ஹிஜ்ரி சகாப்தம் 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண...