அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, August 27, 2017

சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின் 71 வது சுதந்திர தின விழா !!!

சித்தார் கோட்டை முகம்மதியா மேல் நிலைப்பள்ளிகளின்
 71 வது சுதந்திர தின விழா 15-08-2017 அன்று 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

Sunday, August 20, 2017

ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு


பாதுஷா ஹழ்ரத் குத்புல் அக்தாப் சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியார் ஹழ்ரத் ஸைய்யிதா ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா (சையத் அலி ஃபாத்திமா அம்மா) அவர்களின் சகோதரர், பாதுஷா ஷஹீத் நாயகம் அவர்களின் மைத்துனர் ஹழ்ரத்_ஸையிதினா_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். 

மதீனத்து அரசாட்சியை ஷஹீத் நாயகம் அவர்கள் துறந்து இந்திய பயணம் புறப்பட ஆயத்தமான போது, பாதுஷா நாயகம் அவர்களின் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகளுக்கு காப்பாளராக இருந்து பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன், போருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்று நிறைவேற்றியவர் அவர்களின் மைத்துனரான #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள். 

ஹழ்ரத் #அபூதாஹிர்_மதினி_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தாய்மாமாவான அவர்கள், அனைத்து நிலைகளிளும் துணை நின்றவர்கள் #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். போர் யுக்திகளை அமைப்பதில் முக்கிய தளபதியாக இருந்தார்கள். 6 போர் வரை எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி அவர்களின் படைகளை மாய்த்த ஹழ்ரத் #ஜைனுல்_ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 6-ஆவது போரில் தம் இன்னுயிரை இம்மார்க்கத்திற்காய் தியாகம் செய்து ஷஹீதாக்கப்பட்டார்கள். 

ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் அவர்களின் (ஷஹாதத்) மறைவு, பாதுஷா நாயகம் அவர்களின் படைகளுக்கு மட்டுமன்றி, குடும்பத்தினர், பெண்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. அவர்களின் புனித ரவ்லா ஷரீஃப் #ஏர்வாடி பெரிய தர்கா வை ஒட்டி வலது புறத்தில் அமைந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தர்கா ஷரீஃப் விரிவாக்கம் செய்த போது ஹழ்ரத் ஸையிதினா ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ர் ஷரீஃப் தர்கா வின் தளத்திற்கு உள்ளேயே அமைந்து இருக்கிறது.


 (காண்க படம் : ரவ்லாவின் மேல் பகுதி). 6-ஆவது போரில் ஷஹீத் ஆன பாதுஷா நாயகம் அவர்களின் மைத்துனர் ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் #துல்கஃதா பிறை-6 அன்று #குர்ஆன் கத்தம் தமாம் ஒதி, மௌலீது ஷரீஃப மஜ்லிஸ் நடத்த வேண்டும் என்பது தர்கா #யாத்ரீகர்கள் ன் கோரிக்கையாக உள்ளது.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

ஏர்வாடி தர்ஹா மணலின் சிறப்பு !!!


ஏர்வாடி தர்ஹா மணலில் மன நிம்மதியும், நோய் 
நிவாரணமும் கிடைப்பது ஏன்??. 

மதினாவின் அரசராக இருந்த பாதுஷா சுல்தான்_ஸைய்யிது இப்ராஹீம் ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கனவு உத்தரவுப்படி இந்தியா வந்து, போர் செய்து, இஸ்லாமிய அரசை நிறுவி விட்ட பின் மீண்டும் மதீனா திரும்பி அங்கேயே வஃபாத் ஆக விரும்பிய போது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் கனவில் தோன்றி "மகனே இப்ராஹீமே..! மதீனத்து மண்ணில் அடக்கமாக வேண்டும் என்ற உனது அவா புரிகிறது. ஆனால் உன்னை நான் இந்திய தேசம் அனுப்பியது இஸ்லாமிய அரசாட்சியை நிறுவ மட்டும் அல்ல. தெற்காசியாவில் எனது பிரதிநிதியாக கியாமத் நாள் வரை இருந்து அம்மக்களுக்கு என் புறத்திலிருந்து ரஹ்மத்தை அருள வேண்டும். மதீனாவின் மண்ணில் அடங்கப் பெற வேண்டும் என்கிற உனது அவாவை பூர்த்தி செய்ய, மதீனாவில் இருந்து ஒரு பிடி மணலை எடுத்து, நீ அடங்க இருக்கும் ஏர்வாடியில் ஊதி கலந்து விடு. மதீனத்து மணலில் என்ன பாக்கியம் இருக்கிறதோ அதை அப்படியே ஏர்வாடியின் பூமியில் அடைந்து கொள்வாய். கவலை வேண்டாம் மகனே" என கூறிச் சென்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கூற்றுப்படி ஷஹீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததால் இந்த மண் மதீனாவின் மண் போல இன்றும் திகழ்கிறது. 


