Posts

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா

Image
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு  பெருவிழா மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும், இவ்வாண்டு பட்டம் பெறும் இளம் மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும், இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவர்களையும்,  மன்பயீ ஆலிம்.காம். இணையதளத்தினர்   வரவேற்று, வாழ்த்தி அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம் வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு பெருவிழா !!!

Image
மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும், இவ்வாண்டு பட்டம் பெறும் இளம் மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும், இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர், மற்றும் மலேசியக் கிளையினர் வரவேற்று, வாழ்த்தி அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம் வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

வாழூரில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (16-05-2015) சனிக்கிழமை பின்னேரம், ஞாயிறு இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்,வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில், வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசல், தலைமை இமாம் மௌலானா மௌலவி முஹம்மது ஆரிஃப் கான் நூரி நிஜாமி  அவர்கள் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள், மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் லட்சக்கணக்கான பாக்கியவான்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்..

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு