புனித நிறைந்த ரமலான் மாதம் !!!
அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக் கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புன...