தீராத நோய் உடையவர்கள் இந்த மண்ணில் உறங்குவதால் மட்டுமே சுகம் பெற்று செல்கின்றனர். மதீனத்து மண்ணின் கண்ணியத்திற்காக ஜியாரத்திற்கு வருபவர்கள் இன்றும் தர்கா மணல் வளாகத்தில் காலணிகளை கழற்றி கையில் எடுத்து செல்வதை ஏர்வாடியில் மட்டுமே காண முடியும். #Erwadi #Madina #Soil#Ervadi.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

14-08-2017 அன்று #துல்கஃதா பிறை 21. #ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளியில் அடக்கமாகி உள்ள பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனத்து அமைச்சர்கள் ஹழ்ரத் ஸையதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கஜன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு #காதர்_மந்திரி#முஹ்யித்தீன்_மந்திரி தர்கா ஷரீஃபில்,கத்மல் #குர்ஆன்கத்தம் தமாம், #மௌலீது ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது.நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

Friday, August 11, 2017

டாக்டர் அப்துல் ஹக்கீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு

·

ஏர்வாடி யில் #துல்கஃதா ஒரு மாத தொடர் இபாதத்துகளில் நேற்று பிறை 17, #காட்டுபள்ளியில் அடங்கப் பெற்றிருக்கும் #பாதுஷா_நாயகம் அவர்களின் மருத்துவ குழுவின் தலைவர் ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் பாதுஷா ஷஹீது ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் #மௌலீது ஷரீஃப் தினம் ஆகும்.
மதீனா நகரில் இருந்து பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு அனைத்து குழுக்களும் வருகை தந்ததோடு, பிரயாண வழியில் சுகவீனம் ஏற்படுபவர்களுக்காகவும், போரில் காயமடைபவர்களுக்காகவும் மருத்துவம் செய்வதற்காக மருத்துவ குழுக்களையும் அழைத்து வந்தார்கள். ஹழ்ரத் யூசுப் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் முஹம்மது டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ரூம் ஸையத் அஹ்மத் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் சாதிக் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் முஹைதீன் டாக்டர் ஷஹீத், ஆகிய முக்கிய ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு மருத்துவம் செய்வதற்காக ஜெய்லானி டாக்டர், ருகைய்யா அம்மா டாக்டர் ஆகிய பெண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் தலைவராக ஹழ்ரத் அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தலைமை மருத்துவராக இருந்தார்கள். மருத்துவராக மட்டும் அல்லாமல் போரில் பங்கு கொண்டு ஷஹீதாகி இன்றும் உயிரோடு வாழ்ந்து ஷஹீது பாதுஷா நாயகம் அவர்களை நாடி வரும் லட்சோப லட்சம் மக்களுக்கு #ஆன்மீக_மருத்துவம் மூலம் தீராத நோய்களை எல்லாம் ஷிஃபாவாக்கி வருகிறார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் முஸ்லீம்களை வழிகெடுக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன், #ஏர்வாடி யில் மேடை போட்டு ஹக்கீம் டாக்டர் அவர்களை பற்றி விமர்சித்து இறந்தவர் மருத்துவம் செய்கிறாராம்.. இதை நம்பி மக்கள் வருகிறார்களாம்.. நோய்கள் குணமடைகிறதாம் என எகத்தாளமாக பேசி சென்றான். இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரத்தில், #கேரளா மாநிலம் #மலப்புரம் நகரை சேர்ந்த #ஆயிஷா என்ற பெண்மணி மூளையில் கட்டி ஏற்பட்டு பல்வேறு வகையான மருத்துவங்கள் செய்தும் பயனில்லாமல், அறுவை சிகிச்சை செய்தாலும் குணமடைய வாய்ப்பே இல்லை மரணமடைய தான் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மனமுடைந்து ஏர்வாடி தர்கா வந்து ஹக்கீம் டாக்டர் தர்காவிலே தங்கினார். ஒரு நாள் அந்த பெண்மணி யாரோ தன் தலையில் அறுவை சிகிச்சை செய்வது போன்று கனவு கண்டார். காலையில் விழித்து பார்த்த போது தலையில் ரத்தம் தோய்ந்த கட்டுகளுடன் அந்த பெண் இருப்பதை அனைவரும் பார்த்தனர். அந்த பெண் அன்றே முழுமையாக குணமடைந்து சென்றார். ஷுஹதாக்களை அளவுக்கு மீறி விமர்சித்ததால் அவர்கள் காட்டிய வெளிப்படையான #கராமத் என்றே பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அனைத்து நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தர்பாரில் இன்று காலை #ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் #கத்முல்_குர்ஆன் திலாவத் தமாம் செய்து தொடர்ந்து மவ்லீது ஷரீஃப் ஓதி சிறப்பு #துஆ ஓதி நிறைவு செய்யப்பட்டது. 
Moulid at #Ervadi kattupalli Aboobakkar Abdul Hakim Doctor Shaheed Raliyallah anhu dargah shariff.


நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ஏர்வாடி நகரில் நடைபெறும் புனித கொடியேற்றும் நிகழ்வு !!!


ஏர்வாடி நகரில்  நடைபெறும் இந்த புனித கொடியேற்றும் 
நிகழ்வு, புனித மதினாவின் அரசராக இருந்த, ஹழ்ரத் சுல்தான் சையது இப்ராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இஸ்லாமிய மார்கத்தை தென்னிந்தியாவில் நிலை நிறுத்த 1198ஆம் ஆண்டு தமிழகம் வந்து, மார்கத்தை ஏற்க மறுத்த அக்கால பாண்டிய மன்னர்களுடன் போரிட்டு, 10 முறை விடாமல் போர் தொடர்ந்து, அப்போரில் 18 வயதே ஆன தன் ஒரே மகன் மற்றும் முக்கிய பல அமைச்சர்களின் உயிரை அல்லாஹ்விற்காக தியாகம் செய்து, பெரும் சிரமத்தின் முடிவில் அவ்வரசர்களை வெற்றி கொண்டு தமிழகத்தின் முதல் இஸ்லாமிய அரசாட்சியை உருவாக்கி அதன் அரசராக ஷஹீது பாதுஷா நாயகம் அவர்கள் பொறுப்பேற்று, பௌத்திரமாணிக்கபட்டணம் (இன்றைய ஏர்வாடி சுற்று பகுதி) கோட்டையில் பாண்டிய மீன் கொடி இறக்கி, தீன்_கொடி ஏற்றிய 855ஆம் ஆண்டு அடையாளம் ஆகும். தென்னகத்தில் இஸ்லாமிய அரசாங்கம் நிறுவப்பட்டது நமக்கு மகிழ்வான நிகழ்வாகும். அதை நினைவூட்டவே வருடந்தோறும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை விமர்சிக்கும் முர்ததீன்களுக்கு இது கவலைக்குரிய விஷயமாகும்.

பாதுஷா நாயகத்தின் புனித கொடியேற்றம் 2017     

பாதுஷா நாயகத்தின் புனித கொடியேற்றம் புகைப்படம் 2017
நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

சந்தனப்பீர் !!!


சந்தனப்பீர் - பெயர் காரணம். 
ஏர்வாடி ஷரீஃப் காட்டுபள்ளியில் உள்ள சந்தனப்பீர் தர்காவில் அடக்கமாகி உள்ள ஷஹீத் அவர்களின் உண்மையான பெயர் ஹழ்ரத் #ஜுல்ஃபிகார்_அலி ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு.என்பதாகும். #துருக்கி நாட்டைச் சேர்ந்த அவர்கள் துருக்கிய படைக்கு தளபதியாக பாதுஷா நாயகம் அவர்களுடன் சேர்ந்து தமிழக போரில் பங்கெடுத்து உயிர் நீத்தார்கள். 

குளிர் பிரதேசமான துருக்கியிலிருந்து வந்த அவர்கள், தமிழகத்தின் தகிக்கும் வெயிலினால் உடலில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில் அதை சமாளிக்க தினமும் தம் புனித உடல் முழுவதும் சந்தனத்தை அரைத்து பூசிக் கொள்வார்கள். இதன் காரணமாகவே "சந்தனப்பீர்" என பெயர் ஏற்பட்டது. #Ervadi #Erwadi #Kattupalli #Sandappeer #Santhanapeer.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

கணக்கெடுக்கும் மந்திரிகள் தர்கா !!!


#ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளி தெற்கு நுழைவாயில் நேரே உள்ள 
தர்காவில் அடக்கமாகி இருக்கும் (#காதர்_மந்திரி, #முஹைதீன்_
மந்திரி என அழைக்கப்படும்) ஹழ்ரத் ஸையிதினா அப்துல் காதர் 
முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா 
கழன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு ஆகிய 
இருவரும் #பாதுஷா_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
 #மதீனா மாநகரின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருந்த போது 
அவர்களின் அமைச்சரவையில் தலைமை மந்திரிகளாக இருந்தவர்கள். 

பாதுஷாவின் இந்தியப் பயணத்திற்கு உடமைகள், படைகள், 
பொருட்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இறுதி வரை #ஷஹீது_நாயகம் அவர்களுடனேயே பயணித்து, அனைத்து ஏற்பாடு 
பொறுப்புகளையும் நிறைவேற்றியவர்கள். தென்தமிழக போரில், 
முதல் போரில் முதல் நாளில், அமைச்சர்களில் முதலானவராக 
ஷஹாதத் அடைந்து (இன்னுயிர் நீத்து) ஷஹீதானவர்கள் ஹழ்ரத் 
அப்துல் காதர் ஷஹீத் ரலி.. ஆவார்கள். 

முஹைத்தீன் ஷஹீத் அவர்களுக்கு போரில் வயிற்றுப் 
பகுதியில் பெரும் காயம் ஏற்பட்டு குடல் சரிந்த நிலையிலும், 
அதை பொருட்படுத்தாமல் இம்மார்க்கத்திற்காக தொடர்ந்து 
போரிட்டு பாதுஷா வின் காலடியில் ஷஹீதானார்கள். 
ஷஹீதான போருடைய நாள் கணக்கின் படி #துல்கஃதா 
பிறை-1 ல் இங்கு மௌலீது ஷரீஃப் நடைபெற வேண்டும். 
ஆனால் #துல்கஅதா பிறை-1 ல் தலை பிறை #மௌலீது 
ஷரீஃப் நடைபெறுவதால், உரூஸ் நிகழ்வில் கலந்து 
கொள்ள வருகை தரும் அதிகமான யாத்ரீகர்கள் கலந்து 
கொள்ளும் பொருட்டு துல்கஃதா பிறை-21ல் இவர்களின் 
#மவ்லீது ஷரீஃப் நடைபெறுகிறது. ஷஹீது பாதுஷாவின் 
பிரதான அமைச்சர்களான இவ்விரு ஷஹீதுமார்களுடைய 
மக்பராவில் அதிகமான செய்வினை கோளாறுகள் 
நீங்குவதால் இவர்களுடைய #மக்பரா #கணக்கெடுக்கும் 
மந்திரிகள்தர்கா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ஹழ்ரத் முர்ஸல்_இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு !!!


ஹழ்ரத் முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாதுஷா நாயகம் அவர்களின் 10ஆவது தலைமுறை நேரடி பேரர் ஆவார்கள். இவர்களின் மகனார் தான் ஏர்வாடி தர்காவின் மூல முதல் #முஜாவிர் ஆன ஸையிதினா முஹம்மத் இப்ராஹீம் (என்ற) நல்ல_இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். கீழே உள்ள முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் #தர்காஹ் #ஏர்வாடி யில் இருந்து 4 கி.மீ தொலைவில் #கீழக்கரை செல்லும் ECR சாலையில் #தச்சுஊரணி என்ற இடத்தில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் இங்கு மௌலீது ஷரீஃப் ஓதி, வெற்றிக் கொடி ஏற்றப்படும்.
நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு

               
                                 
ஸைய்யிதுல் ஹகீம் அல் ஆரிஃபு பில்லாஹ் அஷ்ஷைகு ஏர்வாடி தர்ஹா ஷரீஃப்,காட்டுப் பள்ளியில்,ஆன்மீக அரசாட்சி புரியும் அமீர் அப்பாஸ் மந்திரி  
நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ரோமாபுரி பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைக்கினங்க இந்திய போருக்காக மதீனாவின் 
அரசாட்சியை விட்டுவிட்டு, மார்க்க பணிக்காக புறப்பட்ட பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அது குறித்து சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி கலந்து கொள்ள வேண்டினார்கள்.

 

ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான் மஹ்மூது பாதுஷா அவர்கள் தம் சார்பாக பிரதம அமைச்சர் அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும் அதிகமான படைவீரர்கள் கொண்ட ஒரு பெரும்படையை அனுப்பி வைத்தார்கள். 


இந்தியா வந்த பின் நடைபெற்ற அனைத்து போர்களிலும், போர் யுக்திகளை அமைப்பதில் அப்பாஸ் நாயகம் பெரும் பங்காற்றி #பாதுஷா_நாயகம் அவர்களுக்கு வலது கரமாக திகழ்ந்தார்கள். 10 பகுதிகளாக நடைபெற்ற போரில், 3ஆவது போரிலயே ஷஹீதாகி தன் உயிரை அல்லாஹ்விற்கு அற்பனித்தார்கள். 


அப்பாஸ் மந்திரி நாயகத்தின் ஷஹாதத், பாதுஷா நாயகத்திற்கு பெரும் இழப்பாக அமைந்தது. அப்பாஸ் நாயகம் ஷஹீதான 3ஆவது போரை நினைவூட்டவே இன்றும் #துல்கஃதா பிறை 3ல் அவர்களின் ரவ்லா ஷரீஃபில் மௌலீது ஷரீஃப் மற்றும் சிறப்பு துஆ நடைபெறுகிறதுஏர்வாடி தர்கா ,காட்டுபள்ளியில் (துல்கஃதா பிறை-3) 27-07 2017 அன்று காலை வஜீருல் அஃலம் அமீர்_அப்பாஸ் மந்திரிஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு மௌலீது ஷரீஃப்.மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக் கிளையினர்கள் 

ஏர்வாடி - பெயர்க்காரணம் !!!


எம்பெருமானாரின் 17ஆவது தலைமுறை திருப்பேரர் ஹழ்ரத் ஸையித்_அஹ்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், அன்னை ஃபாத்திமா_Bபர்கா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் மூத்த மகனாராக, எம்பெருமானார் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் 18ஆவது தலைமுறை பேரராக பாதுஷா ஹழ்ரத் குத்பு சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த ஊர் மதீனா மாநகரில் உள்ள ஏர்பாத் என்னும் பகுதியாகும். 


பிற்காலத்தில் தென்தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சி பொறுப்பை ஏற்ற பாதுஷா ஷஹீது நாயகம் அவர்கள் #பௌத்திரமாணிக்கபட்டணம் என்ற இவ்வூரை மதீனாவில் தாம் பிறந்த ஊரின் நினைவாக "ஏர்பாத்" என்று பெயரிட்டார்கள். அதுவே தமிழில் மறுவி இன்றளவும் ஏர்வாடி என்ற 
சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.

நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Sunday, August 6, 2017

மஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 51வது நினைவு நாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!


                                         முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

                                                 இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 
மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் 
அவர்களின் 51ம் ஆண்டு நினைவு நாள் விழா 
18.7.2017 அன்று பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, 
முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், 
வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் 
முன்னிலையில் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு 
மஜ்லிஸும் அதனை தொடர்ந்து யாஸீன் 
ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.


இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை , 
அழகன் குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார் கோட்டை, 
உச்சிப்புளி, இராமநாத புரம், மற்றும் பல்வேறு 
ஊர்களிலிருந்தும் மகான் பாபாவின் நேசர்கள் 
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் 
மகான்பாபாவின் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு