இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. பத்ர் தளம் சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது. முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு....