பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார்கோட்டை,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி,சித்தார்கோட்டை பாத்திமா பீவி பெண்கள் அரபுக் கல்லூரி,மற்றும் தொண்டி,அஜ்ஹாரிய்யா அரபுக் கல்லூரி ஆகியவைகளின் முன்னால் முதல்வரும்,மதுரை ஓத்தகடை நாஃபிஉல் உலூம் மத்ரஸா உஸ்தாத், வானவியல் வல்லுநர் அல்ஃபலக்கி, கட்டுமாவடி,மௌலானா மௌலவி M.K.M.கதீப் ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பயீ அவர்கள்,29/03/2015 அன்று காலை 12 மணி அளவில், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கி...