Posts

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!

Image
பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ   மு தஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா !!! அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து  '' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம்  ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில், சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.                           ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு  குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும், மலை பைத்துகளும்,ஓதப்பட்டு, உலக  மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும்  சிறப்பு துஆச்செய்யப்பட்டது. .'' சூஃபி ஹழரத் '' என்றும் ''  சேது நாட்டின் தீன் முத்து ''  என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய  ஆ...

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!

Image
'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து  என்றும்  புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர்  அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள்  இராமநாதபுரம் மாவட்டம்  சித்தார் கோட்டையில்  கி.பி.1882 ல் பிறந்தார்கள். தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே  வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா )  அனுப்பி  வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில்  விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம்  சாஹிபின் ஆதரவில், அதிராம்பட்டணம்  சென்று  மார்க்க கல்வி பயின்றார்கள். பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில்  ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு, அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம்  பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக்  கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள். அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்  '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற  பெயருடன்  ஒரு கல்விக்கூடத்தை  நிர்மாணித்து  மார்க்கப் பணிபுரிந்து வந்தனர். ...

சித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி இன்று ஊர் திரும்பினார்கள் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!! அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா  அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில்  மன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016  இன்று தன்னுடைய 20 வது  புனித ஹஜ்ஜை நிறைவேற்றி  ஊர்வந்த அவர்கள், இன்று காலை  சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு  பயான்  செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி  அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்  ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு  இன்னும்  பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை  வழங்குவானாக ஆமீன். நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர். வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம்  மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு