சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில் '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். '' யா அல்லாஹ்.'' '' யா ரஹ்மான்,'' '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் தி...