Posts

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 48 வது நினைவு தினம்

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து  '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை  பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 48 வது நினைவு தினம். இன்ஷா அல்லாஹ் இன்று 29-09-2015 செவ்வாய்க் கிழமை  மஃரிப் தொழுகைக்குப்பின்,சித்தார் கோட்டை  சின்னப் பள்ளிவாசலில்,  பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி, கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றது. இறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்யதார்கள். .  இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.  வஸ்ஸலாம். அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்  அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி ) வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.  ...

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும்  அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath  blogspot.com .

மௌலானா மௌலவி மர்ஹும் A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின்,அக்கா A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  மௌலானா மௌலவி மர்ஹும்  A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில்  மன்பயீ  ஹஜ்ரத் அவர்களின்,அக்காவும்,ஜனாப்,  அ.முஹம்மது அலி அவர்களின் மனைவியுமான, A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள்,03-08-2015 அன்று  மலேசியாவில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல்  பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ்  மர்ஹூம் ஆயிஷா சித்தீக்கா அவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,  குற்றங்களை  மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும்  சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின்   பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா'  எனும் அழகிய பொறுமையை தந்தருள,  உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்   துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.  வஸ்ஸலாம்... வெளியீடு ;- குடும்பத்தார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு