள்அவர்களுடைய உரைகளும்தொகுக்கப்பட்டுள்ளன.

இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் வபாத்தானார்கள்அன்னாருடை அடக்கஸ்தலம் 

  
·         قال الإمام النووي  وكان جميل الصفات شريف الأخلاق كامل الأدب والمروءة كثير التواضع دائم البشر وافر العلم والعقل شديد الاقتفاء لكلام الشرع وأحكامه معظما لأهل العلم مُكرِّماً لأرباب الدين والسنة, مبغضاً لأهل البدع والأهواء محبا لمريدي الحق مع دوام المجاهد ولزوم المراقبة إلى الموت. وكان له كلام عال في علوم المعارف شديد الغضب إذا انتهكت محارم الله سبحانه وتعالى سخي الكف كريم النفس على أجمل طريقة. وبالجملة لم يكن في زمنه مثله   (قلائد الجواهر

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு