ஈகை திருநாள் வாழ்த்துக்கள்
பிஸ்மிஹி தஆலா உண்ணாமல் பருகாமல் உடலிச்சை கொள்ளாமல் உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும் எண்ணாமல் , இடறாமல் , ஏற்றவழி விலகாமல் இயல்பினிலே நன்மைகளை, இலங்க வைத்த ரமளானே நன்னாள்கள் உன்னாள்கள், நானிலத்தின் பெருநாள்கள் நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள் என்னாளும் உன் பயிற்ச்சி எமை நடத்திச் செல்வதற்கே இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை பண்பற்ற செயலில்லை;பாவமில்லை; பேதமில்லை மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள் மெய்புலனில் மனநலனில் மான்புடனே மாற்றங்கள் உய்வுற்று வாழுவதற்கே ஓரிறையின் ஓர் பரிசாய் உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே வையத்துல் வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர் வரத்தை வானத்தின் மீதிருந்து வழங்கி விட்டாய் நன்றிகளே இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப்பூ மணக்கும் இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம் இறைவனுக்கே தலை த...