டாக்டர் அப்துல் ஹக்கீம் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு

·

ஏர்வாடி யில் #துல்கஃதா ஒரு மாத தொடர் இபாதத்துகளில் நேற்று பிறை 17, #காட்டுபள்ளியில் அடங்கப் பெற்றிருக்கும் #பாதுஷா_நாயகம் அவர்களின் மருத்துவ குழுவின் தலைவர் ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் பாதுஷா ஷஹீது ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் #மௌலீது ஷரீஃப் தினம் ஆகும்.




மதீனா நகரில் இருந்து பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு அனைத்து குழுக்களும் வருகை தந்ததோடு, பிரயாண வழியில் சுகவீனம் ஏற்படுபவர்களுக்காகவும், போரில் காயமடைபவர்களுக்காகவும் மருத்துவம் செய்வதற்காக மருத்துவ குழுக்களையும் அழைத்து வந்தார்கள். ஹழ்ரத் யூசுப் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் முஹம்மது டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ரூம் ஸையத் அஹ்மத் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் ஜாஃபர் சாதிக் டாக்டர் ஷஹீத், ஹழ்ரத் முஹைதீன் டாக்டர் ஷஹீத், ஆகிய முக்கிய ஆண் மருத்துவர்களும், பெண்களுக்கு மருத்துவம் செய்வதற்காக ஜெய்லானி டாக்டர், ருகைய்யா அம்மா டாக்டர் ஆகிய பெண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் தலைவராக ஹழ்ரத் அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தலைமை மருத்துவராக இருந்தார்கள். 



மருத்துவராக மட்டும் அல்லாமல் போரில் பங்கு கொண்டு ஷஹீதாகி இன்றும் உயிரோடு வாழ்ந்து ஷஹீது பாதுஷா நாயகம் அவர்களை நாடி வரும் லட்சோப லட்சம் மக்களுக்கு #ஆன்மீக_மருத்துவம் மூலம் தீராத நோய்களை எல்லாம் ஷிஃபாவாக்கி வருகிறார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம், கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் முஸ்லீம்களை வழிகெடுக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன், #ஏர்வாடி யில் மேடை போட்டு ஹக்கீம் டாக்டர் அவர்களை பற்றி விமர்சித்து இறந்தவர் மருத்துவம் செய்கிறாராம்.. இதை நம்பி மக்கள் வருகிறார்களாம்.. நோய்கள் குணமடைகிறதாம் என எகத்தாளமாக பேசி சென்றான். இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரத்தில், #கேரளா மாநிலம் #மலப்புரம் நகரை சேர்ந்த #ஆயிஷா என்ற பெண்மணி மூளையில் கட்டி ஏற்பட்டு பல்வேறு வகையான மருத்துவங்கள் செய்தும் பயனில்லாமல், அறுவை சிகிச்சை செய்தாலும் குணமடைய வாய்ப்பே இல்லை மரணமடைய தான் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மனமுடைந்து ஏர்வாடி தர்கா வந்து ஹக்கீம் டாக்டர் தர்காவிலே தங்கினார். ஒரு நாள் அந்த பெண்மணி யாரோ தன் தலையில் அறுவை சிகிச்சை செய்வது போன்று கனவு கண்டார். காலையில் விழித்து பார்த்த போது தலையில் ரத்தம் தோய்ந்த கட்டுகளுடன் அந்த பெண் இருப்பதை அனைவரும் பார்த்தனர். அந்த பெண் அன்றே முழுமையாக குணமடைந்து சென்றார். ஷுஹதாக்களை அளவுக்கு மீறி விமர்சித்ததால் அவர்கள் காட்டிய வெளிப்படையான #கராமத் என்றே பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அனைத்து நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.



இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸையிதினா அபூபக்கர் அப்துல் ஹக்கீம் டாக்டர் ஷஹீத் தர்பாரில் இன்று காலை #ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் #கத்முல்_குர்ஆன் திலாவத் தமாம் செய்து தொடர்ந்து மவ்லீது ஷரீஃப் ஓதி சிறப்பு #துஆ ஓதி நிறைவு செய்யப்பட்டது. 
Moulid at #Ervadi kattupalli Aboobakkar Abdul Hakim Doctor Shaheed Raliyallah anhu dargah shariff.


நன்றி
Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai, 
Tamil Nadu, India.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு