இஃதிகாஃபில் பேண வேண்டிய ஒழுங்குகள் !!!
பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187) · தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள். அதை நான் வாருவேன். இஃதிகாஃப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029) இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். மூன்று வகை இஃதிகாஃப்: 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்] 2, சுன்னத் [ரமளான் கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3, நஃபில் الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ ...